கவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்

புத்தகம் ஒன்று
கைகளில் இல்லாத மாலைகள்
கைகளே இல்லாதவனிடம்
கிடைத்த
வீணைகள் போல
வீணாய் கழியும்.

எழுத்துக்களை
இழுத்துத் தின்று சாயும்
பொழுதுகளில்,
வயிற்றுப் பசி
வாய்தா அனுப்புவதில்லை.

என்னைத் தொலைக்க
நானே முயலும் போதும்,
என்னைக் கண்டெடுக்க
நானே முனையும் போதும்
புத்தகங்கள் மட்டுமே
கண் முன் வருகின்றன.

வார்த்தைகளில் விழுந்து
பக்கங்களில் புதைபட்டு
கவிதைகளில் கரைந்து
பின்
வெளிவரும்போது விடிந்திருக்கும்,
வானமும், மனமும்.

புத்தகங்களில்லா அறைகள்
காற்றைக் கட்டிவைத்த
கல்லறைகள் தான்.
இல்லையேல்
சிறகுகளை வெட்டிவைத்த
சிறைகள் தான்.

புத்தகங்கள் இல்லையேல்
என்னால்
சுவாசிக்க முடியாதென்று
சிந்தித்த காலங்களும் உண்டு.

ஆனால்,
இப்போதெல்லாம் மாறிவிட்டன.

நான்
கடைசியாய் வாசித்த
பத்திரிகை,
என்
கல்யாணப் பத்திரிகையென்று
நினைவு.

12 மறுமொழிகள்

  1. முகுந்தன் சொன்னது,

    மே 29, 2008 இல் 8:59 பிற்பகல்

    ரொம்ப மோசம் சேவியர். கடைசியாக வாசித்த பத்திரிக்கை கல்யாண பத்திரிக்கைனு எழுதி அதனால தான் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்டதுபோல் எழுதி இருக்கிறீர்கள் :-)

  2. சேவியர் சொன்னது,

    மே 30, 2008 இல் 12:13 பிற்பகல்

    நகைச்சுவையாய் எடுத்துக் கொள்ளுங்களேன் :)

  3. guhan சொன்னது,

    மே 30, 2008 இல் 1:54 பிற்பகல்

    உங்கள் வருத்தம் நன்றாக புரிகிறது , சேவியர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    இருந்தாலும் , என்ன செய்ய ? :-)

    நட்புடன்
    குகன்

  4. சேவியர் சொன்னது,

    மே 30, 2008 இல் 2:04 பிற்பகல்

    :)

  5. bloggersiva சொன்னது,

    மே 30, 2008 இல் 2:24 பிற்பகல்

    how could you say this is a poem,
    absolutely this is an joke,
    “Thaangal solla vanda karuthai sollamal, Ilai maraikayaga ungal vaalkayai cholli irukireergal, Endraalum ungal munaipirku, enadhu ulamaarndha paaratukkal.”
    “3 & 4 m pathiyin eluthukkal arumai, ange thaan thaangal, ungalin aalnda arivai velipaduthi yirukireergal”

  6. bloggersiva சொன்னது,

    மே 30, 2008 இல் 2:26 பிற்பகல்

    “idhu oru podhuvaana pinnottam, “Alasalukku Vaanga” ok, adenna alasalukkedharku, aabasa padam.”

    Vindhai manidaraiya neer.

  7. சேவியர் சொன்னது,

    மே 30, 2008 இல் 2:30 பிற்பகல்

    //“3 & 4 m pathiyin eluthukkal arumai, ange thaan thaangal, ungalin aalnda arivai velipaduthi yirukireergal”//

    நன்றி சிவா :)

  8. சேவியர் சொன்னது,

    மே 30, 2008 இல் 2:31 பிற்பகல்

    //“idhu oru podhuvaana pinnottam, “Alasalukku Vaanga” ok, adenna alasalukkedharku, aabasa padam.”

    Vindhai manidaraiya neer.
    //

    ஆபாசப் படமா ?

    பாசமாய் ஒரு மலருடன் காதலனுக்குக் காத்திருக்கும் காதலியின் படமய்யா அது..

    இருந்தாலும் நீர் குசும்புக் காரன் தான் சீயான்.

  9. Divya சொன்னது,

    மே 30, 2008 இல் 10:44 பிற்பகல்

    Good one:)))

  10. சேவியர் சொன்னது,

    ஜூன் 2, 2008 இல் 1:07 பிற்பகல்

    நன்றி :)

  11. shangaran சொன்னது,

    ஜூன் 3, 2008 இல் 2:04 பிற்பகல்

    Arumaiyana kavi…

    best wishes…

  12. சேவியர் சொன்னது,

    ஜூன் 4, 2008 இல் 4:49 பிற்பகல்

    நன்றி சங்கரன் :)


மறுமொழியொன்றை வழங்குக