காளான் கவிதை !

mushrooms

மழைத் துளி விதைகளில்
விழித்தெழும் காளான்கள்
மர அடிவாரங்களில்
மழை விட்டபின் குடைவிரிக்கும்

எந்த காளான் நல்லதென்று
தொட்டுப் பார்த்தும்,
கிள்ளிப் பார்த்தும்
வடிவம் பார்த்தும்
அடிப்பாகத்தின் நிறத்தைப் பார்த்தும்
பட்டென சொல்வார்
ஞானம்மா பாட்டி.

எந்த மரத்தடியில்
நல்ல காளான் முளைக்குமெனும்
காளான் வரலாறு
பாட்டிக்கு அத்துப்படி.

தாவர ஈசலாய்
தலைநிமிரும் காளான்கள்
பசிக்கும் கிராமத்துக்கு
இலவச உணவாகும்.

ரப்பர் பால் கசியும்
கிராமத்து மண் வெளிகளில்
இப்போதெல்லாம்
காளான்கள் முளைப்பதில்லை.

நகரத்திலோ,
பூவா, இலையா, செடியா
இதுவென
யோசித்துக் குழம்பும்
தற்காலத் தலைமுறைக்கு
காளான் என்பதே
காதால் கேளாத பெயர்ச்சொல்.
 
அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம்
ஃபுட் வேல்ட்களின்
பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
பாவப்பட்ட
“மஷ்ரூம்”கள் மட்டுமே.

21 மறுமொழிகள்

  1. Bee'morgan சொன்னது,

    டிசம்பர் 10, 2008 இல் 5:09 பிற்பகல்

    நல்லா இரக்கு சேவியர்.. தாவர ஈசலாய், மழைத் துளி விதை, மழை விட்டபின் குடைவிரிக்கும் என காளான் பற்றிய எல்லா வர்ணனையுமே யோசிக்க வைக்கும் ரகம்.. :-)

  2. aruna சொன்னது,

    டிசம்பர் 10, 2008 இல் 9:21 பிற்பகல்

    //பாலிதீன் பைகளில் மூச்சுத் திணறும்
    பாவப்பட்ட
    “மஷ்ரூம்”கள் மட்டுமே//

    அழகு சேவியர்.
    அன்புடன் அருணா

  3. ஹேமா சொன்னது,

    டிசம்பர் 10, 2008 இல் 10:07 பிற்பகல்

    அண்ணா வந்தாச்சா.சுகம்தானே?நானும் நல்ல சுகம்.நிறைய விஷயங்கள் கொண்டு வந்திருப்பீங்க.எதிர்பார்த்திருக்கிறேன்.உங்கள் கவிதைகள் இல்லாமல் கவிதைச்சாலை வெறிச்சோடிக் கிடக்கு.

    எங்கள் குழந்தைகளுக்கு காளான் மட்டுமா தெரியவில்லை.
    இன்னும் இன்னும் எங்கள் எத்தனையோ மூத்தோரின் எச்சங்கள் எல்லாமேதானே!

  4. sathanga சொன்னது,

    டிசம்பர் 11, 2008 இல் 6:11 மு.பகல்

    //மழைத் துளி விதைகளில்
    விழித்தெழும் காளான்கள்
    மர அடிவாரங்களில்
    மழை விட்டபின் குடைவிரிக்கும்//

    வாவ், கலக்கல் வரிகள்.

  5. அமுதா சொன்னது,

    டிசம்பர் 11, 2008 இல் 11:44 மு.பகல்

    நன்றாக உள்ளது.

  6. டிசம்பர் 11, 2008 இல் 5:54 பிற்பகல்

    ///பட்டென சொல்வார்
    ஞானம்மா பாட்டி……..
    காளான் வரலாறு
    பாட்டிக்கு அத்துப்படி//

    .. நகரத்து வாழ்வில் நாம் தொலைத்தவை அதிகம்..
    அருமையான வரிகள்……..

    அன்புடன் ஜீவன்…

  7. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:00 பிற்பகல்

    மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

  8. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:01 பிற்பகல்

    நன்றி அமுதா :)

  9. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:01 பிற்பகல்

    நன்றி சாதங்க…. உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்.

  10. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:04 பிற்பகல்

    ஹேமா தங்கையே….எப்படி இருக்கீங்க…. அலுவல் அழுத்தம் கொஞ்சம் இன்னல் கொடுக்கிறது :) உங்கள் அன்புக்கு நன்றி :)

  11. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:04 பிற்பகல்

    நன்றி அருணா :)

  12. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 3:04 பிற்பகல்

    மிக்க நன்றி பீமார்கன். :)

  13. அனுஜன்யா சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 8:12 பிற்பகல்

    எப்போது திரும்பி வந்தீர்கள் சேவியர்? அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

  14. குந்தவை சொன்னது,

    டிசம்பர் 13, 2008 இல் 8:59 மு.பகல்

    Welcome back Anna.

  15. Ravi kumar (kuwait ) சொன்னது,

    டிசம்பர் 13, 2008 இல் 1:45 பிற்பகல்

    /// Vanakkam * Vanthanam * Namaskaram * ///

  16. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:14 பிற்பகல்

    //Welcome back Anna.//

    மிக்க நன்றி குந்தவை

  17. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:42 பிற்பகல்

    /எப்போது திரும்பி வந்தீர்கள் சேவியர்? அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா
    //

    மிக்க நன்றி அனுஜன்யா… வார இறுதியில் தான் வந்தேன் :)

  18. Karthick சொன்னது,

    டிசம்பர் 16, 2008 இல் 4:31 பிற்பகல்

    Vanakkam Thozhale…..

    America payanam ellam nalla padiya mudinjirucha?????

    Kaalaanai varnitha vidham arumai…..adhuvum
    ரப்பர் பால் கசியும்
    கிராமத்து மண் வெளிகளில்
    இப்போதெல்லாம்
    காளான்கள் முளைப்பதில்லை.

    Naama kaalaanai mattum alla-indiyavin
    Nalla gramangalaiyum tholaikundirukurom nu arumaiya unarthugiradhu…

    Vazthukkal Thozhale….

    Karthick

  19. Karthick சொன்னது,

    டிசம்பர் 16, 2008 இல் 5:01 பிற்பகல்

    Vanakkam Thozhale….

    America payanam nalla padiya mudinchirucha?

    Kaalaanai pattriya varnanai megavum arumai….adhilum
    ரப்பர் பால் கசியும்
    கிராமத்து மண் வெளிகளில்
    இப்போதெல்லாம்
    காளான்கள் முளைப்பதில்லை.

    indha varigal,

    Naam kaalaanai mattum alla-indiyavil
    Nalla gramangalaiyum illapathi unarthigiradhu…..

    Vazthukkal thozhare….

    Karthick

  20. uumm சொன்னது,

    டிசம்பர் 24, 2008 இல் 1:48 பிற்பகல்

    மிக..மிக..அருமை.

  21. kavinilavu சொன்னது,

    ஜனவரி 2, 2009 இல் 6:12 பிற்பகல்

    very super


மறுமொழியொன்றை வழங்குக