சாலை நெரிசலில்
நனைந்து,
சேறு வீசிய வாகனத்தைச்
சாபமிட்டு,
சாலை நீரில்
அசுத்தமாகி,
'மழையும் மண்ணாங்கட்டியும்' என
எரிச்சல்பட்டு,
ஒரு வழியாய் வீடு சேர்ந்து
தலை துவட்டி
உடை மாற்றி…
தேனீரும் கையுமாய்
சன்னலோரத்தில் நிற்கையில்
அழகாய் தெரிந்தது
மழை.










