தினசரி காலையில்
விரல் வருடி ஊர்ஜிதப் படுத்துகிறேன்
இன்னும்
முளைக்கவில்லை மொட்டு.
தரையில் ஈரமிருக்கிறதா
தேவைக்கு பச்சையம் இருக்கிறதா
என
பரிசோதனைப் பார்வைகளைப்
பதியமிடுகிறேன்.
உரங்களுக்கும்
மண்புழுக்களுக்கும் கூட
ஏற்பாடு செய்து
பூக்கள் வேண்டி
பிரார்த்தனைகளும் செய்தாயிற்று.
செழித்து வளரும்
செடியில்
எங்கும் மொட்டுகளைக் காணோம்.
பூக்களைக் காணும்
கனவுகள் வெறித்து
கரு விழிகள் இரண்டிலும் கூட
பூக்கள் விழுந்து விட்டன.
பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல்
புன்னகைத்துக் கொண்டே
செழித்து வளரும்
செடி
முகத்தை வருடி வரவேற்கிறது.
ஆனந்தமாய் அசைந்தாடும்
செடிகளுக்குப் புரிவதில்லை
மனிதனின் தேவை
செடிகளல்ல
பூக்கள் என்பது.
ஃ










Mukundan சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 1:06 பிற்பகல்
//பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல்
புன்னகைத்துக் கொண்டே
செழித்து வளரும்
செடி
முகத்தை வருடி வரவேற்கிறது.
ஆனந்தமாய் அசைந்தாடும்
செடிகளுக்குப் புரிவதில்லை
மனிதனின் தேவை
செடிகளல்ல
பூக்கள் என்பது.
//
என்ன செய்வது ??
மனிதன் எப்பொழுதுமே கொடுத்தலை விட எடுத்தலிலேயே கவனமாக இருக்கிறான்….
uumm சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 1:51 பிற்பகல்
very nice
சேவியர் சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 2:18 பிற்பகல்
மிக்க நன்றி முகுந்தன்
சேவியர் சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 2:19 பிற்பகல்
நன்றி உமா.
இராஜராஜன் சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 4:21 பிற்பகல்
வணக்கம் சேவியர்
\\ ஆனந்தமாய் அசைந்தாடும்
செடிகளுக்குப் புரிவதில்லை
மனிதனின் தேவை
செடிகளல்ல
பூக்கள் என்பது.\\
எவரும் தன்னிடம் மட்டுமே எதையும் எதிர்பார்களாம் மற்றவர்களிடம் இருந்து அல்ல
கவிதை நன்றாக இருந்த்து
நன்றி
shangaran சொன்னது,
ஜூன் 11, 2008 இல் 5:18 பிற்பகல்
Nice to read …
சேவியர் சொன்னது,
ஜூன் 12, 2008 இல் 10:27 மு.பகல்
நன்றி இராஜராஜன்.
சேவியர் சொன்னது,
ஜூன் 12, 2008 இல் 10:27 மு.பகல்
நன்றி சங்கரன்.
ஹேமா சொன்னது,
ஜூன் 12, 2008 இல் 4:46 பிற்பகல்
கவிதை அழகாக இருக்கிறது.என்னைக் குழப்புகிறது.மனிதன் எப்போதும் அழகோடு பேசிக்கொள்பவன்.அதன் ஆணிவேரைப் பற்றிச் சிந்திக்காதவன்.பூக்கள் அழகுதான்.செடி இல்லாமல் பூக்கள் இல்லை.ஒரு நாள் வாழும் பூக்களைத் தாண்டி பசுமை தரும் செடிகளுக்காகவும் ஒரு கணம் ஆனந்தப்படுவோமே!!!
சேவியர் சொன்னது,
ஜூன் 16, 2008 இல் 10:45 மு.பகல்
நன்றி ஹேமா… மனிதன் சுயநல சிந்தனைகளை இயல்பு என்றே எடுத்துக் கொள்கிறான். அது தான் பிரச்சனை !