உலகம் உருவான கதை

adam.jpg 

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

 பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

எனது கி.மு - விவிலியக் கதைகள் நூலிலிருந்து. 

0

135 மறுமொழிகள்

  1. Pச்சக் ப்கு சொன்னது,

    மார்ச் 1, 2008 இல் 4:13 பிற்பகல்

    இந்த 21 ம் நூற்றாண்டுளையும் இப்படியே இருக்கீங்களே கேனப்பசங்களா?

  2. சேவியர் சொன்னது,

    மார்ச் 3, 2008 இல் 9:49 மு.பகல்

    திரு Pச்சக் ப்கு, இது 21ம் நூற்றாண்டுல எழுதினதில்லை :)

  3. s.kslpana சொன்னது,

    April 7, 2008 இல் 10:45 பிற்பகல்

    kathai miga naintragairuinthathu

  4. சேவியர் சொன்னது,

    April 9, 2008 இல் 8:16 பிற்பகல்

    நன்றி கல்பனா

  5. jaisankarj(சங்கர்) சொன்னது,

    April 27, 2008 இல் 4:30 பிற்பகல்

    கடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )

  6. சேவியர் சொன்னது,

    April 28, 2008 இல் 10:35 மு.பகல்

    //கடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )
    //

    நான் விவிலிய அறிஞன் இல்லை ஜெய் :)

  7. Ramanathan சொன்னது,

    ஜூன் 12, 2008 இல் 10:50 மு.பகல்

    good it is greatful imagination. how is it possible? what about other planets?

  8. சேவியர் சொன்னது,

    ஜூன் 12, 2008 இல் 12:58 பிற்பகல்

    //what about other planets? //

    கடவுளிடம் கேட்டு சொல்றேன்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ… ;)

  9. GOPALAKRISHNAN சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 4:34 பிற்பகல்

    EVERY THING NOT AN FACT,,,,,,,,,JUST FOR JOKE&TIMEPASS

  10. Sridhar சொன்னது,

    ஜூன் 26, 2008 இல் 9:58 பிற்பகல்

    cal me +919842753535

  11. Sri சொன்னது,

    ஜூன் 26, 2008 இல் 9:59 பிற்பகல்

    cal me +919842753535

  12. சேவியர் சொன்னது,

    ஜூன் 27, 2008 இல் 10:33 மு.பகல்

    அழைத்தேன் எடுக்கவில்லையே ?

  13. shafiq சொன்னது,

    ஆகஸ்ட் 27, 2008 இல் 7:55 பிற்பகல்

    சகோதரர் அவர்களுக்கு,

    ரொம்ப நாள் கழித்து இந்த கட்டுரையை பார்வையிட்டதற்கு மன்னிக்கவும்.
    மேலே சொன்ன சகோதரர்கள் அனைவரும் இது நல்ல கற்பனை என்றனர். தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் தங்களுக்கு உதவ முடியவில்லை. மன்னிக்கவும். இதில் விஷேசம் என்னவென்றால் முஹம்மது ஒரு இறைதூதர் இல்லையென்றால் அவருக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்னபதுதான். தாங்கள் வாசியுங்கள்.

  14. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2008 இல் 10:45 மு.பகல்

    //தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். //

    உண்மை. பைபிளில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்தக் கதை. நீங்கள் சொன்ன புத்தகம் சென்னையில் கிடைக்குமா ? எனில் கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன்.

    வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. சகோதரர் என அழைத்துப் பின்னூட்டமிட்ட உங்கள் மனதுக்கு நன்றிகள் பல.

  15. உண்மை சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 8:48 பிற்பகல்

    உண்மைக்குப்புறம்பான விஷயங்கள் எத்தனையோ போதிக்கப்படுகின்றன. எப்போருள் யார்யார் வாய் கேட்பினும் – மெய்ப்போருள் காண்பது அறிவு.

  16. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 11:35 மு.பகல்

    வருகைக்கு நன்றி உண்மை… :)

  17. rajas சொன்னது,

    அக்டோபர் 2, 2008 இல் 5:32 பிற்பகல்

    திருக்குறளில் சொன்னது போல் அவரவர் நினைத்து கொள்வது அவரவர்க்கு சரி. ஆனால் விவிலியத்தில் சொல்வது படிப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனா சில விஷயங்களின் சந்தேகம் வருகின்றது. பூமிக்கு வெளிச்சம் கடவுள் தன் கொடுத்தாரா?. அப்படியானால் சூரியன் அதற்க்கு பிறகு தன் வந்ததா? விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன?

  18. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 3, 2008 இல் 12:11 பிற்பகல்

    //விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன?//

    என்னிடம் பதில் ஏதும் இல்லை. சில விஷயங்களைக் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்பவன் நான் :)

    வருகைக்கு நன்றி நண்பரே.

  19. prakash சொன்னது,

    அக்டோபர் 11, 2008 இல் 9:26 பிற்பகல்

    1000 periyar vandhalum ungala ellam thirutha mudiyadhu

  20. Elamathi சொன்னது,

    நவம்பர் 4, 2008 இல் 4:40 பிற்பகல்

    good magination .keep it upand my best wishes for u

  21. geeva சொன்னது,

    நவம்பர் 5, 2008 இல் 3:02 பிற்பகல்

    1000 periyar vandhalum ungala ellam thirutha mudiyadhu

  22. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 12:08 பிற்பகல்

    நன்றி இளமதி.

    வருகைக்கு நன்றி பிரகாஷ் & ஜீவா ;)

  23. BHUPATHI சொன்னது,

    பெப்ரவரி 4, 2009 இல் 7:42 பிற்பகல்

    NOT BAD. GOOD IMAGINATION.

  24. BHUPATHI சொன்னது,

    பெப்ரவரி 4, 2009 இல் 7:46 பிற்பகல்

    NOT BAD.GOOD IMAGINATION.

  25. ANANDHARAJ சொன்னது,

    பெப்ரவரி 5, 2009 இல் 12:05 பிற்பகல்

    una than da romba nala thedurean……

  26. Mahen சொன்னது,

    பெப்ரவரி 18, 2009 இல் 3:08 பிற்பகல்

    kjhjai

  27. victer சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 7:25 மு.பகல்

    its christian faith.christian only believe bible is right.whether u all belive or not if bible said the ” world is square ” they believe it.coz, great faith is believing the things could not seeing.World cannot find logic into divine work .we can confirm with faith only. christian believe bible is supreme.

    call me 017-4323506
    malaysia

  28. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 6:21 பிற்பகல்

    நன்றி மலேஷிய நண்பரே.. வருகைக்கும், கருத்துக்கும்.

  29. subaash சொன்னது,

    பெப்ரவரி 27, 2009 இல் 8:13 மு.பகல்

    i stongly believed it.. but i am not christian.. i can explain you guys.. those deny this…
    i need to know… you are atheist OR beliverver?
    And do you like to know who is true god?
    if you know.. ask you WHO n WHY?
    REST IN NEXT..
    ple chat or mail me with feel free..

    regards,
    Subaash.(boss_shivaji@yahoo.com)

  30. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 27, 2009 இல் 3:26 பிற்பகல்

    வருகைக்கு நன்றி சுபாஷ்…

  31. susila சொன்னது,

    மார்ச் 22, 2009 இல் 1:35 பிற்பகல்

    இந்த கதைக்கு பெரியார் புக் ல பகுத்தறிவு என்னும் புத்தகத்தில் இருக்கு அதுல கரெக்ட் சொல்லி இருக்காங்க பெரியார்……..

    முடிந்தால் வசித்து பாருங்க

  32. April 24, 2009 இல் 2:43 மு.பகல்

    [...]  1. உலகம் உருவான கதை [...]

  33. suthan சொன்னது,

    ஜூன் 2, 2009 இல் 4:33 மு.பகல்

    poi poruntha soluga

  34. malar சொன்னது,

    ஜூன் 4, 2009 இல் 11:09 பிற்பகல்

    kekuravan kenaya iruntha kapula kada vatuvanga

  35. venkat சொன்னது,

    ஜூன் 8, 2009 இல் 9:58 பிற்பகல்

    boomimiye illai, apuram thanni eppadi irukum, loosu pasangala

  36. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 7:54 பிற்பகல்

    வருகைக்கு நன்றி வெங்கட்.

  37. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:56 பிற்பகல்

    வருகைக்கு நன்றி மலர் ;)

  38. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:58 பிற்பகல்

    வருகைக்கு நன்றி சுதன்

  39. xavier சொன்னது,

    ஜூன் 11, 2009 இல் 9:42 பிற்பகல்

    உண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா?

  40. சேவியர் சொன்னது,

    ஜூன் 11, 2009 இல் 10:33 பிற்பகல்

    //உண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா?
    //

    சொல்வதிலோ, சண்டையிடுவதிலோ பயனில்லை, வாழ்வதில் தான் இருக்கிறது ஆன்மீகம் !

  41. Saranya சொன்னது,

    ஜூலை 5, 2009 இல் 7:16 பிற்பகல்

    ulagam yappadi vanthathunu yaralaium kandu pudika mudiyatha.ippadi yathavathu kathi vanthu na padichukalam avolatha ana itha namba mudiyathu.poi itha arichi pandratha vittutu vera yathavathu usefula pannunga.

  42. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:32 மு.பகல்

    வருகைக்கு நன்றி சரண்யா :D

  43. yuvaraj சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 5:13 பிற்பகல்

    Annan xavierkku nandrigal, Nalla kadhai, Ella madhangalum thanakkena oru puranathai kondullana, yenenil nam puranathaiyum podhuvazhkaiyum oppidakudadhu,puranam enbadhu namadhu munorgalin karpanaiya thavira verondrum illai , mattrapadi oruvar adhai namuvadhum nambadhum avararavar madha pattrai poruththadhu….

  44. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 7:08 பிற்பகல்

    வருகைக்கு நன்றி யுவராஜ் :)

  45. jaisankarj சொன்னது,

    ஆகஸ்ட் 26, 2009 இல் 5:06 பிற்பகல்

    //, இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்//

    கண்ணா அது சந்திரன். அது ஒளி பிழம்பு கிடையாது

  46. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:23 பிற்பகல்

    வருகைக்கு நன்றி ஜெய்சங்கர் :)

  47. Arulnithi .V.N.Thangamani சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 4:35 பிற்பகல்

    Dear Saviyar
    Ithu verum kathai. Aanaal yesu, nabigal, krishnar, vatham, upanishathugal matrum Ariviyal arignargal sonnathu ellavarrin saarathaiyum eduthu Unmayil ulagam eppadi thontriyathu uyirgal evvaaru parinaamam petrathu enpathai thelivaaga Kooriyullar Mahaan Vathathiri maharishi Avargal. Unmayai Therinthugolla virummbupavargal avarudaiya noolgalai padiyungal. Melum vibarangalukku http://www.vaththiri.org web site paarungal. Nantri saviyar matrum Ulaga Tamil makkalukku. Vaalga valamudan. Ellauyirgalum Inputru Vaalga.

  48. Arulnithi .V.N.Thangamani சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 4:37 பிற்பகல்

    Mannikkavum web site mukavani http://www.vethaththiri.org

  49. Arulnithi .V.N.Thangamani சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 4:39 பிற்பகல்

    web : http://www.vethathiri.org

  50. alexdanial சொன்னது,

    அக்டோபர் 5, 2009 இல் 12:20 மு.பகல்

    nanbargala. ulagathil alla kelvigalukum udana vedai kedaipathu ellai, athupola than ungal kelvegalum, ungal alcheyamana vemarsangalum. kadavel yanpathum, kadavel varthai yenpathum avar avar nambikaiai poruthathu. etho utharanum. nombu (fasting) erukum pothu neingal yaruku unmaiya eruka mudium ondru ungaluku, matra ondru kadavel yannum oliku. intha sambavum vesuvasathin adipadiul than nadaka mudiuma thavera, unmaia, poia yenpathil alla. athu polathan intha sambavangalum.

  51. Prabhu சொன்னது,

    அக்டோபர் 15, 2009 இல் 3:15 மு.பகல்

    வீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.

  52. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:03 பிற்பகல்

    //வீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.//

    நன்றி பிரபு எம்.சி.எ 335 !

  53. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:20 பிற்பகல்

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அலக்ஸ் டானியல்

  54. MirthonMP சொன்னது,

    நவம்பர் 2, 2009 இல் 11:07 பிற்பகல்

    nandraga sonneerkal.

  55. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 12:50 மு.பகல்

    நன்றி மிர்தோன்..

  56. imran சொன்னது,

    December 9, 2009 இல் 7:48 பிற்பகல்

    edu ezudiyavaruku vanakam.
    neengal romba azagaga. ullgam uruvana kadai sonirgal.annal ulagam apo erunda matram epo illai adu en. ulagathil ellame marivitadu anal manithanin gunam matum enum maravillai.madam thonriadhal than matrangal mariyadu apadi erkum podu manidan matum epadi marinargal. ungal .

    Thngal bathiluku katirukiren. nanri vanakam

  57. சேவியர் சொன்னது,

    December 10, 2009 இல் 12:49 மு.பகல்

    //ulagathil ellame marivitadu anal manithanin gunam matum enum maravillai//

    இப்படிப் பொதுப்படையாகக் குறை சொல்வதை விட “மனிதர்கள் நேசம் மிக்கவர்கள்… அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன்” என ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்கும் நாளில் வாழ்க்கை வளம் பெறும் !

  58. ராஜகோபால் சொன்னது,

    December 10, 2009 இல் 11:04 பிற்பகல்

    திரு சேவியர்,

    அவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.

    உலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.

  59. சேவியர் சொன்னது,

    December 11, 2009 இல் 5:15 பிற்பகல்

    //திரு சேவியர்,

    அவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.

    உலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.
    //

    நன்றி நண்பரே.. வருகைக்கும், கருத்துக்கும்….

  60. arputhaa சொன்னது,

    ஜனவரி 4, 2010 இல் 1:40 மு.பகல்

    வேதாகமத்தின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது உலகம் உருவான வரலாறு அல்ல சகோ. அங்கே சொல்லப்பட்டிருக்கும் படைப்புக் காரியங்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே. பூமி அதாவது உலகம் அதற்கு முன்பே இருந்தது. அந்த முந்தைய உலக உயிரினங்களே டைனோசர் போன்ற பெரும் பிராணிகள். இதற்கு விளக்கமே பெரும் கட்டுரையாகிவிடும். இது பின்னூட்டமும் பின்னூக்கமுமே! நன்றி தங்கள் பதிவுக்கு

  61. சேவியர் சொன்னது,

    ஜனவரி 4, 2010 இல் 5:09 பிற்பகல்

    //மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே//

    உண்மை. விஷயங்களைத் தெரிந்து பேசுகிறீர்கள். நன்றி !

    பூமியைப் படைத்தது வெகு வெகு வெகு காலம் முன்பே. அதன் பின் அதிகாரம் விரும்பிய லூசிபர் தொடங்கிய 1/3 பங்கு தேவதூதர்களின் பிழையால் பூமி பாழடைந்தது ! இது விவிலியத்தில் உண்டு. துவக்கத்தில் அல்ல, கடைசியில் ! பைபிளின் முதல் பக்கத்தில் வருவது, அப்படிப் பாழடைந்த பூமியை செம்மைப் படுத்திய நிகழ்வே !

  62. areun சொன்னது,

    பெப்ரவரி 20, 2010 இல் 11:50 பிற்பகல்

    ethu oru arputhamana poi

  63. vazhai maan சொன்னது,

    பெப்ரவரி 21, 2010 இல் 12:00 மு.பகல்

    *****Indha padam 2000 varushama runaichu, ethuku mela odathu??????????
    *****aena enna pola buthi sali romba peru erukanga……………………………..,..

  64. K.SIVA(Fr) சொன்னது,

    பெப்ரவரி 21, 2010 இல் 8:04 மு.பகல்

    Matham Matham Enpathai Vida, Mitham Maanidam EnruNaam Cinthithaal, AvlangKal Aniithikal ThaaNaaka ParnThoodum, EnRuNaam Manitham Athanai MathikKinRoomoo, AnnRuthaan UlakilCiRappudai AannMiikam EmMulPadaRum, KonRaal PooChu Athai UndaalPooKum,EénRu NinaiThavar IruThiJil EnNaKaannPaar?…, IruThiJil Eénna KaanPoom ?… Kuudap PiRanThoor Kaddiya Manavi YaaTaYungKaanoom.. !!??!!, IrukkumPooThu NanMaiYai CiYaaVidinum PiRarManaThiNai, NaamPun PaduThaa ThiRuThal, ManiTham EénRum MéénMai A(Y)daiYum, Ci(Si)vaNum Saththiyum UnnDénRaal, AaThaam Eévaal ééPadi Vanthaar?.. Avanunum Ivanum ILLai EéénRaal, ManiTham EépPadi VanThaThu SoolViir..??!!, AthaNaal SoolVéénn NaaMéé MamaThu NaaVai AdakKIK KoolVoom, AnPéé ThéiVam AthuVéé KadaVul, Inpam ééNpathu ILamaiVaRaikKum,IThanPin KaanPaThu ééThuThaan NanPaa..?? “” KAAN PATHU ééNNA ?”" ++K.SIVA (Fr)++

  65. thangasamy சொன்னது,

    பெப்ரவரி 27, 2010 இல் 2:24 மு.பகல்

    I STRONGLY BLEAVE .EVERY MAN BORN IN THE WORLD DIED WITH OUT ANY
    FAIYH LIKE A ANIMAL ,BUT, WHO LOVE THE TRUTH AND FAITH ON GOD DIED WITH PEACE AND SUBMIT TO GOD- YOUR WARDS ARE VERY NICE

  66. thangasamy சொன்னது,

    பெப்ரவரி 27, 2010 இல் 2:36 மு.பகல்

    1.I STRONGLY BLEAVE .EVERY MAN BORN IN THE WORLD DIED WITH OUT ANY FAITH LIKE AN ANIMAL ,BUT, WHO LOVE THE TRUTH AND FAITH ON GOD DIED WITH PEACE AND SUBMIT TO GOD- YOUR WORDS ARE VERY NICE
    Can a Creation judge the creater. No man cannot able to creat even a small ant in his whole power .

  67. tamil சொன்னது,

    April 8, 2010 இல் 8:01 பிற்பகல்

    ungaludan naan pesavendum pls call me 9962670791

  68. சேவியர் சொன்னது,

    April 21, 2010 இல் 1:24 மு.பகல்

    //ungaludan naan pesavendum pls call me 9962670791//

    சொல்லுங்கள்… எப்போது அழைக்கலாம்…. ?

  69. kannan சொன்னது,

    மே 5, 2010 இல் 5:06 மு.பகல்

    எல்லோரும் வாழ்க

  70. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 2:08 மு.பகல்

    //எல்லோரும் வாழ்க//

    வருகைக்கு நன்றி கண்ணன்.

  71. SAM சொன்னது,

    ஜூலை 22, 2010 இல் 9:17 பிற்பகல்

    how dare you can say this is a story. BIBLE is word GOD. beware of your words. otherswise you shoul give account to God

  72. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 9, 2010 இல் 1:55 மு.பகல்

    வருகைக்கு நன்றி சாம்.

  73. Robin சொன்னது,

    ஆகஸ்ட் 9, 2010 இல் 3:29 மு.பகல்

    2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

    மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

  74. savarimuthu சொன்னது,

    ஆகஸ்ட் 10, 2010 இல் 10:39 பிற்பகல்

    Bible bathe aluthiyathirku nanri

  75. balan சொன்னது,

    ஆகஸ்ட் 18, 2010 இல் 1:53 பிற்பகல்

    ஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.?
    அதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …
    அப்போ மிருக வாழ்க்கை தான் அண்டவன் படைத்த முதல் மனித படைப்பா .?
    இப்போ அப்படி உறவு கொண்டடுகிறவர்களா இதை நன்புகிறவர்கள் ???
    இல்லை
    மனிதன் கடவுளின் பிழைகளை சீர்திருத்தி இருக்கிறானா ?

    இந்த உலகத்தை படைக்க ஒருவருக்கு 5000 நாள் தேவைபட்டிருக்கு.

    எல்லா புத்தகங்களும் 1400, 2000, வருடத்துக்கு பின்னயத்தை சொல்கிறது
    இன்னொரு ஒரு புத்தகம் பல லட்சம் ஆண்டு பழையதை சொல்லுது .

    எல்லாம் மாயம்

  76. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 18, 2010 இல் 4:42 பிற்பகல்

    //ஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.?
    அதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …
    //

    இதன் பதில் பைபிளில் உள்ளது ….

  77. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:21 பிற்பகல்

    நன்றி சவரிமுத்து !

  78. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2010 இல் 10:23 பிற்பகல்

    //2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

    மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

    //

    எல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள் :)

  79. selva சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 12:11 மு.பகல்

    saranya sonnathu unmai than dont waste urs time iyarkayye kadavul

  80. selva சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 12:15 மு.பகல்

    arauthaa un arivu thiranai paratukirenpa

  81. selva சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 12:16 மு.பகல்

    arputha nee valga valamudan

  82. selva சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 12:27 மு.பகல்

    ulagam athu uyirinathin uraividam iyarkai athu uyirinathin iraivan vaalum varai santhosamai iruda manida irantha pin nee yaarada un aatam engeda so keep smile unnai valinadatha oru sakthi irukirathe ithu un uyir pirintha pin valinadathuvan.

  83. selva சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 12:33 மு.பகல்

    naam irantha pin enna aavom endru kavai padathe: unnai un thaiyin vayitril pirakka seithu aval ethayathil unavu padaitha iraivan ,nee irantha piravu nee sellum or pirakkum idathayum vaguthiruppan`

  84. dhivya சொன்னது,

    அக்டோபர் 6, 2010 இல் 2:48 மு.பகல்

    is it true?

  85. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 7, 2010 இல் 10:20 பிற்பகல்

    //is it true?//

    நிரூபிக்க முடியாத நம்பிக்கைகள் !

  86. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 7, 2010 இல் 10:36 பிற்பகல்

    நன்றி செல்வா.

  87. jesuvictor சொன்னது,

    நவம்பர் 5, 2010 இல் 5:49 மு.பகல்

    hi xavier,its very nice,God has given you wonderful talent.use it for his glory. keep it up.

  88. manithan சொன்னது,

    நவம்பர் 23, 2010 இல் 4:17 பிற்பகல்

    கடவுள் நு சொல்லுரிங்க எந்த கடவுள் நு சொல்லல கடவுள பொய் ஆவினு ஏன் சொல்லுரிங்க….எதோ படத்துல வர ஒரே பாட்டுல பெரிய ஆள் ஆகிறது மாதிரி இவளவு இசியா உலகம் உருவானதா சொல்லிடிங்களே பாஸ்…ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச்சிடிங்க லே பாஸ்…உங்களால எப்படி இது மாதிரி எல்லாம் யோசிக்க தோணுது…..

  89. சேவியர் சொன்னது,

    நவம்பர் 25, 2010 இல் 6:27 பிற்பகல்

    //ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச்சிடிங்க லே பாஸ்//

    வருகைக்கு நன்றி.

  90. சேவியர் சொன்னது,

    நவம்பர் 25, 2010 இல் 6:42 பிற்பகல்

    நன்றி யேசு விக்டர்

  91. Shanmugam சொன்னது,

    December 17, 2010 இல் 6:18 பிற்பகல்

    Naldhu nenai naladhu nadukkum

  92. PALANISAMY.K சொன்னது,

    December 25, 2010 இல் 3:50 பிற்பகல்

    INTHA

  93. PALANISAMY.K சொன்னது,

    December 25, 2010 இல் 3:56 பிற்பகல்

    DFFFH

  94. K.SIVA.Fr சொன்னது,

    December 26, 2010 இல் 3:33 மு.பகல்

    AaaThaam EéVaal IL Lai EénnRaal
    Akilam IL Lai AnRoo – A ThaNaal
    Sool Véén In Naal PonNaal
    IThaNai I Nai ThThaal – Eé Thir Varum
    Poon Naal 2011 Nan Réé AaKa
    Inn Pudan Anai VaRum
    Inpudan On Raaji
    AkiLam Vaal Ka
    Nii Du Nad Pudan
    Nan Réé AaKuka.
    ++ K.Siva (France)

  95. K.SIVA.Fr சொன்னது,

    December 26, 2010 இல் 4:07 மு.பகல்

    PaaLan VaraVu
    PaaTil Pu NiTham
    Pa Kalavan Va RaVu
    Ujir Kaluk Ku UudDam
    Mani Than EénPaVan
    I DaiJil Ninrk Kum
    Asaii Yum Poo Ru Léé
    AaThalaal Inpudan
    Puthu Naal NanNaal
    NanRéé PuTika
    NanMai Jéé PaYakKUM
    01 . 01 . 2011
    AnPudan AA KU KA
    In Pudan …. K.Siva(France).

  96. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:43 பிற்பகல்

    சூப்பர். நன்றி சிவா.

  97. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:52 பிற்பகல்

    நன்றி ஷண்முகம். :)

  98. stephen சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 8:08 பிற்பகல்

    ennudaya karudhu ethu

  99. G.G சொன்னது,

    ஜனவரி 19, 2011 இல் 4:14 பிற்பகல்

    I think it is not a true but story is very nice

  100. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:26 பிற்பகல்

    வருகைக்கு நன்றி ஜி.ஜி…

  101. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:33 பிற்பகல்

    நன்றி ஸ்டீபன்…

  102. ashmi சொன்னது,

    பெப்ரவரி 13, 2011 இல் 9:58 பிற்பகல்

    congragulations anna……. ungal pani thodarattum……

  103. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 13, 2011 இல் 10:48 பிற்பகல்

    நன்றி ஆஷ்மி

  104. sharankumar சொன்னது,

    பெப்ரவரி 18, 2011 இல் 1:00 மு.பகல்

    mokkachami

  105. rasul சொன்னது,

    மே 2, 2011 இல் 10:42 பிற்பகல்

    nice story…i like ur story…….i like ur way of style…..thanks

  106. கண்ணனூர்.றீன் சொன்னது,

    மே 3, 2011 இல் 7:53 மு.பகல்

    ந்ந்நன்ற்றி

  107. deshingurajan சொன்னது,

    மே 21, 2011 இல் 1:52 மு.பகல்

    end thish supper

  108. K.SIVA சொன்னது,

    ஜூன் 3, 2011 இல் 9:12 மு.பகல்

    Aaa Thaam éEvaal
    Ava ThaaRam -Ani Varum
    AriVaar Jaar Thaan
    Eéé Thip Paar -Nii Jéé
    Sool Vaaji éN Anpaa;
    ++ NII JAI SOLL VAAJI EnAN paa ++
    ========K.Siva Fr ====2011==

  109. பெயரிலி சொன்னது,

    ஜூன் 24, 2011 இல் 3:27 மு.பகல்

    lilly….
    praise the lord…….
    all these commenter will surely have to stand in an judgement day in front of jesus……. so u contiune ur work…… the lord will upraise his servant……

  110. Sekar i am சொன்னது,

    ஜூன் 27, 2011 இல் 10:56 பிற்பகல்

    மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

    //

    எல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்…

    கிறிஸ்தவம் ஒரு மதமல்ல..
    கடவுளைச்சென்றடைய ஒரு வழி…ஒரே வழி…

    “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

    “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

    “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

  111. Mani Kandan சொன்னது,

    ஆகஸ்ட் 21, 2011 இல் 3:09 மு.பகல்

    கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே !

  112. Sweetlin Prabakaran சொன்னது,

    ஆகஸ்ட் 29, 2011 இல் 7:22 பிற்பகல்

    Very nice

  113. theres சொன்னது,

    அக்டோபர் 11, 2011 இல் 10:33 பிற்பகல்

    2008 – il intha kathaiai nan padikkavillai I am very soory

  114. theres சொன்னது,

    அக்டோபர் 11, 2011 இல் 10:37 பிற்பகல்

    Poomiyai padaikkum mun kadavul enkirunthar? Irunthirunthal athuvarai Ean ulakathai padaikkavillai? Sooriya kudumpathil irukkum Poomi thontum mun sun thane vanthirukkavendum?

  115. jeyasingh சொன்னது,

    நவம்பர் 22, 2011 இல் 2:44 மு.பகல்

    சூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் ? பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்

  116. பெயரிலி சொன்னது,

    December 18, 2011 இல் 5:33 மு.பகல்

    nann,,,,,,,, ethai padethu manam vtu serthan meka nantry ,,,,,,,, supper jock mr sevear , poi nalla valaya paruka sir earaum mudala aktheka ,,,,,,,,,,,,

  117. பெயரிலி சொன்னது,

    December 18, 2011 இல் 5:36 மு.பகல்

    uka photo va eadoka illana kadopa akduvan ,,,,,,,

  118. kathiravan சொன்னது,

    பெப்ரவரி 3, 2012 இல் 2:29 மு.பகல்

    unmai than very nice

  119. kathiravan சொன்னது,

    பெப்ரவரி 3, 2012 இல் 2:31 மு.பகல்

    appatina katavula patachathu yaaru ulagam uruvagathuku munnati katavul ennapannunar

  120. athisaya சொன்னது,

    பெப்ரவரி 6, 2012 இல் 10:25 மு.பகல்

    nanpare muthalil bible olungaka padikkavum , purinthukollamudiyavillai ental thaniyel refrence athavathu bibelin vilakkavurai vanki padiyunkal

  121. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 6:26 பிற்பகல்

    //nanpare muthalil bible olungaka padikkavum , purinthukollamudiyavillai ental thaniyel refrence athavathu bibelin vilakkavurai vanki padiyunkal

    //

    அப்படியே செய்கிறேன் ! வருகைக்கு நன்றி !!

  122. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 6:28 பிற்பகல்

    //appatina katavula patachathu yaaru ulagam uruvagathuku munnati katavul ennapannunar

    //

    எல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்சா, நானே கடவுளாயிடுவேன்ல !

  123. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 6:29 பிற்பகல்

    //unmai than very nice

    //

    நன்றி கதிரவன்

  124. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:18 பிற்பகல்

    //uka photo va eadoka illana kadopa akduvan ,,,,,,,

    //

    புரியற மாதிரி சொல்லுங்க பிரன்ட்…

  125. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 10:19 பிற்பகல்

    //nann,,,,,,,, ethai padethu manam vtu serthan meka nantry ,,,,,,,, supper jock mr sevear , poi nalla valaya paruka sir earaum mudala aktheka ,,,,,,,,,,,,

    //

    உங்களைச் சிரிக்க வைக்க முடிந்ததே என மகிழ்கிறேன் !

  126. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 11:08 பிற்பகல்

    //சூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் ? பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்
    //

    அடிப்படைக் கேள்விகளுக்கு அப்பற்பட்டவை சில நம்பிக்கைகள். !

  127. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 12:01 மு.பகல்

    Thank You Prabakaran

  128. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 12:18 மு.பகல்

    //கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே !

    //

    உட்டா ஆதாம் கையில ஏன் கைத்துப்பாக்கி இல்லைன்னு கேப்பீங்க போல :)

  129. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 12:44 மு.பகல்

    //lilly….
    praise the lord…….
    all these commenter will surely have to stand in an judgement day in front of jesus……. so u contiune ur work…… the lord will upraise his servant……

    //

    நன்றி !

  130. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:22 மு.பகல்

    நன்றி சிவா… நலமா ?

  131. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:26 மு.பகல்

    end thish supper

    //

    அப்படின்னா…???

  132. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:41 மு.பகல்

    நன்றி கண்ணனூர் ரீன்

  133. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:42 மு.பகல்

    nice story…i like ur story…….i like ur way of style…..thanks

    //

    நன்றி ரசூல்.

  134. aman சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 5:37 மு.பகல்

    Hi … xavier… sir…
    your imagination is good…

  135. TAMILARASAN.T சொன்னது,

    பெப்ரவரி 23, 2012 இல் 12:56 மு.பகல்

    ONE SMALL DOUBT:
    * ENNODA DOUBT AH UNGALALA CLEAR PANNA MUDIUM NU NA NINAIKKARA PLS HELP.

    * INTHA ULAGATHTHA KADAVUL PADACHAR NU PATHI PERUM. SOORIYAN LA IRUNTHU PIRINCHU VANTHATHUN NU SOLRANGA OK I AGREE.

    * BUT SOORIYAN EPPADI VANTHATHU. INTHA ULAGAM URUVAVATHARKKU MUNNALA EPPAD IRUNTHATHU.

    * ULAGAM THONRI SUMAR 5,00,000 VARUSAMACHUNNU NA KELVI PATTA, ATHUKKU MUNNAD ETHANA VARUSAMA SOORIYAN IRRUKKU.

    * ULAGAM ALIYUM NU SOLRANGA, ATHUKKU APPARAM INTHA SOORIYAK KUDUMBAM EPPAD IRRUKKUM.

    * ITHU YELLAM IYARKKAI NU SONNENGA NA,

    * IYARKKAA YAI YAR CONTROLL PANRANGA.
    ATHUKKU LIFE EVLO YEAR.ATHUKKU PIRAGU INTHA PIRABANJAM EPPAD IRRUKKUM.

    ITHU ENNODA ROMBA NALL QUESTION.

    * ITHU AVASIYAM NA PLS HELP. APPAD ILLANA
    I”M VERY SORRY UNGALA DISTURB PANNUNATHUKKU.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers