புறம் புறக்கணிக்கப்படுகிறது

ஒரு முறை
வீட்டில் அமர்ந்து
தோழிகளோடு
பேசிக் கொண்டிருந்தாள்
ஆக்னஸ்

அதில் ஒரு தோழி
அங்கில்லாத ஒருத்தியைப் பற்றி
அவதூறை
அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

தாய் சென்று
அறையில் எரிந்துகொண்டிருந்த
விளக்கை அணைத்தாள்.

ஆக்னஸ் வியந்தாள்.
எரியும் விளக்கை
ஏனம்மா அணைக்கிறீர்கள் ?

மின்சாரத்தை
மிச்சப்படுத்தவா ?
௾ல்லை
எங்களைக் கொச்சைப்படுத்தவா ?

புறணி பேசும் இடத்தில்
வெளிச்சம் எதற்கு ?
குருட்டுச் செயல்களுக்கு
இருட்டே வெளிச்சம்
தாய் பதிலுரைத்தாள்.

ஆக்னஸின் பஞ்சு நெஞ்சம்
பற்றிக் கொண்டது.
இன்னொரு செய்தியைக்
கற்றுக் கொண்டது. 

< தொடரும்…>

மறுமொழியொன்றை வழங்குக