
மேகத்தின் தோளிலிருந்து
பூமிக்குப் பூணூலால்
விழுந்த மழை,
வெள்ளமாய் வடிவெடுத்து
அக்கிரகாரத்துப் பாத்திரங்களையும்
ஒதுக்கப்பட்டப் பாத்திரங்களையும்
ஒரே உயரத்தில்
மிதக்க வைத்துச் சிரித்தது
பரம்பரைக் கூண்டுக் கிளி
வியந்தது
வெளியேயும் பறக்குமா
கிளிகள் ?
சாலையோர
மரங்களை
வெட்டிச் செல்லுங்கள் கவலையில்லை
அதன்
நிழலையாவது
விட்டுச் செல்லுங்கள் !
பாரம் தூக்கும் பாமரனுக்காய்.
மின்னஞ்சல்
காதல்
பலவற்றை இழந்திருக்கிறது
காதலி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதங்கள் உட்பட

இந்தியாவின்
எதிர்காலம் இளைஞர்களிடமாம்..
அது சரி
இளைஞர்களில் எதிர்காலம் ?
ஃ












pandian சொன்னது,
மே 4, 2007 இல் 3:04 பிற்பகல்
iam pandian pls contact-9941175876.
Raji சொன்னது,
மே 4, 2007 இல் 3:04 பிற்பகல்
As usual very nice…
ரத்தன் சொன்னது,
மே 5, 2007 இல் 2:29 மு.பகல்
சேவியர், அது
“இளைஞர்களின் எதிர்காலம்?” தானே?
yaalakththiyan சொன்னது,
மே 5, 2007 இல் 2:31 பிற்பகல்
nice nice
சேவியர் சொன்னது,
மே 5, 2007 இல் 6:44 பிற்பகல்
//சேவியர், அது
“இளைஞர்களின் எதிர்காலம்?” தானே//
ஆமாம்
பிழை எழுதுவதே என் பொழப்பா போச்சு
சேவியர் சொன்னது,
மே 5, 2007 இல் 6:44 பிற்பகல்
//iam pandian pls contact-9941175876.//
நன்றி… தொடர்பு கொள்கிறேன்… விரைவில்.
vijay சொன்னது,
மே 14, 2007 இல் 12:44 பிற்பகல்
//மின்னஞ்சல்
காதல்
பலவற்றை இழந்திருக்கிறது
காதலி
எச்சில் தொட்டு ஒட்டிய
கடிதங்கள் உட்பட//
Excellent boss….
சேவியர் சொன்னது,
மே 15, 2007 இல் 12:04 பிற்பகல்
நன்றி விஜய்