குழந்தை
சரியாக உண்ணவில்லையென
மருத்துவரிடம்
டானிக் வாங்குபவர்களின்
காதில் விழுவதில்லை
ஒட்டிய வயிறுடன்
வீறிடும் குழந்தைகளின் குரல்
![]()
கைக் குழந்தையைத்
தூக்கிக் கொண்டு
கண்ணீரும் கம்பலையுமாய்
‘தாய்வீடு’ ஓடும் தாய்
உணர வைக்கிறாள்
ஆணாதிக்கத்தின் உச்சத்தை
![]()
பேருந்தில் ஏறி
சில்லறையில்லாமல் இறங்கும்
முதியவரை
இருப்பது போதாதென்று
நிராகரித்து நகரும்
நகரத்து ஆட்டோ க்கள்
![]()
என்
கார் கண்ணாடியில்
எழுதிச் செல்லும்
விரல்களை
எரிச்சலில் திட்டிக் கொண்டிருந்தேன்
என் மகளின்
மழலை விரல்கள்
கிறுக்கத் துவங்கும் வரை
![]()
எப்போதேனும் சண்டை
போடும்
நகரத்துத் தம்பதியருக்கு
விவாகரத்து
விருப்பமாயிருக்கிறது.
எப்போதுமே சண்டை
போடும்
கிராமத்துக் குடும்பத்துக்கு
சேர்ந்து வாழ்தலே
சந்தோசமாய் இருக்கிறது
-









பிரியா சொன்னது,
மார்ச் 1, 2007 இல் 10:48 மு.பகல்
ஒவ்வொரு
ச்று கவிதையும்
ஒரு பெரிய
கருத்தை
சொன்னது . .. .
நல்ல
கவிதைகள் . . .
வாழ்த்துக்கள் .. .
சேவியர் சொன்னது,
மார்ச் 1, 2007 இல் 1:37 பிற்பகல்
/\
நன்றி பிரியா
santhosh சொன்னது,
ஜனவரி 11, 2009 இல் 8:28 மு.பகல்
ithu oru kavidhai mattum alla vaazhkaiyil sirappaga seyal paduthdhum oru nerimuraiyaaga irukkirathu indha siru kavidhai. very nice
SANTHOSH (pennagaram) சொன்னது,
ஜனவரி 11, 2009 இல் 8:34 மு.பகல்
nagara vaazhkaiyil sandai vandhal pirindhu viduvaargal,
kiramathdhail sandai vandhal meendum onru seruvaargal ennum karuthdhu inraiya kaala kattathdhil irukkumaanaal athu aachsariyam than Sir.
சேவியர் சொன்னது,
ஜனவரி 12, 2009 இல் 7:28 பிற்பகல்
//மிக்க நன்றி சந்தோஷ்//