
உசிலம்பட்டியின்
குடிசைக்குள்
வீறிட்டழும் பெண்குழந்தையின்
அழுகுரல் அடக்க,
அவசரப்பட்டு
ஒடித்து வந்த கள்ளிச்செடியின்
தடித்த உடலில்
கசிந்து கொண்டிருந்தது
பால் மணம் வீசும்
ஓர்
காதல் ஜோடியின் பெயர்.
கடற்கரை மணலில்
மெய்யுரசி
உள்ளங்கையில்
உலகப்படம் வரையும்
காதலர்கள்
வறுத்தெடுக்கும் மதிய வேளையில்
கேட்கிறார்கள்
இன்று ஏன் வெயிலே இல்லை ?
ஒற்றைப் பறவையின்
சோகப் பாடல்,
நிசப்தம் துளைக்கும்
ஒற்றை நாயின்
ஏகாந்தக் குரைப்பு
கண் சிமிட்டிக் கதை பேசும்
நட்சத்திரங்கள்
என
நான் கவிதைகளில் சொன்ன
எதுவும் நிகழவில்லை
நீ
உண்மையிலேயே விலகிய
அந்த நாள் இரவில்











Prasanna R சொன்னது,
செப்டம்பர் 12, 2007 இல் 12:00 பிற்பகல்
1st and 3rd good, edarthathai pakkuvamagae kattuvadhil neer sura puli thalaivaa, vaazzthukkal.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 13, 2007 இல் 10:53 பிற்பகல்
நன்றி நண்பா…