சில ஆடைகள்
விசேஷமானவை.
சிறுவயதில்,
விழாக்கால நாள் வரை
காத்திருந்து பெற்றுக் கொள்ளும்
புத்தாடை மணம்
இன்னும்
நாசிகளில் உயிர்ப்புடன்.
வருட இடைவெளி
வாங்கிக் குவித்த ஆடைகள்
ஆயிரமெனினும்
இன்னும் நினைவிருக்கும்
பால்ய கால ஆடைகளின்
டிசைன்கள்.
அம்மாக்களின்
அலமாரிகளில்
திருமண வாசம் மாறாமல்
மௌனித்திருக்கும்
பட்டுப் புடவைகள்
விலைமதிப்பற்றவை.
காதல் பரிசளித்த ஆடை
நேசம் பரிமளித்த ஆடை
என
எல்லோரிடமும் இருக்கக் கூடும்
ஏதேனும் ஓர் ஆடை.
காலக் கரையான்
தின்று தீர்த்தாலும்
இன்னும்
உயிர்ப்புடன்
நினைவுகளின் மேனிகளில்
மாட்டப்பட்டு
புத்தம் புதிதாய்
ஃ










மங்களூர் சிவா சொன்னது,
அக்டோபர் 13, 2007 இல் 8:45 பிற்பகல்
//
சிறுவயதில்,
விழாக்கால நாள் வரை
காத்திருந்து பெற்றுக் கொள்ளும்
புத்தாடை
//
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
இப்பல்லாம் வாரத்துக்கு ஒரு டி சர்ட்
மாசத்துக்கு ஒரு ஜீன் எடுத்தாலும்
அன்றைக்கு தீபாவளிக்கு அல்லது
எதாவது ஒரு விசேசத்துக்கு மட்டும்
எடுத்துகொடுக்கப்படும் ஆடைகளுக்கு இருந்த
எதிர்பார்ப்பு அந்த இன்ப மனநிலை
(feeling) இப்ப இல்லை.
சுவையான கவிதை
கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
அக்டோபர் 22, 2007 இல் 10:01 பிற்பகல்
“வருட இடைவெளி
வாங்கிக் குவித்த ஆடைகள்
ஆயிரமெனினும்
இன்னும் நினைவிருக்கும்
பால்ய கால ஆடைகளின்
டிசைன்கள். ”
உண்மை தான் நண்பரே. பாலய காலத்து ஆடைகளின் டிசைன்கள் சில இன்னும் மறந்து போகாமல் தான் இருக்கின்றது.
ஒர் ஆடை என் மாமா என் அண்ணாவிற்கு கொடுத்தது. அண்ணா பெரியவர் ஆனபின் அதை நான் பலகாலம் பயன் படுத்தியிருக்கின்றைன். கத்திரிப் பூ கலரில் நெருக்கமான வெள்ளை சிக்சாக் கோடுகளுடன் அமைந்த அந்த மேலாடையின் டிசையின் இன்னும் மறந்து போகாமல் தான் இருக்கின்றது.
வாழ்த்துக்கள் நண்பரே.
kalyanakamala சொன்னது,
நவம்பர் 15, 2007 இல் 2:34 பிற்பகல்
இளவயதுதான் நமது வாழ்க்கையோ!பின்னதெல்லாம் மற்றவர்ர்களுடையதோ?
சேவியர் சொன்னது,
நவம்பர் 15, 2007 இல் 8:44 பிற்பகல்
நம்முடைய இள வயது பிள்ளைகளுடையது
kalyanakamala சொன்னது,
நவம்பர் 18, 2007 இல் 9:42 மு.பகல்
அழகாகச்சொன்னீர்கள். உங்கள் கவிதைகள் இயல்பாக இருக்கின்றன. பதிலகளும்கூட படு யதார்த்தம்!
அன்புடன் கமலா
சேவியர் சொன்னது,
நவம்பர் 19, 2007 இல் 10:23 மு.பகல்
நன்றி
அதிரை அபூ சொன்னது,
நவம்பர் 19, 2007 இல் 4:39 பிற்பகல்
Very nice… for ur Dress poem…
சேவியர் சொன்னது,
நவம்பர் 22, 2007 இல் 10:05 மு.பகல்
நன்றி அதிரை