அடுப்படியில்
அம்மா
மூங்கில் குழலால்
அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறார்.
தோட்டத்தில்
மூங்கில் ஏணியில்
அப்பா
தென்னை மரம் ஏறுகிறார்.
தோட்டத்தில்
மூங்கில் மேடையில்
பாம்பென ஆடுகின்றன
புடலங்காய்கள்
உழைக்கும் வர்க்கத்தின்
தேவைகளின்
நெருக்குதலில்
மூங்கில் ஐக்கியமாகிக் கிடக்கையில்
சாப்பிட்ட திருப்தியுடன்
நான் கவிதை எழுதினேன்
புல்லாங்குழலில்
வழியும்
காதலில் இசை குறித்து










sirumalar சொன்னது,
நவம்பர் 22, 2007 இல் 12:57 பிற்பகல்
Hai. Xavier, all kavithai very super. moonkil kavithai very nice.
சேவியர் சொன்னது,
நவம்பர் 22, 2007 இல் 2:34 பிற்பகல்
மிக்க நன்றி சிறுமலர்