கவிதை : கவிதைகள்

Tags:

அரைகுறையாய்
இருக்கின்றன
ஏராளம் கவிதைகள்.

அவசரமாய்
முளைவிட்டு
வெயிலில் கருகி விடும்
பாறை மேல் விழுந்த
விதையைப் போல.

முடிக்கப்பட்டால்
அவை
அற்புதக் கவிதைகளாய்
இருக்கக் கூடும்.

நீண்டு கொண்டே
இருக்கின்றன
சில கவிதைகள்.

எங்கேனும் நிறுத்த முடிந்தால்
சிறப்பான கவிதைகளாய்
அவை
சிறகடிக்கக் கூடும்.

துவங்க முடியாமலேயே
கிடக்கின்றன
பல கவிதைகள்
துவங்கி விட்டால்
தரமான கவிதைகளாய் அவை
நிலைக்கக் கூடும்.

எழுதிய கவிதைகளை விட
எழுதாத கவிதைகளே
எப்போதும்
எழுத வைத்துக் கொண்டிருக்கின்றன.

6 மறுமொழிகள்

  1. Uma maheswari சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 11:28 நான்

    thinam oru kaivthaiyahipona manithanin valkail ipadiyellam oru kavithaiyai thinamum rasika nernthal nichayam thaniyoruvarin valvum alagana eluthakavithaigale nanru…………..padaipaliku valthukal

  2. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 11:31 நான்

    மனமார்ந்த நன்றிகள் உமா :)

  3. மதுசூதனன் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 11:55 நான்

    எழுதிய கவிதைகளை விட
    எழுதாத கவிதைகளே
    எப்போதும்
    எழுத வைத்துக் கொண்டிருக்கின்றன.

    அருமையான வரிகள்….

  4. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 12:12 பிற்பகல்

    மனமார்ந்த நன்றிகள் மதுசூதனன்.

  5. விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 12:35 பிற்பகல்

    //அரைகுறையாய்
    இருக்கின்றன
    ஏராளம் கவிதைகள்.//

    ஆடை அல‌ங்கார‌ம் செய்துவிடுங்கள். பருவம் வந்தால் பாழாய் போய்விடும்.

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 1:55 பிற்பகல்

    அட.. கவிதையைக் கூட விட்டு வைக்க மாட்டீங்க போல :)

மறுமொழியொன்றை வழங்குக