
மீண்டும்
ஊருக்குத் திரும்புதல்
உன்னதமானது.
ஏதேதோ
எதிர்பார்ப்புகள்
இமை தொற்றிக் கொள்ள,
அர்த்தமற்றதென்றும்
அவசியமற்றதென்றும்
கருதப்பட்டவை எல்லாம்
வரவேற்கக் காத்திருப்பதாய்
உள்மனப் பட்சி
இடைவிடாமல் கத்தும்.
கதறக் கதறப்
பலாத்காரம் செய்யும்
பகல் வெயில் கூட
பரவாயில்லை.
வரவுக்காய் காத்திருக்க
ஓர்
மழலைப் புன்னகை உண்டெனில்
ஊரடைதல் என்பது
மீட்படைதல்.
உயிர்ப்பின் மீது
நம்பிக்கை இருப்பவர்களுக்கு
மரணம் என்பது
தற்காலிகப் பிரிவு.
சேர்வோம்
என்னும் நம்பிக்கை
இருப்பவர்களுக்கு
பிரிவு என்பது
தற்காலிக மரணம்.









நிர்மல் சொன்னது,
செப்டம்பர் 1, 2006 இல் 7:06 பிற்பகல்
மணி மணியான வார்த்தைகள்
Janaki சொன்னது,
செப்டம்பர் 1, 2006 இல் 7:25 பிற்பகல்
“சேர்வோம்
என்னும் நம்பிக்கை
இருப்பவர்களுக்கு
பிரிவு என்பது
தற்காலிக மரணம்” Migavum arumai. Niraya arthangalai ithil kanamudigarathu: Pirivu enbathu Maranathukku nigaranathu, Pirivin iruthiyil Serkai enbathu Jananathai pondru unnathamanathu, pirivin thuyaram thargaligamanathu,innum ethanayo….Romba romba alagana oru kavithai….Uravugalai vittu thaniye pirinthu irupavargal kandippaga anantha kanner than viduvargal ithai padithal!! Vazhthugal Xavier!
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
செப்டம்பர் 1, 2006 இல் 9:03 பிற்பகல்
//வரவுக்காய் காத்திருக்க
ஓர்
மழலைப் புன்னகை உண்டெனில்
ஊரடைதல் என்பது
மீட்படைதல்.// –
உண்மை தான். எக்காகவே எழுதினீர்ரளோ இந்த வரிகளை என எண்ணத்தோன்றுகிறது. எங்கள் வீட்டின் புது வரவான என் மருமகனை பார்க்கச்செல்கின்றேன்.
Arun சொன்னது,
செப்டம்பர் 4, 2006 இல் 12:30 பிற்பகல்
Excellent Kavidhai… But your trademark photo is not really matching here… A flight that is landing could have been a better choice..
and one more..
Varavukkay kaththirukka oru mazhalai punnagai undenil… – I feel like you are restricting it to a Child…
May be…
Varavai virumbi
vazhi Male vizhi vaiththu
vanjayodu katti kolla oru
nenjam undenil
ooradaithal enbathu
meetpadaithal