
கிடைப்பதைக்
கரைந்தழைத்து
பகிர்ந்தளித்து உண்ணும்
காகம்
எரியும் வீட்டிலும்
உருவும் நிலை பார்க்கும்
மனிதன்.
பார்ப்பதை
ஊர்ந்து கொண்டே
ஊருக்குரைத்து உண்ணும்
எறும்பு
சுனாமிப் பிணங்களிலும்
சங்கிலி பறிக்கும்
மனிதன்.
சுயநலச்
சுருக்குப் பைகள்
இடையில் கட்டிக் கொள்ளாமல்
விலங்குகள்.
சுருக்குப் பைகளுக்கு
இடையே
கூடு கட்டிக் குடியிருக்கும்
மனிதன்
சுருங்கக் கூறின்,
ஐந்தறிவுகளுக்கு
எல்லாமே பொதுவுடமை
ஆறறிவுகளுக்கு
பொதுவுடமையும் தனியுடமை









karthi சொன்னது,
பெப்ரவரி 23, 2007 இல் 12:06 பிற்பகல்
சுருங்கக் கூறின்,
ஐந்தறிவுகளுக்கு
எல்லாமே பொதுவுடமை
ஆறறிவுகளுக்கு
பொதுவுடமையும் தனியுடமை
//
great sir ..
நவீன் சொன்னது,
பெப்ரவரி 23, 2007 இல் 1:54 பிற்பகல்
//ஆறறிவுகளுக்கு
பொதுவுடமையும் தனியுடமை//
நறுக்குத்தெறித்தது போல் அழகாக!! ஆழமாக !! நன்று சேவியர் !