இறுக்கிப் பிடிக்கும்
ஜீன்ஸ்கள் நிறைந்திருக்கும்
அழகுப் பெண்ணின்
அலமாரியிலும்
காத்திருக்கின்றன பட்டுப்புடவைகள்
ஏதேனும்
திருமண வைபவங்களுக்காய்.
தாரத்தின் தாலி
வெள்ளரிக்காயாய் கூடைகளில்
தரமில்லை என்று சொல்லி
பேரம் பேசும்
உதடுகளில்
கசிகின்றன
மனிதாபிமானம் செத்த வாடை.
யாரையேனும் காயப்படுத்தாமல்
கடந்து போவதில்லை
ஒரு தினம்,
தெரியாமலேனும்
மிதி பட்டு விடுகிறது
சாலையோரச் சிற்றெறும்பு.
போர்கள்
புற்று நோய்கள்.
வெட்டி எறியுமிடம்
இரத்தக் குளம்,
மிச்ச இடம் நோக்கி நகரும்
யுத்தக் களம்.
எது இல்லாமல் வாழ முடியுமோ
அது
இல்லாமல் வாழ்
என்று சொல்வார் அப்பா…
கையில்
காசு இல்லாமல் வாழ்ந்ததால்.
ஒடு மீன் ஓட
உறுமீனுக்காய் காத்திருந்த
கொக்கு
இப்போது
ஓடு மீன் தேடி
தண்ணீருக்காய் தவமிருக்கிறது
வற்றிய ஆற்றின்
வயிற்றில் இருந்து கொண்டு















nalayiny சொன்னது,
மார்ச் 12, 2007 இல் 2:27 பிற்பகல்
ஓ..! தொலைத்த புத்தகம் ஒன்று கைக்கு கிடைத்த சந்தோசம்.
கோவி.கண்ணன் சொன்னது,
மார்ச் 12, 2007 இல் 3:32 பிற்பகல்
நல்ல கவிதைகள் ! சுட்டு உணர்த்துகிறது
A.V.JAWAKAR சொன்னது,
மார்ச் 12, 2007 இல் 4:04 பிற்பகல்
Engal appa sonnathai ungal appavum sonnara ? Kaiyil kasillatha appakkalukku panchamillai !
DesiPundit » Archives » சும்மா நச்சுன்னு இருக்கு… சொன்னது,
மார்ச் 13, 2007 இல் 11:27 பிற்பகல்
[...] இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ்கள் நிறைந்திருக்கும் அழகுப் பெண்ணின் அலமாரியிலும் காத்திருக்கின்றன பட்டுப்புடவைகள் ஏதேனும் திருமண வைபவங்களுக்காய்சாம்பிள் தான் முழுவதும் இங்கே… [...]
Dubukku சொன்னது,
மார்ச் 13, 2007 இல் 11:27 பிற்பகல்
தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/03/13/kavithai/
காட்டாறு சொன்னது,
மார்ச் 25, 2007 இல் 5:07 மு.பகல்
அருமையிலும் அருமை உங்களின் கீழ்கண்ட வரிகள்
//எது இல்லாமல் வாழ முடியுமோ
அது
இல்லாமல் வாழ்
என்று சொல்வார் அப்பா…
கையில்
காசு இல்லாமல் வாழ்ந்ததால்
//
uthayathevan சொன்னது,
அக்டோபர் 1, 2007 இல் 1:37 பிற்பகல்
யாரையேனும் காயப்படுத்தாமல்
கடந்து போவதில்லை
ஒரு தினம்,
தெரியாமலேனும்
மிதி பட்டு விடுகிறது
சாலையோரச் சிற்றெறும்பு.
uthayathevan சொன்னது,
அக்டோபர் 1, 2007 இல் 1:39 பிற்பகல்
நல்ல கவிதைகள் கிடைத்த சந்தோசம்.! நன்றி.