பிரியமே,
எப்படிச் சாகடிப்பது
உன் நினைவுகளின்
இராவணத் தலைகளை ?
0
மழை பெய்து முடித்த
ஓர் ஈர இரவில்,
அக்ரகாரத்து ஓரத்தில்
அணையாமல் அலையும்
அகல்விளக்காய்,
சுருள் முடிகள் அலைய,
வெளிச்சம் விட்டு
வெளியேறுகின்றன
என் சிந்தனைகள்.
ரோஜாப் பூவின் கழுத்தை
மெல்லமாய் கிள்ளுவதை
காணும் போதெல்லாம்,
சைவக் கிளி
ஏன் பூவைக் கொல்கிறது
என்பாய்,
மருதாணித் தளிர்களை
உதடுகளில் இட்டாயா
என
உத்தரவு தருமுன்
உதடு வருடுவாய்.
இப்போதெல்லாம்
நான்
துளசிச் செடிமீது,
கூந்தல் ஈரத்தை
சொட்டும் போது
அதுவும் என்னோடு அழுவதாய்
அசாதாரணப் பிரமை எனக்கு.
என்
பூஜையறைக் கண்ணீரில்
சமீபகாலமாய்
பக்தியின் நதி பாயாமல்
காதலின்
கடலே கொந்தளிக்கிறது.
உதடுகள் இழுக்கும்
மந்திரங்களின் தேர்கள்
ஓர்
இயந்திரத் தனமாகவே
இயங்குகின்றன.
உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,
நிச்சயமற்ற பச்சையமாய்
சில
நிறக்கலவைகள் நம் வாழ்வில்,
வீற்றிருக்கும் காலங்கள்
என்
காயங்களை
ஆற்றியிருக்கக் கூடும்.
ஏன் தான்
போட்டுத் தொலைத்தாய் ?
உன் மழலைக்கு
என் பெயரை ?










RAVI KUMAR (Kuwait) சொன்னது,
செப்டம்பர் 1, 2008 இல் 1:00 பிற்பகல்
//kathal mutti than kannir varukirathu//
ஹேமா சொன்னது,
செப்டம்பர் 2, 2008 இல் 12:35 மு.பகல்
அழகாய் காட்டியிருக்கிறீர்கள் காதலுக்குத் தடை சாதி வேற்றுமையென்று.குழந்தையின் உருவத்திலாவது அழிக்கப்பட்ட காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 2, 2008 இல் 2:32 பிற்பகல்
////kathal mutti than kannir varukirathu///
ம்ம்ம்…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 2, 2008 இல் 2:33 பிற்பகல்
//குழந்தையின் உருவத்திலாவது அழிக்கப்பட்ட காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது//
காதல் வாழ்ந்து குடும்பம் அழியாமல் இருந்தால் சரி
vikneshwaran adakkalam சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 12:01 பிற்பகல்
படத்தில் இருக்கும் ‘பேபி’ யாரு?
vikneshwaran adakkalam சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 12:03 பிற்பகல்
நமக்கு இந்த மேட்டர் சரி வராது… எத்தன பிள்ளைங்களுக்கு எத்தன பேர் வைக்கிறது… எனக்கே கணக்கு தெரியலயே…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 5:58 பிற்பகல்
//படத்தில் இருக்கும் ‘பேபி’ யாரு?//
ஏதோ மமதாவாம்… மோகன் தாஸாம்.. யாருக்குத் தெரியும்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 5:59 பிற்பகல்
//நமக்கு இந்த மேட்டர் சரி வராது… எத்தன பிள்ளைங்களுக்கு எத்தன பேர் வைக்கிறது… எனக்கே கணக்கு தெரியலயே//
எல்லா பெயரில் இருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுத்து பெயர் வைக்க வேண்டியாது தானே
குகன் சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 6:20 பிற்பகல்
அன்புள்ள சேவியருக்கு.
தொலைநோக்கியால் உற்று நோக்குகையில் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பெயரிடப்படாத வால் நட்சத்திரம் போல,படைப்பின் தலைப்பை உற்றுப் படித்த பின் ,வரிகளைக் கூர்ந்து படிக்கையில் மட்டுமே இது பெண்ணுடைய காதல் வலி பற்றியது என்று உணர வைக்கிறது. எப்படி தங்கத்தை செம்பின் கலப்பிற்கு ஏற்ப தரம் பிரித்து வைக்கிறார்களோ , அதே போல இந்து மதத்தில் கடவுளைக் கூட வெவ்வேறு சாதிகளின் வகைக்கு ஏற்ப பிரித்து வைத்து வழிபடும் துயரம் நிகழ்கிறது என்பதையும், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும்,உயர் சமூகம் சார்ந்த பெண்ணுக்குமான காதல் என்பதையும் ” உன் பத்ரகாளியும் என் அக்ரகாரமும்” என்ற நான்கு சொற்களில் ‘நறுக்’ என நாசூக்காய் குறிப்பிட்டது மிகவும் சிறப்பம்சம்!
சைவக் கிளி
ஏன் பூவைக் கொல்கிறது
என்பாய்,
குழந்தையின் தப்பான மொழி கூட தாய்க்கு கவிதையாக விளங்குவது போல, காதலியின் இயல்பான செயல் கூட காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்.கூடவே ஒரு கேள்வி கொடுக்கும். அந்தக் கேள்வி தான் மேலே குறிப்பிட்ட உங்கள் வரிகள் !!!!!அருமை !!!!!!
நட்புடன்
குகன்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 2:33 பிற்பகல்
//தொலைநோக்கியால் உற்று நோக்குகையில் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பெயரிடப்படாத வால் நட்சத்திரம் போல//
//எப்படி தங்கத்தை செம்பின் கலப்பிற்கு ஏற்ப தரம் பிரித்து வைக்கிறார்களோ//
கலக்கறீங்க குகன்.. இத்தனை உவமைகளோடு பின்னூட்டமிடும் ஒரே நபர் நீங்கள் நான்னு நினைக்கிறேன்.
//குழந்தையின் தப்பான மொழி கூட தாய்க்கு கவிதையாக விளங்குவது போல, காதலியின் இயல்பான செயல் கூட காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்//
வெகு அருமை.
நன்றிகள் பல.
Karthick சொன்னது,
செப்டம்பர் 8, 2008 இல் 6:37 பிற்பகல்
“உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,”
Sadhiyin ratcha naakku kadhalai micham illaamal thingirathai achamillaamal sollkiradhu indha varigal…….
Karthick சொன்னது,
செப்டம்பர் 8, 2008 இல் 6:39 பிற்பகல்
Padathula irukka ponnu peru “Mamtha Mohandas”……Enna madhiri elangargal pala peroda sandegadha thirkka sandharpatha kudutha xavier vazhga……..
Pin Kurippu: Sivapathigaram padathin kadhai naayagi(Tamila sollanumna heroine)….
g.balamurugan சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 6:51 பிற்பகல்
it is useful site regarding your wories in the internet browsing it is acceptable , but this article also comes in the internet. thank u .
g.balamurugan சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 6:52 பிற்பகல்
இணைய பழக்கத்துக்கு அடிமையாதல் ( Internet Addiction Disorder – IAD ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இணையத்தில் உலவத் தோன்றும், நள்ளிரவில் எழும்பி மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்க்கத் தோன்றும், இணைய இணைப்பு இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல் தோன்றும், சாப்பிட மறந்து போகும் என விளக்குகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிக்கோ, ஆலோசனைக்கோ வழி செய்தல் அவசியம்.
g.balamurugan சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 6:54 பிற்பகல்
வெகு அருமை.
நன்றிகள் பல
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 6:58 பிற்பகல்
//“உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,”
Sadhiyin ratcha naakku kadhalai micham illaamal thingirathai achamillaamal sollkiradhu indha varigal…….
//
நன்றி நண்பரே…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 6:59 பிற்பகல்
/Padathula irukka ponnu peru “Mamtha Mohandas”……Enna madhiri elangargal pala peroda sandegadha thirkka sandharpatha kudutha xavier vazhga……..
Pin Kurippu: Sivapathigaram padathin kadhai naayagi(Tamila sollanumna heroine)….
//
அட,,, நிறைய மேட்டர் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க… ம்ம்ம்ம்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 7:00 பிற்பகல்
/it is useful site regarding your wories in the internet browsing it is acceptable , but this article also comes in the internet. thank u .//
திருநெல்வேலிக்கே அல்வாங்கறது இது தான்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 7:00 பிற்பகல்
//வெகு அருமை.
நன்றிகள் பல
//
நன்றி பாலா.
g.balamurugan சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 7:28 பிற்பகல்
than u my friend.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2008 இல் 10:29 மு.பகல்
நன்றி பாலா சார்.
fvnfnv சொன்னது,
மே 29, 2009 இல் 7:31 பிற்பகல்
v