கவிதை : காதல் செய்.

காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.

தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.

நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.

ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.

பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.

கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.

பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.

இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.

புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.

காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.

27 மறுமொழிகள்

  1. விக்னேஸ்வரன் சொன்னது,

    செப்டம்பர் 23, 2008 இல் 9:47 பிற்பகல்

    ஜூப்பர்…

  2. விக்னேஸ்வரன் சொன்னது,

    செப்டம்பர் 23, 2008 இல் 9:49 பிற்பகல்

    //புலன்களுக்குச்
    சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,//

    சொடுக்கெடுக்கும் எனும் வார்த்தை இங்க போட்டிருப்பது நல்லா இருக்கு…

    நீங்கள் சொன்னதினால் ஒரு கவிதை தயார்… நாளை பதிவு… மறக்காமல் பார்க்கனும்…

  3. aruna சொன்னது,

    செப்டம்பர் 23, 2008 இல் 11:41 பிற்பகல்

    //காதலியுங்கள்,
    காதல்
    நாட்டிய மலர்களின் நந்தவனம்.
    தாண்டி வந்த திருப்தி
    தோல்வியிலும் தொடரும்.//

    அருமை..உண்மையும் கூட…
    அன்புடன் அருணா

  4. செப்டம்பர் 24, 2008 இல் 12:53 மு.பகல்

    [...] varun has written a new interesting post: [...]

  5. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 24, 2008 இல் 4:11 மு.பகல்

    சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல,மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 24, 2008 இல் 5:47 பிற்பகல்

    //சொடுக்கெடுக்கும் எனும் வார்த்தை இங்க போட்டிருப்பது நல்லா இருக்கு…
    //

    நன்றி விக்கி :)

    //

    நீங்கள் சொன்னதினால் ஒரு கவிதை தயார்… நாளை பதிவு… மறக்காமல் பார்க்கனும்…

    //

    படித்தேன், ரசித்தேன்… :)

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 24, 2008 இல் 5:48 பிற்பகல்

    ////காதலியுங்கள்,
    காதல்
    நாட்டிய மலர்களின் நந்தவனம்.
    தாண்டி வந்த திருப்தி
    தோல்வியிலும் தொடரும்.//

    அருமை..உண்மையும் கூட…
    அன்புடன் அருணா
    /

    நன்றி அருணா :)

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 24, 2008 இல் 5:58 பிற்பகல்

    //சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி காதலின் உணர்வு காற்றில் இலவம் பஞ்சு பறப்பதுபோல,மென்மையான…. தள்ளாட்டமான ஒரு மயக்கம்தானே!/

    மயக்கம் ! சரியான வார்த்தை :)

  9. adaleru சொன்னது,

    செப்டம்பர் 25, 2008 இல் 4:22 பிற்பகல்

    ரசனை !

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 26, 2008 இல் 2:36 பிற்பகல்

    நன்றி அடலேறு !

  11. pradeepa சொன்னது,

    செப்டம்பர் 26, 2008 இல் 2:37 பிற்பகல்

    Ya its very fantastic poem.I m also very much interested in writing poems.But this love poem is very impressed me a lot. Definitely that’s a true thing.
    _____________
    pradeepa

    Sreevysh Corp

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 26, 2008 இல் 3:23 பிற்பகல்

    மிக்க நன்றி பிரதீபா :)

  13. பெயரிலி சொன்னது,

    அக்டோபர் 7, 2008 இல் 1:52 மு.பகல்

    ad

  14. பெயரிலி சொன்னது,

    அக்டோபர் 7, 2008 இல் 1:53 மு.பகல்

    nice kavithai

  15. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 8, 2008 இல் 2:18 பிற்பகல்

    நன்றி :)

  16. satheesh சொன்னது,

    அக்டோபர் 14, 2008 இல் 7:14 பிற்பகல்

    innum konjam tripe pannunga

  17. satheesh சொன்னது,

    அக்டோபர் 14, 2008 இல் 7:16 பிற்பகல்

    Muyarchi pannina mudiyathathu illappa. puriyuthu 10 person’s kitta kavithaya thiruvi onnu seathurukkenga. Summa jokemma very Nice.

  18. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 16, 2008 இல் 6:51 பிற்பகல்

    :) ;)

  19. vinmathi சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 3:07 பிற்பகல்

    nalla erukkerathu but urai nadipola erukku kavithai pola ?

  20. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 25, 2009 இல் 6:10 பிற்பகல்

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வின்மதி :)

  21. raj சொன்னது,

    ஏப்ரல் 28, 2009 இல் 3:30 மு.பகல்

    very nice this…………………….

  22. K.SIVA (Fr) சொன்னது,

    மே 1, 2009 இல் 2:32 மு.பகல்

    Poovin Vaasanajil Thenai Undu, Ptanduda Thoor Marakantham, Kaalai Nulaitha Thaail Karuvinaip Perave, Anniyan Kaijil Kaniyaathal Kanden.

  23. சேவியர் சொன்னது,

    மே 4, 2009 இல் 9:22 பிற்பகல்

    //Poovin Vaasanajil Thenai Undu, Ptanduda Thoor Marakantham, Kaalai Nulaitha Thaail Karuvinaip Perave, Anniyan Kaijil Kaniyaathal Kanden.//

    தமிழ்ல எழுதுங்க சிவா… இன்னும் மெருகு கூடும் !

  24. சேவியர் சொன்னது,

    மே 4, 2009 இல் 9:27 பிற்பகல்

    மிக்க நன்றி ராஜ் :)

  25. K.SIVA(Fr) சொன்னது,

    மே 5, 2009 இல் 5:48 மு.பகல்

    NANRI ” thamilil eeluthauth cej viirkalaa? ” ITHU EN ETHIR PAARPU.(- NANRI-serviyar avarkale)


மறுமொழியொன்றை வழங்குக