ரயில் பயணங்களில்
கவனத்தை
அறைந்து திறக்கின்றன
சாத்தப்பட்ட சன்னல்கள்.
சாத்தப்பட்ட
சன்னலுக்குப் பின்னே
ஓர்
மழலை
தந்தையின் முதுகில்
குதிரைச் சவாரி செய்யலாம்,
விடிந்து விட்டதை
மறந்து
ஓர்
காதல் சோடி
போர்வைக்குள்
பிணைந்திருக்கலாம்
இரவில் மறந்து போன
வீட்டுப் பாடத்தை
சீருடைச் சிறுமி ஒருத்தி
பதட்டத்துடன்
கிறுக்கிக் கொண்டிருக்கலாம்.
அலுவலக அவசர அம்மா
பரபரப்பை
சமையலறைக்கும்
வரவேற்பறைக்கும்
விதைத்துக் கொண்டிருக்கலாம்.
சாத்தப்பட்டே கிடக்கட்டும்
சன்னல்கள்.
திறந்து கிடக்கும் சன்னல்கள்
வரைந்து சொல்லும்
வெறுமையை விட
மூடப்பட்ட சன்னல்கள்
திறக்கும் கற்பனைகளே சுகமானவை.
ஃ









கலை அரசன் மார்த்தாண்டம் சொன்னது,
அக்டோபர் 22, 2007 இல் 10:08 பிற்பகல்
“திறந்து கிடக்கும் சன்னல்கள்
வரைந்து சொல்லும்
வெறுமையை விட
மூடப்பட்ட சன்னல்கள்
திறக்கும் கற்பனைகளே சுகமானவை.”
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே.
சேவியர் சொன்னது,
அக்டோபர் 25, 2007 இல் 6:32 பிற்பகல்
நன்றி நண்பரே
kalyanakamala சொன்னது,
நவம்பர் 15, 2007 இல் 2:29 பிற்பகல்
Wonderful words and the coining of words seems to be an expert’s.
thangs
kamala
சேவியர் சொன்னது,
நவம்பர் 15, 2007 இல் 8:43 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள்
சதீஷ் சொன்னது,
நவம்பர் 15, 2007 இல் 11:54 பிற்பகல்
அட.
நான் சொல்ல நினைத்ததைக் கலை அரசன் சொல்லிவிட்டார். அதையே நானும் வழிமொழிகிறேன்.
சேவியர் சொன்னது,
நவம்பர் 16, 2007 இல் 10:21 மு.பகல்
நன்றி சதீஷ்.