மெளனம் தின்னும்
மண்புழுக்கள்
கொல்லைப்புற
தண்ணீர்ப் பானையின் அடியில்
தவம் கிடக்கும்.
வடகிழக்கு மூலையில்
வாழை மர அடியிலும்
அரையடி ஆழத்தில்
உயிர் வேர்களாய்
இவை உலவித் திரியும்.
உயிரை உயிரால்
பிடிப்பதற்கு
தூண்டில் தூக்கு மேடையேறி
மீன்களுக்கு உணவாகி
உணவுக்கு மீன்களைத் தரும்.
மண் புழுக்கள்
என்
கிராமத்து மண்ணின் அடையாளம்
நகர்ப்புற
புழுதி வீட்டின்
இரண்டடி நீள முற்றத்தில்
காய்ந்து போய்
தலை சாய்க்கின்றன தாவரங்கள்.
தகவல் அறிந்தவர்கள்
சொல்கிறார்கள்
மண்புழு வளர்க்க.
மனிதர்கள் வளராத
நகரத்தில்
மண்புழுக்கள் வளருமா ?










ஜி சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 1:08 மு.பகல்
அருமை….
காலில் மிதிப்பட்ட போதும்
மையத்தில் வராத
மண் புழுக்களுக்கே
ஓர் கவிதையா???
சூப்பர்….
Xavier சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 10:01 மு.பகல்
// நன்றி ஜி
//
karthi சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 11:25 மு.பகல்
மனிதர்கள் வளராத
நகரத்தில்
மண்புழுக்கள் வளருமா ?
//
touching line ..sir ippolam free a ? kalkala niraya posts podureenga
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 11:28 மு.பகல்
//touching line ..sir ippolam free a ? kalkala niraya posts podureenga//
மெதுவா சொல்லுங்க கார்த்தி… வேலைல இருந்து பிரிச்சு விட்டுடப் போறாங்க
சேதுக்கரசி சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 12:21 பிற்பகல்
//உயிரை உயிரால்
பிடிப்பதற்கு
தூண்டில் தூக்கு மேடையேறி//
கவித்துவம் நிறைந்த அருமையான வரிகள்!
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 1:42 பிற்பகல்
//கவித்துவம் நிறைந்த அருமையான வரிகள்//
மிக்க நன்றி தோழி..
)
sreedhar d சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 5:52 பிற்பகல்
உயிரை உயிரால்
பிடிப்பதற்கு
தூண்டில் தூக்கு மேடையேறி
மீன்களுக்கு உணவாகி
உணவுக்கு மீன்களைத் தரும்.
really super….
sreedhar
Arun சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 6:07 பிற்பகல்
Wow… Nice one… I was complaining that you were away from kavitha for sometime. What a way to make a come back !!!
அருட்பெருங்கோ சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 6:49 பிற்பகல்
/மனிதர்கள் வளராத
நகரத்தில்
மண்புழுக்கள் வளருமா ?/
அருமை!!!
வாழ்த்துக்கள்!!!
Adiya சொன்னது,
மார்ச் 6, 2007 இல் 2:50 மு.பகல்
ஒரு கிராமத்தை, இயற்கைய சுவாசிக்கும் ஒரு கவிஞனை பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் !!
சேவியர் சொன்னது,
மார்ச் 6, 2007 இல் 10:01 மு.பகல்
மிக்க நன்றி ! உங்கள் கருத்துக்களுக்கு !