கவிதை : கனவுகளின் போர்வாள்

தொலை தூர
நட்சத்திரங்களின் புன்னகையாய்
எனக்குள்
உன் நினைவுகளின் மின்னல்.

காரிருள் போர்வைக்குள்
துயிலும்
கனவுகளின் போர்வாளாய்
காதல் சொட்டச் சொட்ட
விழித்துக் கிடக்கின்றன விழிகள்.

உன்
ஓசையின் கைப்பிடிச்சுவரை
எட்டிப் பிடிக்கும் ஆசையில்
எனக்குள்
ஏக்கங்களின்
குதிரைக் குளம்படிகள்.

பாய்ந்து பற்றும்
பதற்றம் சூழ் நிமிடங்களிலெல்லாம்
என்
கைகளுக்குள் நழுவுகின்றன
நீ
உடுத்தி நடக்கும் மெளனம்.

என்னைக் காதலிப்பதாய்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
நான்
காதலிப்பதாய்
புரிந்து கொண்டாயெனில் போதும்.

உன்
சம்மதத்தை
கவிதையாய் வடிக்க வேண்டாம்
ஒரு
முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே
போதும்

6 மறுமொழிகள்

  1. uumm சொன்னது,

    ஏப்ரல் 15, 2008 இல் 2:00 பிற்பகல்

    pidiththirukkirathu….

  2. shanmugampsg சொன்னது,

    ஏப்ரல் 15, 2008 இல் 7:47 பிற்பகல்

    உங்கள் கவிதை எனக்கு பிடித்திருக்கு ..
    “உன் சம்மதத்தை கவிதையாய் வடிக்க வேண்டாம் ஒரு முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே போதும்” என்கிற வரி நன்றாக இருக்கிறது

  3. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 15, 2008 இல் 8:28 பிற்பகல்

    //pidiththirukkirathu….//

    மிக்க நன்றி

  4. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 15, 2008 இல் 8:28 பிற்பகல்

    //உங்கள் கவிதை எனக்கு பிடித்திருக்கு ..
    “உன் சம்மதத்தை கவிதையாய் வடிக்க வேண்டாம் ஒரு முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே போதும்” என்கிற வரி நன்றாக இருக்கிறது//

    மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். :)

  5. guhan சொன்னது,

    ஏப்ரல் 16, 2008 இல் 4:06 பிற்பகல்

    கவிஞர் சேவியருக்கு ,

    உன்
    ஓசையின் கைப்பிடிச்சுவரை
    எட்டிப் பிடிக்கும் ஆசையில்
    எனக்குள்
    ஏக்கங்களின்
    குதிரைக் குளம்படிகள்.

    சரித்திரக் கதைகள் படிக்கும் போது மட்டுமே கண்ணுக்கு பரிச்சயப்படும் அழகிய வார்த்தையான ” குதிரைக் குளம்படிகள்” என்னும் சொல்லை கவிதையில் கையாண்டு இருக்கும் விதம் பாராட்டுதற்கு உரியது .

    என்னைக் காதலிப்பதாய்
    சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
    நான்
    காதலிப்பதாய்
    புரிந்து கொண்டாயெனில் போதும்.

    யாருமே இல்லாத வீட்டுக் கதவைத் தட்டி , சத்தம் போட்டு கூப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனைப் பார்க்கும் போது ஏற்படும் பரிதாப உணர்வு மேற்சொன்ன வரிகளைப் படிக்கையில் நெஞ்சினுள் நுழைகிறது .

    உன்
    சம்மதத்தை
    கவிதையாய் வடிக்க வேண்டாம்
    ஒரு
    முத்தத்தால் ஒத்துக் கொண்டாலே
    போதும்

    “நான் இன்று விரதம் , கோழி வேண்டாம் அதன் ரசத்தை மட்டும் இடு ” என்ற பழமொழி வாசிக்க நேர்கையில் ஏற்படும் நகைச்சுவையை உங்கள் கடைசி பத்தி கற்பனை கொடுக்கிறது .

    அனைத்து வரிகளும் மிகவும் அடர்த்தியான வரிகள் !!!!!!!
    வாழ்த்துக்கள் சேவியர்!!!!!!

    அன்புடன்
    குகன்

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 16, 2008 இல் 5:07 பிற்பகல்

    மனமார்ந்த நன்றிகள் குகன். உங்கள் விரிவான அலசல் எப்போதும் மிகப்பெரிய உந்துதலைத் தருகிறது. நன்றிகள் பல.


மறுமொழியொன்றை வழங்குக