கவிதை : அம்மா

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

(சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து)

29 மறுமொழிகள்

  1. பாலமுருகன்.. சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 10:12 மு.பகல்

    very true.. Really good one..

  2. kunthavai சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 10:18 மு.பகல்

    இந்த வாழ்க்கை நிர்ப்பந்தங்களும், விதியும் என் விஷயத்தில் ரெம்பவே கொடூரமாயிருக்கின்றது. என் அம்மாவின் வாசம் தான் என் கண்ணீரை மட்டுபடுத்தும்.
    காலையிலே அழவச்சிட்டீங்க அண்ணா.

  3. siva சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 12:43 பிற்பகல்

    Vanakam Xevier sir

    “போலியில்லா உன்முகம் பார்த்து
    உன் மடியில் தலைசாய்த்து
    என் தலை கோதும் விரல்களோடு
    வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்”
    me too

    puduvai siva..

  4. சேவியர் சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 2:15 பிற்பகல்

    //very true.. Really good one..//

    நன்றி பாலமுருகன்.

  5. சேவியர் சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 2:17 பிற்பகல்

    //இந்த வாழ்க்கை நிர்ப்பந்தங்களும், விதியும் என் விஷயத்தில் ரெம்பவே கொடூரமாயிருக்கின்றது. என் அம்மாவின் வாசம் தான் என் கண்ணீரை மட்டுபடுத்தும்.
    காலையிலே அழவச்சிட்டீங்க அண்ணா.//

    இயந்திரத்தனமான வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருக்கும் தாய்ப்பாசம் மனித இயல்பை பெருமைப்படுத்துகிறது.

  6. சேவியர் சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 2:18 பிற்பகல்

    //Vanakam Xevier sir

    “போலியில்லா உன்முகம் பார்த்து
    உன் மடியில் தலைசாய்த்து
    என் தலை கோதும் விரல்களோடு
    வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்”
    me too

    puduvai siva..

    //

    வணக்கம் ! நன்றி சிவா :)

  7. vikneshwaran adakkalam சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 3:22 பிற்பகல்

    //கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து//

    புத்தகத்தை கண்ணில் காட்ட மாட்டிங்க போல…

  8. ஹேமா சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 5:00 பிற்பகல்

    ஆயிரம் புத்தகங்களில் இருந்து கிடைக்காத அனுபவப் புத்தகங்கள்.வாழ்வின் வழிகாட்டிகள்.பாசத்தின் பசப்பில்லா உண்மை மனிதர்கள்.நரம்புகள் இறக்கும் வரை இயற்கைத் தெய்வங்கள்.இயல்பு உலகின் இமயங்கள்…..இன்னும் இன்னும்.

  9. முகுந்தன் சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 5:01 பிற்பகல்

    //போலியில்லா உன்முகம் பார்த்து
    உன் மடியில் தலைசாய்த்து
    என் தலை கோதும் விரல்களோடு
    வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

    இந்த
    வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
    வலுக்கட்டாயமாய்
    என் சிறகுகளைப் பிடுங்கி
    வெள்ளையடிக்கின்றன.
    //

    சேவியர்,
    இனி உங்கள் கவிதைகளை படிக்க கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.
    என்னால் அழ முடியவில்லை.

    அம்மாவை பற்றி இன்னொரு நெகிழ்ச்சியான பதிவு.
    படித்து பாருங்கள்

    http://geeths.info/archives/140

  10. முகுந்தன் சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 5:02 பிற்பகல்

    மன்னிக்கவும் , அங்கிருந்த உங்கள் பின்னூட்டத்தை
    இப்பொழுது தான் பார்த்தேன்.

  11. guhan சொன்னது,

    ஜூலை 22, 2008 இல் 8:25 பிற்பகல்

    கவிஞர் சேவியருக்கு,

    “உலக அதிசயங்கள்” பட்டியல் சர்வதேச அமைப்புகள் மூலமாக ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் . ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.

    போலியில்லா உன்முகம் பார்த்து
    உன் மடியில் தலைசாய்த்து
    என் தலை கோதும் விரல்களோடு
    வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

    இந்த
    வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
    வலுக்கட்டாயமாய்
    என் சிறகுகளைப் பிடுங்கி
    வெள்ளையடிக்கின்றன.

    நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!

    நட்புடன்
    குகன்

  12. venkatramanan சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 9:32 மு.பகல்

    ஸேவியர்,
    To disable ’snap’: Presentation –> Extras and uncheck the Snap Preview feature box. Please! BTW, Are you in twitter?

  13. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:02 மு.பகல்

    ///கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து//

    புத்தகத்தை கண்ணில் காட்ட மாட்டிங்க போல…
    //

    ஹி..ஹி.. இந்தியா வரும்போ ஒரு மூட்டை தரேன் :)

  14. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:02 மு.பகல்

    //ஆயிரம் புத்தகங்களில் இருந்து கிடைக்காத அனுபவப் புத்தகங்கள்.வாழ்வின் வழிகாட்டிகள்.பாசத்தின் பசப்பில்லா உண்மை மனிதர்கள்.நரம்புகள் இறக்கும் வரை இயற்கைத் தெய்வங்கள்.இயல்பு உலகின் இமயங்கள்…..இன்னும் இன்னும்//

    அசத்தறீங்க தங்கச்சி..

  15. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:03 மு.பகல்

    //சேவியர்,
    இனி உங்கள் கவிதைகளை படிக்க கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.
    என்னால் அழ முடியவில்லை.

    அம்மாவை பற்றி இன்னொரு நெகிழ்ச்சியான பதிவு.
    படித்து பாருங்கள்

    //

    இதை மிகப்பெரிய பாராட்டாய் எடுத்துக் கொள்கிறேன். நன்றி வருகைக்கும், கருத்துக்கும் நண்பரே.

  16. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:04 மு.பகல்

    //ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.
    //

    மனதைத் தொட்டு விட்டீர்கள் குகன். அருமை.. அருமை.

    //நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!

    நட்புடன்
    குகன்

    //

    நன்றி குகன். நன்றி :)

  17. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:04 மு.பகல்

    //ஸேவியர்,
    To disable ’snap’: Presentation –> Extras and uncheck the Snap Preview feature box. Please! BTW, Are you in twitter//

    டுவிட்டரில் இல்லையே :)

  18. சேவியர் சொன்னது,

    ஜூலை 23, 2008 இல் 10:16 மு.பகல்

    /Presentation –> Extras and uncheck the Snap Preview feature box. Please! BTW, Are you in twitter//

    எங்கே இதைப் பண்ணனும் ??? எதுக்கு ? புரியவில்லை :D நான் கொஞ்சம் மக்கு ;)

  19. venkatramanan சொன்னது,

    ஜூலை 24, 2008 இல் 9:54 மு.பகல்

    Will mail you in detail. Also check http://lorelle.wordpress.com/2007/09/05/how-to-turn-off-snap-preview-on-wordpress-blogs/

  20. K.SIVA(Fr) சொன்னது,

    மே 5, 2009 இல் 5:02 மு.பகல்

    THAAJIN UDALUL UUDDAM PETRU, IRATHAM THANIL IYANKA VAITHA, ITHAYATH THEVATHAI INAIKKU IIDAAJI , EMMAIP PETRAVAL IRAUDAN PAARTHAAIL, THAAJE EMAKKUK KADAVUL ENPEN. “TAAJEE KADAVUL” K.SIVA(Fr)

  21. poornima சொன்னது,

    ஜூன் 1, 2009 இல் 3:49 பிற்பகல்

    amma

  22. RAJAS சொன்னது,

    ஜூலை 11, 2009 இல் 2:06 மு.பகல்

    i love you mother

  23. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:09 மு.பகல்

    நன்றி ராஜாஸ் :)

  24. jagadeeswaran சொன்னது,

    ஜூலை 23, 2009 இல் 1:13 மு.பகல்

    அம்மா.
    ;-00

  25. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:31 மு.பகல்

    வருகைக்கு நன்றி ஜெகதீஷ்வரன்,

  26. றவிசன் சொன்னது,

    அக்டோபர் 4, 2009 இல் 6:53 பிற்பகல்

    அம்மா என்ற அழகிய சொல்லை
    தொலைபெசி ஊடாக தான் நான் அழைக்கிறேன்
    காத்திருக்கிறேன் ஒரு நாள் வரும்…..
    கண்நேதிரெ கண்டதும் அம்மா என்றழைக்க……….

  27. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:20 பிற்பகல்

    அம்மா என்ற அழகிய சொல்லை
    தொலைபெசி ஊடாக தான் நான் அழைக்கிறேன்
    காத்திருக்கிறேன் ஒரு நாள் வரும்…..
    கண்நேதிரெ கண்டதும் அம்மா என்றழைக்க……….//
    :(

  28. sa.sujinthan சொன்னது,

    நவம்பர் 2, 2009 இல் 2:47 மு.பகல்

    இப்போதெல்லாம்
    என் கடிதம் காத்து
    தொலை பேசியின் ஒலிகாத்து
    வாரமிருமுறை
    போதிமரப் புத்தனாகிறாய்
    வீட்டுத் திண்ணையில்.-i love you mother

  29. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 12:55 மு.பகல்

    //.-i love you mother//

    இதைச் சொல்ல வைத்தது தான் கவிதையின் வெற்றி… :)


மறுமொழியொன்றை வழங்குக