காக்கைச் சிறகினிலே….

 

.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
என
நெக்குருகிப் பாடுகிறாய்
கருப்பென்று என்னை
நிராகரித்துப் போன
அதே நாவுடன்.

 எல்லோரும்
காதலை வெளிக்காட்டி இருந்தால்
உனக்கான
பட்டியல்
எத்தனை பெரிதாயிருக்கும் ?

இப்போதெல்லாம்
கொலை செய்துவிட்டுக் கூட
சாரி சொல்லிக்
கடந்து போகலாம்.

அவளைப் போல.

உன்னுடைய
சிரிப்புகளையெல்லாம் சேமித்து
அழியாத குடுவையில்
அடைத்து
ஆழமாய் புதைக்க வேண்டும்.

எதிர்கால சந்ததிக்கும்
ஏதேனும்
புதையல் வேண்டுமல்லவா.

இறுக்கிப் பிடித்த
ஜீன்ஸும்,
இளமை பிரச்சாரமான
டி-சர்ட்ம் அணிந்து
கலவர வேர்களை
எனக்குள் படரவிட்டுக்
கடந்து போன அவள்
புள்ளியாய் மறைந்தபின்
போலியாய் சொன்னேன்

இந்தக் காலத்து பிள்ளைங்க…

11 மறுமொழிகள்

  1. karthick சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 5:18 பிற்பகல்

    chanceless ..wishes for u..

  2. Azad சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 6:36 பிற்பகல்

    புதிய வீச்சு சேவியர்ஜி.

    அன்புடன்
    ஆசாத்

  3. Bala சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 7:40 பிற்பகல்

    Xavier means “Ethartham”….All your kavithais remember the incidents in my life especially “Irukki piditha Jeans ….”

  4. Muthu சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 7:42 பிற்பகல்

    Nice one Xavier.

  5. Janaki சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 7:48 பிற்பகல்

    Kalakaringa Xavier, romba romba iyalbana kavithai, illa nijamana varthai!! “எல்லோரும்
    காதலை வெளிக்காட்டி இருந்தால்
    உனக்கான
    பட்டியல்
    எத்தனை பெரிதாயிருக்கும் ?
    ” kadhaloda azham evalavu perusunnu ellaroda karpanaike vitrukinga!!

    Fantastic!

  6. Arun சொன்னது,

    ஆகஸ்ட் 23, 2006 இல் 8:07 பிற்பகல்

    Lovely… Lively…

    As others told… Yet another yethathamana… beauty from Xavier

    Again a special hats off to the picture selection… “ethir kala sandhathikku puthayal serkkum” picture mattum… It could have been a one with some more smile…

  7. ஆகஸ்ட் 23, 2006 இல் 9:31 பிற்பகல்

    ஐந்துமே அருமை!

  8. Prakash சொன்னது,

    ஆகஸ்ட் 24, 2006 இல் 2:05 மு.பகல்

    இப்போதெல்லாம்
    கொலை செய்துவிட்டுக் கூட
    சாரி சொல்லிக்
    கடந்து போகலாம்.

    அவளைப் போல.

    arumai Xavier…

  9. Prakash சொன்னது,

    ஆகஸ்ட் 24, 2006 இல் 2:08 மு.பகல்

    இப்போதெல்லாம்
    கொலை செய்துவிட்டுக் கூட
    சாரி சொல்லிக்
    கடந்து போகலாம்.

    அவளைப் போல.

    arumai Xavier..

  10. karthiga சொன்னது,

    ஆகஸ்ட் 29, 2006 இல் 2:10 மு.பகல்

    IPPOTHU KATHAL SEITHU VIDU ETHO ACCIENT. APPADI NINNACHCHKO
    ENRU KODA KATRIL ORU VARTHATHAIYAI VILUNTHA NINNAIVU VARUKINRA
    THU.

  11. சென்ஷி சொன்னது,

    ஜனவரி 31, 2007 இல் 6:18 பிற்பகல்

    அசத்திட்டீங்க சார். இப்பவே உங்களை நேர்ல பாக்கணும் போல இருக்கு. பிரமாதம்..அனைத்துக் கவிதைகளும்… டைம் இல்லாததால google reader ல போட்டு வச்சு படிச்சுட்டு இருக்கேன். முழுசா படிச்சதும்தான் பதில் போடணும்னு நினைச்சேன். இப்படி நடுநடுவுல பதில் எழுத வச்சிடுறீங்க

    //இப்போதெல்லாம்
    கொலை செய்துவிட்டுக் கூட
    சாரி சொல்லிக்
    கடந்து போகலாம்.

    அவளைப் போல.//

    இது உண்மையில் மனசை பாதித்து விட்டது.

    சென்ஷி


மறுமொழியொன்றை வழங்குக