தந்தையின் நினைவாக…

appa.jpg 
எத்தனை தான்
அன்பு செலுத்தியிருந்தாலும்
குறைவானதாகவே
தோன்றும்
மறைவிற்குப் பின்

இன்னும் ஏதேதோ
செய்திருக்க வேண்டுமென்றும்
பாசத்தை
வேலிகளறுத்து வழங்கியிருக்க
வேண்டுமென்றும்
நெருங்கி வரும் நினைவு நாட்கள்
நெருஞ்சி தைக்கின்றன.

எதுவெனினும்
எவ்விதமெனினும்

எத்தனை ஆண்டுகள்
கூடவே வாழ்ந்தாலும்

இன்னும் கொஞ்சகாலம்
வாழ்ந்திருக்கக் கூடாதா
என் தந்தை ?
என்றே தோன்றும்
ஒவ்வோர் மகனுக்கும்.

3 மறுமொழிகள்

  1. செப்டம்பர் 29, 2007 இல் 11:43 மு.பகல்

    //எத்தனை ஆண்டுகள்
    கூடவே வாழ்ந்தாலும்

    இன்னும் கொஞ்சகாலம்
    வாழ்ந்திருக்கக் கூடாதா
    என் தந்தை ?
    என்றே தோன்றும்
    ஒவ்வோர் மகனுக்கும்.//

    உண்மை. மறுக்க முடியாத உண்மை. என் மனதிலும் உள்ள எண்ணம் சேவியர்..

    உலகில் பின்பு வந்து சேர்ந்த சொந்தங்கள் எத்தனை இருந்தாலும் தாய், தந்தைக்கு ஈடாகுமா..?

    ரத்தினச் சுருக்கமாக மனதில் தைப்பதைப் போல் உள்ளது சேவியர். எனது தந்தையின் நினைவுகளை கிளறிவிட்டது உங்களது கவிதை வரிகள்.

  2. bashakavithaigal சொன்னது,

    செப்டம்பர் 29, 2007 இல் 5:46 பிற்பகல்

    sathyamaaana uNarvu!

  3. அக்டோபர் 4, 2007 இல் 11:43 பிற்பகல்

    தந்தையை இழந்த ஒவ்வொறு மகனுக்கும் வரும் எண்ணங்களை அழகாக கவிவரிகளாக வார்த்திருக்கின்றீர்கள்.

    வாழ்த்துக்கள் சேவியர்.


மறுமொழியொன்றை வழங்குக