நிற்க அதற்குத் தக.

fish.jpg

வீட்டைப் பார்க்கலாமென
கூட்டிச் சென்றார்
நண்பர் ஒருவர்.

அடைந்து கிடந்த
மதிலைத் திறந்ததும்
குரலெழுப்பி வரவேற்றன
கூண்டுக்குள் கிடந்த
பலவண்ணப் பறவைகள்.

இடது புறக் கூட்டில்
குறுகிக் கிடந்தது
சங்கிலிகளால் சங்கமமான
நீளமான நாய் ஒன்று

வசீகரிக்கும்
வரவேற்பறையில்
தொட்டியின் திசைகளெங்கும்
கண்சிமிட்டின
கண்ணாடி மீன்கள்.

சுவரில் அறையப்பட்டிருந்த
மாலை சூடிய
புகைப்படத்தில்
கம்பீரமாய் நின்றிருந்தார்
கடந்தகால தாத்தா ஒருவர்.

யாரென்று கேட்டேன்.

சுதந்திரத்தையே மூச்சாய் கொண்டு
போராட்டக் களம் புகுந்த
என்
தாத்தா என்றார் பெருமையாய்.

தொட்டி மீன்கள்
சத்தமில்லாமல் சிரித்தன.
 

3 மறுமொழிகள்

  1. kalyanakamala சொன்னது,

    நவம்பர் 26, 2007 இல் 10:34 பிற்பகல்

    சுதந்திரத்தாத்தா சிரித்தபடி நின்றிருப்பாரே படத்துக்குள். என்ன பண்ணுவார் அவர்?
    நம்ம நாடு சுதந்திரம் வாங்கியும் நம்ம ஊரு மக்கள் மற்ற நாட்டுப் பழக்கங்களிலிருந்து சுதந்திரம் அடையவில்லையே?

  2. நவம்பர் 30, 2007 இல் 12:20 பிற்பகல்

    நல்ல கருத்துச் செரிவு.

    வாழ்த்துக்கள் சேவியர்.

  3. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 4, 2007 இல் 4:40 பிற்பகல்

    நன்றி.. நன்றி :)


மறுமொழியொன்றை வழங்குக