ஏதேனும் ஒரு செயல்
சந்தேகப் பொறியை
சொல்லாமல்
பற்ற வைக்கிறது.
ஏதேனும் ஒரு சொல்
சந்தேகப் பொறியாய் மாறி
எலி வாலுக்காய்
வாய் திறக்கிறது.
சொல்
கற்பனையில் வாக்கியங்களை
இடைவிடாமல்
இணைத்து பெருங்கதையாய் மாற,
செயல்
நிகழாதவற்றை
நிதமும் படம்பிடித்து
நீள் படமாயும் நிரம்பி வழிகிறது.
அந்த செயல் குறித்து
அவளோ,
அந்தச் சொல் குறித்து
அவனோ
பேசிக் கொள்ளாத கவலையில்,
மௌனப் படுக்கைக் கால்களருகே
கவிழ்ந்து படுத்து கதறி அழுகின்றன
அந்த
அப்பாவிச் சொல்லும் செயலும்
.









ஹேமா சொன்னது,
ஆகஸ்ட் 15, 2008 இல் 1:59 மு.பகல்
சொற்கள் கூட்டுச் சேர்ந்து செயல்களை உருவாக்கும்.செயல்களின் செய்கையால் சொற்கள் கூட்டுச் சேரும்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்காது என்பது போல்.கவிதையின் கரு சொல்லும் செயலும்.எப்பவும் போல கருத்துள்ள கவிதை.
பாராட்டுக்கள் அண்ணா.
vikneshwaran adakkalam சொன்னது,
ஆகஸ்ட் 17, 2008 இல் 9:10 மு.பகல்
குந்தவை சொன்னது,
ஆகஸ்ட் 17, 2008 இல் 1:28 பிற்பகல்
வழக்கம் போல் அருமையான கவிதை.
சந்தேகபடரதுக்கு இம்புட்டு கற்பனாசக்தி வேணுமா?.
நம்மளால முடியாது சாமி.
எதை பற்றி கவிதை எழுதலாம் என்று உக்காந்து யோசனை பண்ணுவீங்களா?
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 18, 2008 இல் 2:17 பிற்பகல்
/சொற்கள் கூட்டுச் சேர்ந்து செயல்களை உருவாக்கும்.செயல்களின் செய்கையால் சொற்கள் கூட்டுச் சேரும்.ஒன்றில்லாமல் ஒன்று இயங்காது என்பது போல்.கவிதையின் கரு சொல்லும் செயலும்.எப்பவும் போல கருத்துள்ள கவிதை.
பாராட்டுக்கள் அண்ணா//
நன்றி ஹேமா. அருமை
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 18, 2008 இல் 2:18 பிற்பகல்
//வழக்கம் போல் அருமையான கவிதை.
சந்தேகபடரதுக்கு இம்புட்டு கற்பனாசக்தி வேணுமா?.
நம்மளால முடியாது சாமி.
எதை பற்றி கவிதை எழுதலாம் என்று உக்காந்து யோசனை பண்ணுவீங்களா?
//
சும்மா தோணினதை எழுதினேன் தங்கச்சி…
குகன் சொன்னது,
ஆகஸ்ட் 23, 2008 இல் 9:18 மு.பகல்
படைப்பாளி சேவியருக்கு ,
சொல்லையும் செயலையும் அழ வைத்து விட்டு அவர்கள் மட்டும் நிம்மதி படுக்கை மீது படுத்து கொண்டு இருக்க முடியாது. சந்தேகப் பேய் ஓட்டுவதற்கு , அமர்ந்து பேச வேண்டும் என்று உடுக்கை அடிக்காமல் அடித்துள்ளீர்கள் கவிதையில் !!!!!!
//
சொல்
கற்பனையில் வாக்கியங்களை
இடைவிடாமல்
இணைத்து பெருங்கதையாய் மாற,
செயல்
நிகழாதவற்றை
நிதமும் படம்பிடித்து
நீள் படமாயும் நிரம்பி வழிகிறது.//
சந்தேகப்படும் மனசுக்குள் உள் நுழைந்து , அதனோடு உரையாடாவிடில் இப்படி உடைத்து போட்டு,வெட்ட வெளிச்சமாய் எழுத முடியாது . சந்தேகத்தை பற்றிய ஒரு உளவியல் நிபுணரின் கருத்துக்களை கேட்ட படி உள்ளது உண்மையாகவே .
வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!
நட்புடன்
குகன்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 25, 2008 இல் 12:57 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள் குகன்