( சினிமா பாடல் போல… )
நக்கீரா… நக்கீரா…
சங்குதனை அறுத்தாலும் சத்தியம் இதென்றாய்.
மங்கை தன் கூந்தலுக்கு மணமில்லையென்றாய்.
நக்கீரா … நக்கீரா
பொங்குமெழில் எந்தன் மங்கை கண்டதுண்டா நீ – அவள்
கங்கைக்குழல் நுனிவாசம் கொண்டதுண்டா நீ.
1
என் மங்கையவள் மலர் சூடிக் கொண்டதில்லை பார் – அவள்
கூந்தல் சூடிக் கொண்ட நடமாடும் மலர் காண்.
மெல்ல எந்தன் நாசி மீதில் உரசிச் செல்கையில் – ஓர்
சொர்க்க வாசம் உள்ளுக்குள்ளே கரையுடைக்கும் காண்.
சொக்கும் மணத்தின் சொந்தக்காரி - எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி – உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.
2
சாலையோரம் எந்தன் சோலை நடந்து செல்கையில் – அட
பட்டாம் பூச்சிக் கூட்டம் மொய்க்கும் கூந்தல் நிலை காண்
தோட்டம் வந்து மாலை நேரம் படுத்துக் கொள்கையில் – மக
ரந்தம் தேடி வண்டுக் கூட்டம் வட்டமிடும் காண்.
ஏஞ்சல் கூட்டச் சொந்தக்காரி – எனில்
ஊஞ்சல் ஆடும் தென்றல்காரி
நெஞ்சில் ஊறும் வெள்ளை ஏரி – மனம்
கொஞ்சச் சொல்லும் கொள்ளைக்காரி.
0










vikneshwaran சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 8:33 பிற்பகல்
படத்துல இருக்க பொண்ணு யாரு… அழகா இருக்கா??
vikneshwaran சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 8:36 பிற்பகல்
கொங்குதோர் வாழ்க்கை யஞ்சரைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ… இப்படிதானே ஆரம்பிக்கும் இந்த செய்யுள்.
vikneshwaran சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 8:39 பிற்பகல்
இப்பலாம் ரொம்ப போர் டோப்பா முடி தான் போட்டிகிறாங்கலாம்…
vijaygopalswami சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:32 பிற்பகல்
///
கொங்குதோர் வாழ்க்கை யஞ்சரைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ… இப்படிதானே ஆரம்பிக்கும் இந்த செய்யுள
///
ஆமாம் மகனே, இது அந்த செய்யுளின் கடைசி வரி.
சேவியர் சார்,
சிவாஜி எ.பி. நாகராஜனை… மன்னிக்கவும்
சிவபெருமான் நக்கீரனை எரிச்ச சீன் எங்கே?
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 5:17 பிற்பகல்
//படத்துல இருக்க பொண்ணு யாரு… அழகா இருக்கா??//
ஆந்திரா பார்ட்டி… விஜய்க்கு தெரிஞ்சிருக்கும்
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 5:17 பிற்பகல்
//இப்பலாம் ரொம்ப போர் டோப்பா முடி தான் போட்டிகிறாங்கலாம்…
//
முடிவெடுக்கச் சொன்னா
முடி எடுக்கலாம் இல்லையா.. அதுக்குத் தான்
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 5:18 பிற்பகல்
//சிவபெருமான் நக்கீரனை எரிச்ச சீன் எங்கே?
//
தேவையில்லாததை எல்லாம் ஏன் கிளர்றீங்க… !
vijaygopalswami சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 9:01 பிற்பகல்
///
ஆந்திரா பார்ட்டி… விஜய்க்கு தெரிஞ்சிருக்கும்
///
என்னப்பா இது, என்னை ஏதோ பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிக்கிட்டீங்க போல இருக்கு. ஆந்திரால எதோ நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என்னைப் போயி…
பின் குறிப்பு: பொண்ணு பேரு இலியானா
சேவியர் சொன்னது,
ஜூன் 20, 2008 இல் 3:01 பிற்பகல்
சிலிர்க்க வெச்சுட்டீங்க தல