கவிதை : கடவுளின் குழப்பம்

விறகு உலர்த்திக் கொண்டே
அம்மா
மழை வரக்கூடாதே
என்றும்,

நடவு முடித்த மாமா
கொஞ்சமாய்
தூறலேனும் விழட்டுமே என்றும்.

ஒரே கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்
தனித் தனியாய்.

நான் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறுமனே.

 

2 மறுமொழிகள்

  1. Senthil Kumar சொன்னது,

    மே 14, 2008 இல் 11:28 மு.பகல்

    ஆஹா…
    அருமையான வரிகள்…

    Senthil,
    Bangalore

  2. சேவியர் சொன்னது,

    மே 14, 2008 இல் 4:11 பிற்பகல்

    நன்றி செந்தில் :)


மறுமொழியொன்றை வழங்குக