கவிதை : முதல் பார்வையில் காதல் வருமா ?

 

ஒரு தடவை பார்த்ததும்
காதல் வருமா ?
கேட்கிறாய் மெல்ல என் காதைக் கடித்து.

இல்லையே.
காதலிக்கத் துவங்கும் முன்
உன்னை
இரண்டுதடவை பார்த்திருக்கிறேனே.

அப்பாக்கு காதல் பிடிக்காதாம் !
சோகத்துடன் சொல்கிறாய்.

இந்த வயதுக்கு மேல
அப்பாக்கு எதுக்கு காதல் ?
இயல்பாய் தான் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறாய்.

நல்லவேளை
அப்பாவுக்கு காதல் பிடிக்கவில்லை.

இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.

உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.

வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.

அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘  என்கிறேன்.

 

22 மறுமொழிகள்

  1. சதீஷ் சொன்னது,

    மே 16, 2008 இல் 7:01 பிற்பகல்

    ரசிகர்கள்: சேவியர் சார், நீங்க நல்லவரா கெட்டவரா?
    சேவியர் : தெரியலியேப்பா !

  2. சேவியர் சொன்னது,

    மே 16, 2008 இல் 7:05 பிற்பகல்

    கவிதைக்குப் பொய்யழகாமே … யாரோ சொன்னாங்க :D

  3. vijaygopalswami சொன்னது,

    மே 16, 2008 இல் 8:04 பிற்பகல்

    அதான் சொல்லிட்டாருல்ல வரும்னு….

    அப்புறம் என்ன பொய்யழகு, புண்ணாக்கு அழகு?

    கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…

    சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….

  4. மே 16, 2008 இல் 8:45 பிற்பகல்

    இது காம காதல்
    கசமுசா காதல்

  5. மே 16, 2008 இல் 8:46 பிற்பகல்

    //சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….//

    தொடா… சொல்லிடாரு… மகா ஜனங்களே கேட்டுகுங்க…

  6. மே 16, 2008 இல் 8:48 பிற்பகல்

    //உன் தோழியர் யாரும்
    அந்த பட்டியலில் இல்லாததால்
    பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
    இல்லை…என்று.//

    கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

  7. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 2:39 மு.பகல்

    விக்கி,

    நீ படத்த மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்து ஆளுன்னு தெரியாம போச்சே!!!

  8. kalyanakamala சொன்னது,

    மே 17, 2008 இல் 9:23 மு.பகல்

    அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    இந்த ஜம்பமெல்லாம் இனி சாயாது. கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
    ஜாக்கிரதை!
    கமலா

  9. மே 17, 2008 இல் 1:38 பிற்பகல்

    //அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    ஒலிக்கும் குரலை அடக்கி,
    ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

    யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…

  10. மகாராஜா சொன்னது,

    மே 17, 2008 இல் 1:40 பிற்பகல்

    ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
    ஐயோ……முடியலடா..சாமி..

  11. uumm சொன்னது,

    மே 17, 2008 இல் 2:13 பிற்பகல்

    செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…

  12. vijaygopalswami சொன்னது,

    மே 17, 2008 இல் 2:23 பிற்பகல்

    ///
    செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…
    ///

    நீங்க அவர சபிக்கிறீங்களா, வாழ்த்துறீங்களா?

    பு.த.செ.வி. (புரியல, தயவு செய்து விளக்கவும்)

  13. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:02 மு.பகல்

    //கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…

    //

    அதானே :)

  14. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:02 மு.பகல்

    //இது காம காதல்
    கசமுசா காதல்//

    இது பதிலா, விமர்சனமா, கருத்தா, கவிதையா என்பது விளங்கும் வரை நான் மூச்சு விடப் போவதில்லை :D

  15. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:04 மு.பகல்

    ////உன் தோழியர் யாரும்
    அந்த பட்டியலில் இல்லாததால்
    பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
    இல்லை…என்று.//

    கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

    —-

    ”இதுக்கு முன்னால
    யாரையாவது காதலிச்சிருக்கியாடா ” – ன்னு தானே கேக்கறாங்க.. இப்போ காதலிக்கிறியா கேக்கலையே…

    இதுல நாக்கு ஏன் கூசுது ?? மாங்கா சாப்பிட்டீங்களோ ???

  16. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:06 மு.பகல்

    ////அந்த
    நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
    மனசுக்குள்
    ஒலிக்கும் குரலை அடக்கி,
    ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

    யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…
    //

    கொஞ்சம் ஜாலியா எடுத்துக்கோங்க அண்ணாத்தே :)

    ஹி…ஹி…

  17. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:07 மு.பகல்

    //ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
    ஐயோ……முடியலடா..சாமி..//

    முடிஞ்சிடுச்சு :(

  18. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:07 மு.பகல்

    //செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…//

    அப்பாடா… நீங்களாவது கவிதையை சரியா புரிஞ்சுகிட்டீங்களே :)

  19. சேவியர் சொன்னது,

    மே 19, 2008 இல் 10:08 மு.பகல்

    //கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
    //

    வாசல்லயே 4 வருஷம்னா கொஞ்சம் அதிகம் தான் :)

  20. Geetha சொன்னது,

    மே 20, 2008 இல் 5:44 பிற்பகல்

    intha kathal enakku theriyathu ana en akka pappa mel uyir avlukkukkum enakkum ulla kalathali oru kavithaiyil slungal pls.

  21. சேவியர் சொன்னது,

    மே 20, 2008 இல் 5:58 பிற்பகல்

    குழந்தைகள் காதல் பத்தி கவிதைகள் எழுதியிருக்கேனே :)

  22. su.siva சொன்னது,

    மே 20, 2008 இல் 7:25 பிற்பகல்

    காதல் பத்தி கவிதைகள் அழுதுகொண்டு


மறுமொழியொன்றை வழங்குக