திருநங்கையர்
நெருங்கி வருகையில்
விரைவிலேயே துரத்திவிட
விரல்களின்
முளைக்கின்றன காசுகள்.
நிறுத்தத்தின்
ஏற்றப்பட்ட கார் கண்ணாடிகள்
பரட்டைத் தலை
சிறுவர்களால்
அழுக்காகாமல் தடுக்க
அவசரச் சில்லறைகள்.
தொட்டு விடுவார்களோ
எனும்
திடுக்கிடலின் விளைவாக
தொழுநோயாளிகளுக்கு
ஓரிரு ரூபாய்கள்.
மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்










மாசிலா சொன்னது,
செப்டம்பர் 24, 2007 இல் 11:24 பிற்பகல்
சபாஷ் சேவியர்.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
படிக்கிறவங்களுக்கு சவுக்கடி கொடுத்தது போல இருக்கு.
உண்மைன்னா சுடத்தானே செய்யும்.
மனதில் தங்கிய கவிதை வரிகள்.
இன்றைய மனிதர்களின் வெளி வேசங்கள், ஆடம்பரங்கள், பகட்டுகள் அனைத்தையும் போட்டு உடைத்திருக்கீங்க.
மீண்டும் சபாஷ்!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
bashakavithaigal சொன்னது,
செப்டம்பர் 25, 2007 இல் 9:00 மு.பகல்
manitha neyam illangeruthu pitcha podra aaluku mattuma illa ivangala intha nilamaila vaithurukra societykum sethaaa????
பாண்டித்துரை சொன்னது,
செப்டம்பர் 25, 2007 இல் 1:18 பிற்பகல்
///மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்
///////
பொதுவாக இரண்டு விதான பேர்தான் இருக்கிறார்கள். இப்ப எல்லாம் யார் சார் பிச்சை போடுகிறார்கள்.
ஜான் பீ. பெனடிக்ட் சொன்னது,
நவம்பர் 7, 2007 இல் 11:47 பிற்பகல்
நான் உங்களது இந்தக் கவிதையை கீற்று இதழில் பார்த்தபோது, நீங்கள் இவ்வளவு பெரிய கவியாக இருப்பீர்கள் என்று சற்றும் எண்ணவில்லை. உங்கள் வலைதளத்திற்கு வந்து பார்த்தால்தான், அடடா நீங்கள் எவ்ளோவ்வ்வ்வ்வ் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்ன்னு தெரியுது. அசந்து போயிட்டேன். ரொம்ப பெருமையாகவும் இருக்கு. கலக்குங்கள்
kalyanakamala சொன்னது,
நவம்பர் 12, 2007 இல் 2:13 பிற்பகல்
பிச்சை போட வேன்டாம் என்கிறிர்களா?அதிலும் பார்வை எங்களுக்கு கோணலாகத்தான் இருக்கும் என்றால் என்ன செய்வது? பிச்சைக்காரர்களை பிச்சை எடுக்காமல் இருக்க ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லி discourage செய்தால் நல்லாயிருக்கும்.
சேவியர் சொன்னது,
நவம்பர் 13, 2007 இல் 10:31 மு.பகல்
கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே. மிகவும் தாமதமாக நன்றி சொல்வதற்கு ஒரு மன்னிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்