நினைவுகளிலிருந்து முளைத்தவை

sweet.jpg

.

தலைமுறையாய் தீக்குளித்த
மண்சட்டியில்
எஞ்சியிருக்கும் மீன்குழம்பை
பெருவிரலால்
வழித்துத் தின்னும் சுகம்
அபாரமானது.

சிரட்டையில்
சுட்ட வத்தல் மிளகாயை
புளி உப்புடன்
அம்மா பிசைந்து தருவதை
மரச்சீனி துண்டுடன்
கடித்துத் தின்பது ரம்மியமானதெனில்,

சுட்ட கருவாட்டை
இடதுகையில் பிடித்துக் கொண்டே
பழைய கஞ்சி
உண்ணும் சுவையோ உன்னதமானது.

இந்தக் கவிதை
வாசித்து முகம் சுளிக்கும்
என் மகளின்
கான்வண்ட் கைகளிலிருக்கிறது
காட்பரீஸ்

2 மறுமொழிகள்

  1. Adiya சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 2:45 மு.பகல்

    ///தலைமுறையாய் தீக்குளித்த
    மண்சட்டியில்
    எஞ்சியிருக்கும் மீன்குழம்பை
    பெருவிரலால்
    வழித்துத் தின்னும் சுகம்
    அபாரமானது.
    //
    Super inga..

    nice twist in the last.

  2. சேவியர் சொன்னது,

    மார்ச் 6, 2007 இல் 9:56 மு.பகல்

    // நன்றி நண்பரே //


மறுமொழியொன்றை வழங்குக