எத்தனை
விலையுயர்ந்த
வாழ்த்து அட்டை அனுப்பினாலும்
உன்
விரலெழுதிய வரிகளைத் தான்
திரும்பத் திரும்ம
வாசித்துச் சிலிர்க்கும்
மனம்.
ஏதும் எழுதாமல்
நீ அனுப்பும்
பகட்டு அட்டையை விட
நீ
ஏதேனும் கிறுக்கி அனுப்பும்
தபால் அட்டை
மிக அழகு.
அழகழகாய்
அடுக்கி வைத்து
நீ
அனுப்பும் பூங்கொத்தை விட
உன்
சீண்டல் பூக்கவைக்கும்
பூக்கள் கொள்ளை அழகு.
தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.
சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.










ponmudi சொன்னது,
அக்டோபர் 3, 2008 இல் 8:32 பிற்பகல்
kavithi kavithi aagaaa ……..
தங்கராசா -ஜீவராஜ் சொன்னது,
அக்டோபர் 3, 2008 இல் 8:50 பிற்பகல்
///தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.//
மென்மையான நல்ல கவிதை
aruna சொன்னது,
அக்டோபர் 3, 2008 இல் 9:18 பிற்பகல்
//தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு//
என்ன அருமையான உணர்வுகள்……அழகுதான்…
அன்புடன் அருணா
koothanallur nizam சொன்னது,
அக்டோபர் 4, 2008 இல் 12:41 மு.பகல்
சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.
unmail en manaivi ennidam sonnavai
bala சொன்னது,
அக்டோபர் 4, 2008 இல் 12:21 பிற்பகல்
anna arumaiyana pathivu .
final touch thaan intha pathivoda highlight
naan tharpotulla illan padaipalikalil ” thabu sanker. sezhian,yugabharathi,na.muthukumar apuram thaangal” udaya rasigan
nandri
bala
சேவியர் சொன்னது,
அக்டோபர் 6, 2008 இல் 11:01 மு.பகல்
//kavithi kavithi aagaaa ……..
//
நன்றி பொன்முடி
சேவியர் சொன்னது,
அக்டோபர் 6, 2008 இல் 11:07 மு.பகல்
/////தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு.//
மென்மையான நல்ல கவிதை//
மிக்க நன்றி நண்பரே
சேவியர் சொன்னது,
அக்டோபர் 6, 2008 இல் 11:07 மு.பகல்
////தொலைபேசியில்
ஒலிக்கும்
உன் குரலை விட
உன்னோடு அமர்ந்திருக்கும்
மெளனம் தான்
அழகெனக்கு//
என்ன அருமையான உணர்வுகள்……அழகுதான்…
அன்புடன் அருணா
//
மிக்க நன்றி அருணா
சேவியர் சொன்னது,
அக்டோபர் 6, 2008 இல் 11:10 மு.பகல்
//
சீக்கிரம் வந்து விடு
தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு.
unmail en manaivi ennidam sonnavai
//
சேவியர் சொன்னது,
அக்டோபர் 6, 2008 இல் 11:12 மு.பகல்
//anna arumaiyana pathivu .
final touch thaan intha pathivoda highlight
naan tharpotulla illan padaipalikalil ” thabu sanker. sezhian,yugabharathi,na.muthukumar apuram thaangal” udaya rasigan
nandri
bala
//
மிக்க நன்றி பாலா. இந்த வரிசையை தலைகீழாக வாசித்தால் என் ரசனைக்குரியவர்களின் வரிசை வரும்
உங்கள் பின்னூட்டம் மனதுக்கு நிறைவளிக்கிறது ! நன்றிகள் மீண்டும்.
THAMBI சொன்னது,
அக்டோபர் 7, 2008 இல் 12:39 பிற்பகல்
PIRICHUTTEENGA NANBA
Nithil சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 1:03 பிற்பகல்
” தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு ”
வந்தபின் செலவாகப்போவது காதல்மட்டுமல்ல, கரன்சியும்தான்…
நித்தில்
விக்னேஷ்வரன் சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 1:09 பிற்பகல்
ஆஹா சூப்பரு… இதை ஆண் பெண்ணிடம் சொன்னால் கூட சரியாக அமையும்… இதை பிரிண்ட் எடுத்து பொண்ணுங்ககிட்ட் ஐப்படி பேசுங்கடானு நாலு பசங்ககிட்ட கொடுத்தா என்னனு தோணுது?
சேவியர் சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 2:04 பிற்பகல்
//PIRICHUTTEENGA NANBA
//
ரொம்ப நன்றி தம்பி
சேவியர் சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 2:05 பிற்பகல்
// தூர தேசத்தில்
கரன்சி சேமித்தது போதும்.
வந்தென் கரம் உரசி
சேமித்த காதலைச் செலவிடு ”
வந்தபின் செலவாகப்போவது காதல்மட்டுமல்ல, கரன்சியும்தான்…
நித்தில்
//
எனினும் வாழ்வின் முதன்மை உறவுகளில் இருக்க வேண்டும். கரன்சிகள் வெறும் கருவிகள் மட்டுமே !
சேவியர் சொன்னது,
அக்டோபர் 8, 2008 இல் 2:06 பிற்பகல்
//ஆஹா சூப்பரு… இதை ஆண் பெண்ணிடம் சொன்னால் கூட சரியாக அமையும்… இதை பிரிண்ட் எடுத்து பொண்ணுங்ககிட்ட் ஐப்படி பேசுங்கடானு நாலு பசங்ககிட்ட கொடுத்தா என்னனு தோணுது//
ஐடியா கொடுத்தவன் எவண்டா ன்னு கேட்டா என் பெயரைச் சொல்லாம இருந்தீங்கன்னா ஓக்கே !
people call me Paul சொன்னது,
அக்டோபர் 15, 2008 இல் 11:23 பிற்பகல்
கவிதை அருமை… அதிலும் கடைசி ஐந்து வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 16, 2008 இல் 6:50 பிற்பகல்
மிக்க நன்றி பால்.
geeva சொன்னது,
நவம்பர் 5, 2008 இல் 2:33 பிற்பகல்
i like. thanks
சேவியர் சொன்னது,
நவம்பர் 9, 2008 இல் 12:07 பிற்பகல்
நன்றி ஜீவா,,,