
தொலை தூர
நட்சத்திரங்களின் புன்னகையாய்
எனக்குள்
உன் நினைவுகளின் மின்னல்.
காரிருள் போர்வைக்குள்
துயிலும்
கனவுகளின் போர்வாளாய்
காதல் சொட்டச் சொட்ட
விழித்துக் கிடக்கின்றன விழிகள்.
உன்
ஓசையின் கைப்பிடிச்சுவரை
எட்டிப் பிடிக்கும் ஆசையில்
எனக்குள்
ஏக்கங்களின்
குதிரைக் குளம்படிகள்.
பாய்ந்து பற்றும்
பதற்றம் சூழ் நிமிடங்களிலெல்லாம்
என்
கைகளுக்குள் நழுவுகின்றன
நீ
உடுத்தி நடக்கும் மெளனம்.
என்னைக் காதலிப்பதாய்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
நான்
காதலிப்பதாய்
புரிந்து கொண்டாயெனில் போதும்.
உன்
சம்மதத்தை
கவிதையாய் வடிக்க வேண்டாம்
ஒரு
முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே
போதும்









நவீன்ப்ரகாஷ் சொன்னது,
ஏப்ரல் 3, 2007 இல் 9:55 பிற்பகல்
//உன்
சம்மதத்தை
கவிதையாய் வடிக்க வேண்டாம்
ஒரு
முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே
போதும்//
அட இப்படியும் சம்மதிக்கலாமா?? அழகான கவிதை சேவியுஅர் வழக்கம் போல !!:)))
bashakavithaigal சொன்னது,
ஏப்ரல் 5, 2007 இல் 10:28 மு.பகல்
Very romantic!!!!! Superb poem.
congrats
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 5, 2007 இல் 3:58 பிற்பகல்
//அட இப்படியும் சம்மதிக்கலாமா?? அழகான கவிதை சேவியுஅர் வழக்கம் போல !!:)))
//
மிக்க நன்றி நவீன்
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 5, 2007 இல் 3:58 பிற்பகல்
//Very romantic!!!!! Superb poem.
congrats//
மிக்க நன்றி நண்பரே
சேதுக்கரசி சொன்னது,
ஏப்ரல் 26, 2007 இல் 6:52 மு.பகல்
அழகான முத்தாய்ப்பு வரிகள்.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 26, 2007 இல் 10:46 மு.பகல்
மிக்க நன்றி தோழி…