ஐந்தறிவு பயமறியாது

 

.

கர்ப்பக் கிரகத்துக்குள்
சுற்றி வருகின்றன
சாதி வேறுபாடற்ற
சிலந்திகள்.

பூட்டிய கோயிலுக்குள்ளும்
புகுந்து விடுகின்றன
தயக்கமற்ற
தானிய எறும்புகள்.

குருக்களின்
குருதியையும் குடிக்கின்றன
தீண்டாமை துகிலுரித்த
கொசுக்கள்

ஐயப்பன் சந்நிதிக்கு
மேலேயும்
பதட்டமின்றி பறக்கின்றன
சில
பெண் புறாக்கள்.
.

5 மறுமொழிகள்

  1. உதயச்செல்வி சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2006 இல் 6:32 பிற்பகல்

    அட்டகாசம் நண்பரே!
    சும்மா நச்சுன்னு இருக்கு!

  2. CAPitalZ சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2006 இல் 12:37 மு.பகல்

    சாதியை வளர்ப்பதே அரசாங்கம் தானே.
    பிறகு மக்களை குறை கூறி என்ன பயன்.

  3. கலை அரசன் சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2006 இல் 3:07 மு.பகல்

    சூப்பரா இருக்கு.

  4. இன்பா சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2006 இல் 11:43 மு.பகல்

    அருமையான கவிதை …

  5. anand சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2006 இல் 6:02 பிற்பகல்

    Excellent stuff….eppadi ippadi?


மறுமொழியொன்றை வழங்குக