நிர்வாண நிஜங்கள்

ear.jpg

குளியலறையின்
நிர்வாண நிஜங்கள்
வரவேற்பறைகளில் வந்தமர்வதில்லை.

உடைகள் மாற்றி
தலைமுடி சீவி
வரவேற்பறை நுழையுமுன்
அவசரமாய் துழாவி
இதழ்களில் மாட்டும்
போலித்தனப் புன்னகை சிரிக்கிறது.

கண்ணியப் பார்வைகளும்
பெண்ணியப் பேச்சுகளுமாய்
நீளும்
உரையாடல்களினூடாக
மனதுக்குள் விரியும்
படுக்கையறைக் காட்சிகளை
வரவேற்பறைகள் மொழி பெயர்ப்பதில்லை.

கை குலுக்கல்களிலும்
நட்புச் சிலிர்ப்புகளிலும்
சுவாரஸ்யச் சங்கல்பங்களிலும்
உள்ளுக்குள்
உடைந்து தெறிக்கும்
கொட்டாவி சத்தமிடாமல் சிரிக்கும்.

மீண்டும் சந்திப்போம் என்று
கைகுலுக்கி விடைபெறுகையில்
காதை மட்டும்
மறந்து வைத்துவிட்டுப் போக முடிந்தால்
தரிசிக்கலாம்
தூய்மையான நேசத்தின்
துகிலுரியப்பட்ட உண்மைகளை

6 மறுமொழிகள்

  1. ஆகஸ்ட் 19, 2007 இல் 9:06 மு.பகல்

    நிஜங்ளின் வேர்கள்
    பொய்களின் பூக்கள் விரிப்பில்
    எப்போதுமே மறைக்கப்படுகின்றது.

    வாழ்த்தக்கள் சேவியர்.

    நம்ம பக்கத்துக்கு வந்துட்டு போறது….

  2. Lakshmanaraja சொன்னது,

    ஆகஸ்ட் 19, 2007 இல் 8:17 பிற்பகல்

    //கண்ணியப் பார்வைகளும்
    பெண்ணியப் பேச்சுகளுமாய்
    நீளும்
    உரையாடல்களினூடாக
    மனதுக்குள் விரியும்
    படுக்கையறைக் காட்சிகளை
    வரவேற்பறைகள் மொழி பெயர்ப்பதில்லை.//

    மிக உண்மை. வாழ்த்துக்கள்.

  3. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2007 இல் 10:29 பிற்பகல்

    நன்றி கலை.

  4. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 20, 2007 இல் 10:29 பிற்பகல்

    நன்றி லக்ஷ்மணராஜா

  5. ஆகஸ்ட் 22, 2007 இல் 2:21 பிற்பகல்

    உண்மை,

    //மீண்டும் சந்திப்போம் என்று
    கைகுலுக்கி விடைபெறுகையில்
    காதை மட்டும்
    மறந்து வைத்துவிட்டுப் போக முடிந்தால்
    தரிசிக்கலாம்
    தூய்மையான நேசத்தின்
    துகிலுரியப்பட்ட உண்மைகளை//

    பளீர் என்று அறைந்தது போல் இருந்தது முடிவு.எங்கே செல்லும் இந்தப் பாதை?

  6. butterflysurya சொன்னது,

    ஆகஸ்ட் 22, 2007 இல் 2:52 பிற்பகல்

    சும்மா நச்…

    வாழ்த்துக்கள்..

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com


மறுமொழியொன்றை வழங்குக