காதலையும் நேரத்தையும்
வைத்து
நிறையவே கவிதைகள்.
எனக்கு
அதற்குக் கூட நேரமில்லை.
உன்னைச் சந்தித்தபின்.

நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.

ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.

நிமிட நேரம் தான்
உன்னைப் பார்த்தேன்
இப்போது
நிமிட நேரமும் விடாமல்
நினைத்துத் தொலைக்கிறேன்.

.
பூவா தலையா
கேட்கிறாய்
நீ.
காசு
என்கிறேன் நான்.
.

அழகானதை சொல்
எனும் போது
ஏன் தான் உன்னை
நினைத்துத் தொலைக்கிறேனோ ?
உன்னை
நினைத்தபின்
எப்போது தான்
சொற்கள் வந்திருக்கின்றன ?
.

உனக்குப் பிடிக்காததை
செய்யும் போது
உனக்குப் பிடிக்காதே என்றும்,
உனக்குப் பிடித்ததைச்
செய்யும் போது
உனக்கும் பிடிக்குமே என்றும்,
எஞ்சியவற்றை
செய்யும் போது
உனக்குப் பிடிக்குமோ என்றும்….
நீ சார்ந்த எண்ணங்கள் மட்டுமே
நீள்கின்றன.
இது
உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ?
.

ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.
.

நீ
வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும் என்பதாலேயே
நீ
அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்.
.

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.
.

உன்னை மனதில் நினைத்து
எதிர் வீட்டுக் குழந்தைக்கு
அழுத்தமாய்
தருகிறேன் முத்தம்.
நீ
ஏதேனும்
குழந்தையை நினைத்தாவது
எனக்கொன்று
கொடுத்து விட்டுப் போயேன்.
.

உங்களைப் போல
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா
என்ன அழகான கவிதை !!!
ஃ
நில், நிதானி, காதலி – கவிதை நூலிலிருந்து











viji சொன்னது,
ஜனவரி 10, 2007 இல் 6:59 பிற்பகல்
Nalla erukkunu oru vaarthai sonna pothathu.eda rasikka pothathu oru naal.ennidam vaarthai ellai,elzthiya kaigalukkum ,yositha manathirkkum aayiram aayiram valzthukkal.simply outstanding….melum ungal pani thodara enn valzthukkal matrum prathanaigal.wish youu all success althrough your life.
Anbudan,
Viji.
Prasanna R சொன்னது,
ஜனவரி 10, 2007 இல் 8:01 பிற்பகல்
Xavi,
Arumaiya varigal, ethanaiyoo arthangal kadalai prathibalithu.
“நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.”
Idhu kathaliyin kadhalai lateaagae purindhu kondae kadhalanudayadhu, ethanai unnmai.
Arumayanadhu idhu
“ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.”
Chanceless really superb. Kadhal tharum amaidhiyai kuruvadhu pinnvarum vaira varigal.
“எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.”
Ungal padaippukal melum valara vaazthukkal. Ungalin varikalukku vanakkangal.
janaki சொன்னது,
ஜனவரி 10, 2007 இல் 8:02 பிற்பகல்
Thirumba thirumba padichalum salikatha varthaigal…..alagana karpanai….avasthayana nijangal…romba romba arumayaga irukirathu…..kathal kavithaigal endrume thanithuvathai ilapathillai…
அருட்பெருங்கோ சொன்னது,
ஜனவரி 10, 2007 இல் 8:19 பிற்பகல்
அனைத்தையும் ரசித்தேன். இந்த இரண்டை அதிகம் ரசித்தேன்.
/ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை./
/பூவா தலையா
கேட்கிறாய்
நீ.
காசு
என்கிறேன் நான்./
Sugumar சொன்னது,
ஜனவரி 11, 2007 இல் 12:45 மு.பகல்
arumaiyana Kavithai. Simple and yet thoughtful. ethanai naal aaghivithadu ithai pol oru nalla Kadhal Kavithaiyai padithu…
veerakumar சொன்னது,
ஜனவரி 11, 2007 இல் 12:09 பிற்பகல்
பூவா தலையா
கேட்கிறாய்
நீ.
காசு
என்கிறேன் நான்
- these lines are metaphorical… selection of words is very accurate…a nice piece of work i have read in the recent past…congratulations!
bharathi சொன்னது,
ஜனவரி 12, 2007 இல் 12:03 மு.பகல்
உங்களைப் போல
எனக்கு
கவிதை எழுதத் தெரியாது…
காற்றில் கேசம் மெலிதாய் புரள
தலையை அசைத்துப்
புன்னகைக்கிறாய்…
அடடா
என்ன அழகான கவிதை
arumai ya na varigal….valuthukal ungal kavithaikum kathulukum
senshe சொன்னது,
ஜனவரி 17, 2007 இல் 6:50 பிற்பகல்
பின்றீங்க சார்
நவீன் சொன்னது,
பெப்ரவரி 23, 2007 இல் 2:26 பிற்பகல்
//ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.//
அமைதியான
அமைதியின்மை
அவளாலே !!!
மிகவும் ரசித்தேன் !! வாழ்த்துக்கள் !
LP சொன்னது,
மார்ச் 9, 2007 இல் 1:38 பிற்பகல்
kavithai
surya சொன்னது,
ஏப்ரல் 25, 2007 இல் 11:18 மு.பகல்
“ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை.”
“எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்.
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்.”
romba nalla irukku
all ur writings are really superbbbb
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 25, 2007 இல் 1:36 பிற்பகல்
மிக்க நன்றி நண்பர்களே.. உங்கள் மனம் திறந்த வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும்..
S.M.PushpaMary சொன்னது,
ஜூன் 5, 2007 இல் 2:07 பிற்பகல்
ஏதோ ஓர்
அதிகாலை அமைதியில்
உன்னை கண்டேன்.
அன்றிலிருந்து
அதிகாலை
அமைதியாயில்லை
Endha varigal kaadhalin nijathai yaduthuraikiradhu.
Vaigai Tamil சொன்னது,
ஜூன் 6, 2007 இல் 1:36 பிற்பகல்
Superb………
Kathalin Vali Arinthavar Neengal………..
Ikkavithaiy……. Yositthu Eluthiyath Alla……
Swasitthu Ezhuthiyathu……… enbathu ovvoru variyilum therihirathu……..
Vazhtthukkal….kodi…………..
K.S.P.RAJESH FROM CHENNAI சொன்னது,
ஜூன் 30, 2007 இல் 10:48 மு.பகல்
for all are great poems. i never seen in my life.
“vuerukku vuer koduthathu
poie ie meiyakkie
ulagukku vuerkodukkirathu
kavitahi
senthil சொன்னது,
செப்டம்பர் 21, 2007 இல் 3:33 பிற்பகல்
kavithai romba nalla iruku
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 22, 2007 இல் 7:45 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே
Manokar சொன்னது,
செப்டம்பர் 25, 2007 இல் 10:13 பிற்பகல்
Hai , Pls sent love msg . . . .
Raja சொன்னது,
அக்டோபர் 28, 2007 இல் 12:07 பிற்பகல்
Athanai kavithaigalum arumai nanba
Unnal Kathalin tharkaliga pirivai ezhutha mudiyuma?
சேவியர் சொன்னது,
அக்டோபர் 29, 2007 இல் 7:05 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள்.
dvidhii சொன்னது,
மார்ச் 3, 2008 இல் 8:46 மு.பகல்
alaga irruku sir intha kavithai. ennaku ena varthai sollanu theriyala really super..
சேவியர் சொன்னது,
மார்ச் 3, 2008 இல் 9:47 மு.பகல்
நன்றி.. நன்றி.. அடிக்கடி வாங்க, கருத்துக்களைத் தாங்க.
sethu சொன்னது,
மார்ச் 4, 2008 இல் 8:47 பிற்பகல்
anaithum nanraga irukkirathu…
சேவியர் சொன்னது,
மார்ச் 5, 2008 இல் 1:32 பிற்பகல்
நன்றி … நன்றி…
karthikeyan சொன்னது,
ஜூலை 25, 2008 இல் 4:06 பிற்பகல்
kavithaikal superp
சேவியர் சொன்னது,
ஜூலை 25, 2008 இல் 5:25 பிற்பகல்
நன்றி:)
வேலு சொன்னது,
ஜூலை 26, 2008 இல் 8:13 பிற்பகல்
நான் ரசித்த முதல் கவிதைச் சாலை… முற்றிலும் அருமை…
சேவியர் சொன்னது,
ஜூலை 28, 2008 இல் 10:21 மு.பகல்
நன்றி வேலு, உங்கள் வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும். தொடர்ந்து வாருங்கள்.
karthick சொன்னது,
செப்டம்பர் 17, 2008 இல் 2:33 பிற்பகல்
//
நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்.
//
Ennudaiya unarvugalin ezhuthu uruvam….
Unaradha kadhalin
Uyri vali…..
Arumaiyaana varigal nanbare…..
Karthick
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 18, 2008 இல் 7:33 பிற்பகல்
பின்னூட்டத்தையே கவிதையாக சொல்கிறீர்கள் கார்த்திக்
நன்றிகள் பல.
பாலமுருகன்.. சொன்னது,
செப்டம்பர் 30, 2008 இல் 1:58 பிற்பகல்
சேவியர், ஒரே ஒரு வரிதான்..
அடடா
என்ன அழகான கவிதை !!!
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 30, 2008 இல் 4:48 பிற்பகல்
நன்றி பாலமுருகன்
rara சொன்னது,
அக்டோபர் 29, 2008 இல் 11:24 பிற்பகல்
simply Superb.
சேவியர் சொன்னது,
நவம்பர் 9, 2008 இல் 12:13 பிற்பகல்
நன்றி ராரா.
shantha சொன்னது,
நவம்பர் 14, 2008 இல் 10:47 பிற்பகல்
என்னால் முடியவில்லையென்றாலும்
நொடியேனும் ஒரு முறைப்பு,
சும்மாவேனும் ஒரு கோபம்,
பொய்க்காவது ஒரு சண்டை,
நீயாவது போட்டுக்கொள்ளேன்
இப்படியும் கொஞ்சம்
வாழலாம்தானே….
Priya சொன்னது,
டிசம்பர் 20, 2008 இல் 10:04 பிற்பகல்
Please write a NEW KAVITHAI for me to say SUPER to you …..