( பாடல் போல ஒரு கவிதை.. அல்லது கவிதை போல ஒரு பாடல்..)

பூவைத் தீண்டும் தென்றல் போலே
என்னைத் தீண்டினாய் – நான்
தீயைத் தீண்டும் காலம் வேண்டும்
என்றா வேண்டினாய் ?
காதல் என்னும் சுவாசக் காற்றை
நீதான் ஊற்றினாய் – பின்
மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை
ஏனோ மாற்றினாய்
.
ஃ
வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
உன்னைக் காண்கிறேன் – நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
பூக்கக் காண்கிறேன்.
சொட்டுச் சொட்டாய் எந்தன் ரத்தம்
கொட்டக் காண்கிறேன் – நீ
விட்டுச் செல்லச் செல்லக் காதல்
வற்றக் காண்கிறேன்
.
ஃ
.
உதயம் வானில் சிரிக்கும் முன்னே
உன்னைத் தேடுவேன் – பின்
இரவுப் பொழுது முடிந்த பின்னும்
உன்னால் வாடுவேன்.
இதயம் துவைத்து காதல் இருத்தி
தினமும் நாடினேன் – நீ
புதையல் கிடந்த இடத்தை நோக்கி
பயணம் மாற்றினாய்
ஃ
உள்ளம் முழுதும் வெள்ளம் போலே
காதல் வந்ததடி – பின்
கள்ளம் எல்லாம் உள்ளம் விட்டு
எங்கோ சென்றதடி.
வெள்ளை மனதில் உன்னை வைத்தேன்
முள்ளாய் கொல்லுதடி – உன்
பிள்ளைப் பாதம் தீண்டா நெஞ்சம்
உள்ளே வேகுதடி.
ஃ
தீயாய் எரிந்த என்னை நீராய்
நீதான் மாற்றினாய் – பின்
நீயாய் ஏனோ என்னை விட்டு
பாதை மாற்றினாய்.
தேயா நிலவாய் நீயே வந்தாய்
வானாய் மாறினேன் – எனை
தேயச் சொல்லி வானம் விட்டு
மாயம் ஆகிறாய்.
.
ஃ
முத்தம் மட்டும் கன்னம் தொட்டால்
காதல் வாழுமா – நான்
நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்
போதல் நியாயமா ?
சித்தம் கொண்டு என்னைத் தீண்டு
பாவம் நானம்மா – ஓர்
யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல்
சாபம் ஏனம்மா ?










கலை அரசன் சொன்னது,
ஆகஸ்ட் 22, 2006 இல் 12:20 மு.பகல்
அருமை. ராகத்தோடு பாடவும் நன்றாக இருக்கின்றது.
my enemy சொன்னது,
ஜூலை 20, 2007 இல் 12:34 பிற்பகல்
ur a person i evevr ever hurt in my life,becuz ur the person i loved mostly,but wn you hurt so much,and and killed my feelings and my love forever…….pls i will be more happier if u dont think of me any more..i dont like to be urs annnnnnnnnnnnny more,,pls pls pls pls pls pls leve me forever.