ஒரு மழைத்துளி நனைகிறது…

.
இதோ கார்மேகத்தின் ஓரம் கிழிய
விழுந்துகொண்டிருக்கிறேன்
பூமித்தாயின்
புன்னகை முகம் நோக்கி….

நான் எங்கே விழுவது ?

அதோ அங்கே
காகிதக் கப்பலோடுக் காத்திருக்கும்
அந்த ஹைக்கூக் கவிதையின்
முதலெழுத்தாகவா ?

வற்றிக்கொண்டிருக்கும் அந்த
வைகையாற்றின்
வயிற்றுப் பகுதியிலா?

ஒற்றைக்காலோடு பூமியைப்
பற்றிக்கொண்டிருக்கும்
பச்சைப் புற்களின்
புன்னகைப் பற்களிலா ?

சட சடச் சங்கீத்தை
எனக்குள்
சுடச் சுடச் திணிக்கும்
இலைகளின் தலைகளிலா ?

வற்றாக்கடலின் ஓரத்தில்
ஒற்றைப்பாறையின் பல்லிடுக்கில்
சிங்கார வாய்திறந்து காத்திருக்கும்
அந்த சின்ன சிப்பியின் தாகத்திலா ?

இதழ்களின் இடைவெளியிலும்
கவிதை எழுதிக் காத்திருக்கும்
அந்த
வாசனைப் பூக்களின்
மகரந்த மடியினிலா ?

மரங்களும் மலைகளும்
மேகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்
அந்த
கானக சாலையிலா ?

விழிகள் விரிய விரியத் தேடுகிறேன்…
எனில் நனையக்காத்திருக்கும்
பூமியில் விழுந்து
நான் நனைய வேண்டும்

தயவுசெய்துக் காட்டுங்கள்
வயலுக்குள் உயிரைநட்டு
உயிருக்குள்
என் வருகக்குக் காத்திருக்கும்
ஓர் விவசாயி நண்பனை …

- ‘ஒரு மழை இரவும் ஓராயிரம் ஈசல்களும்’ நூலிலிருந்து

10 மறுமொழிகள்

  1. Prasanna R சொன்னது,

    ஜனவரி 10, 2007 இல் 8:25 பிற்பகல்

    Arumai, mazahi thuliyin thedal vetri petradhaa? Ethanai mazahaithuligal veengaiyado, vivasayin kannerai thudaithadho. Uyir ottamudaya varigal.

    வற்றிக்கொண்டிருக்கும் அந்த
    வைகையாற்றின்
    வயிற்றுப் பகுதியிலா?

    Nadhi vatri vittadhae, mazhai marumurai uyirpikkumo? Suttru suzhalai katti irukkum vidham arumai Xavi.

  2. Ram's சொன்னது,

    ஜூலை 12, 2007 இல் 1:33 பிற்பகல்

    இதழ்களின் இடைவெளியிலும்
    கவிதை எழுதிக் காத்திருக்கும்
    அந்த
    வாசனைப் பூக்களின்
    மகரந்த மடியினிலா ?

    intha varigal migavum arumai.because magarantham irrukkum vidham nanragavea solli ulleer.
    By ramasamy D.T.Ed., B.Lit.,M.A.,

  3. Balasubramanian சொன்னது,

    பெப்ரவரி 27, 2008 இல் 2:19 பிற்பகல்

    good pulavarey ;-)

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 27, 2008 இல் 5:22 பிற்பகல்

    நன்றி சார் ;)

  5. இளங்கோவன் சொன்னது,

    ஜனவரி 12, 2009 இல் 7:47 பிற்பகல்

    அன்பின் சேவியர், எங்கள் ஆசான் புகாரியின் வரிகளை வாசிக்கையில் என் மனம் துள்ளியது… அன்புடன் குழுமத்தில் உங்கள் படைப்புகள் ஏதாவது வந்துள்ளதா? நான் மூன்று வருடங்களாக ஆசான் புகாரியின் அன்புடன் குழுமத்தில் உறுப்பினராக் உள்ளேன். வாழ்த்துக்கள் சேவியர். அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  6. சேவியர் சொன்னது,

    ஜனவரி 13, 2009 இல் 6:40 பிற்பகல்

    புகாரி எனது சகோதரர்…

    அன்புடன் குழுமத்தின் நான் இல்லை நண்பரே….

  7. Mahes சொன்னது,

    ஏப்ரல் 11, 2009 இல் 9:52 மு.பகல்

    Malai tuligalukku manam thantha kavinyare…
    Malaiyin manathirkul ippadiyum aasaigala…viyakkiren thanggal kavithaiyai vaasithu…. kavinyaruku nandriyudan yen valtugal…

    Intha agapakkatthai arumugam seitha yen nanban Amjadkum nandri…

  8. இரா.இளங்கீரன் சொன்னது,

    ஏப்ரல் 12, 2009 இல் 1:55 பிற்பகல்

    மாசடைந்த இந்த பூமியில் அந்த மழைத்துளி
    விழுந்து வீ ணாக வேண்டாம்.
    அது அங்கேயே இருக்கட்டும்.
    மனிதர்கள் திருந்தும் வரை.

  9. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 4:42 மு.பகல்

    /மாசடைந்த இந்த பூமியில் அந்த மழைத்துளி
    விழுந்து வீ ணாக வேண்டாம்.
    அது அங்கேயே இருக்கட்டும்.
    மனிதர்கள் திருந்தும் வரை.//

    கவிதைக்குக் கவிதைப் பதில் :) நன்றி நண்பரே.

  10. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 24, 2009 இல் 4:47 மு.பகல்

    /Malai tuligalukku manam thantha kavinyare…
    Malaiyin manathirkul ippadiyum aasaigala…viyakkiren thanggal kavithaiyai vaasithu…. kavinyaruku nandriyudan yen valtugal…

    Intha agapakkatthai arumugam seitha yen nanban Amjadkum nandri…

    //

    சூப்பர் மகேஷ். :)


மறுமொழியொன்றை வழங்குக