தள்ளுபடி…

girlpraying

ஆடித் தள்ளுபடிக்கென
காத்திருந்த கூட்டம்
தெருக்களில் உலவிய
சுதந்திரக் காற்றை
மிதித்து நசுக்கி புறந்தள்ளின.

போக்குவரத்து
நெரிசல்களில் சிக்கிய
ஆம்புலன்ஸ்களின்
பதறும் குரலைக் கேட்டு
செய்வதறியாது திகைத்தது சாலை.

அடுத்தவர் எடுத்த சேலையே
அழகானதென
பெருமூச்சு நெரிசலுடன்
சேலைக் குவியலில்
சிக்கிக் கொள்கின்றனர் பெண்கள்.

சேதாரம் விலக்கி விட்டு
செய்கூலியில் சேர்த்து விட்டதாய்
வந்து சென்றவர்களின் வார்த்தைகள்
நகைக்கடை வாசல்களில்
மண்புழுக்களாய் உலவின.

கைக்கு நாலு பை
வாங்கி நுழையும் அம்மணியை
ஏக்கத்துடன் பார்ப்பாள்
ஆடியின் அர்த்தம் புரியாத
சமையலறைச் சிறுமி.

23 மறுமொழிகள்

  1. ஆர்.நாகப்பன். சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 6:13 பிற்பகல்

    நல்ல கவிதை …
    பாராட்டுக்கள்!

    அன்புடன்,
    ஆர்.நாகப்பன்.

    http://rnagappan.blogspot.com

  2. ஹேமா சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 7:28 பிற்பகல்

    ஆடித்தள்ளுபடி அசத்தல்.கவிதையும் ஆடித்தள்ளுபடியோ!அப்படியே ஆடித்தள்ளுபடியை ரசித்திருக்கிறீர்கள்.

    //கைக்கு நாலு பை
    வாங்கி நுழையும் அம்மணியை
    ஏக்கத்துடன் பார்ப்பாள்
    ஆடியின் அர்த்தம் புரியாத
    சமையலறைச் சிறுமி.//
    இந்த வரிகள் வறுமையின் தள்ளுபடி.அருமை அண்ணா.

  3. அனுஜன்யா சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 8:15 பிற்பகல்

    வாவ், செம்ம form ல இருக்கீங்க.

    //செய்வதறியாது திகைத்தது சாலை.//

    //வந்து சென்றவர்களின் வார்த்தைகள்
    நகைக்கடை வாசல்களில்
    மண்புழுக்களாய் உலவின.//

    அழகான வார்த்தைப் பிரயோகங்கள்.

    அனுஜன்யா

  4. aruna சொன்னது,

    டிசம்பர் 12, 2008 இல் 10:26 பிற்பகல்

    எப்போதும் போல யதார்த்தம்…..
    அன்புடன் அருணா

  5. அமுதா சொன்னது,

    டிசம்பர் 13, 2008 இல் 10:58 மு.பகல்

    nice

  6. Ravi kumar (kuwait ) சொன்னது,

    டிசம்பர் 13, 2008 இல் 1:55 பிற்பகல்

    *My Sari is nice but
    *Other people Sari more nice how ?
    *Good Xavi

  7. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:12 பிற்பகல்

    /*My Sari is nice but *Other people Sari more nice how ? *Good Xavi
    //
    :)

  8. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:13 பிற்பகல்

    //nice//

    நன்றி அமுதா :)

  9. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:40 பிற்பகல்

    //எப்போதும் போல யதார்த்தம்…..//

    நன்றி அருணா :)

  10. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:41 பிற்பகல்

    /வாவ், செம்ம form ல இருக்கீங்க.

    //செய்வதறியாது திகைத்தது சாலை.//

    //வந்து சென்றவர்களின் வார்த்தைகள்
    நகைக்கடை வாசல்களில்
    மண்புழுக்களாய் உலவின.//

    அழகான வார்த்தைப் பிரயோகங்கள்.

    அனுஜன்யா
    //

    மிக்க நன்றி அனுஜன்யா… :)

  11. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:43 பிற்பகல்

    //ஆடித்தள்ளுபடி அசத்தல்.கவிதையும் ஆடித்தள்ளுபடியோ!அப்படியே ஆடித்தள்ளுபடியை ரசித்திருக்கிறீர்கள்.

    //கைக்கு நாலு பை
    வாங்கி நுழையும் அம்மணியை
    ஏக்கத்துடன் பார்ப்பாள்
    ஆடியின் அர்த்தம் புரியாத
    சமையலறைச் சிறுமி.//
    இந்த வரிகள் வறுமையின் தள்ளுபடி.அருமை அண்ணா.
    //

    நன்றி சகோதரி :)

  12. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:44 பிற்பகல்

    //நல்ல கவிதை …
    பாராட்டுக்கள்!

    அன்புடன்,
    ஆர்.நாகப்பன்.
    //

    நன்றி நாகப்பன் :)

  13. vijaygopalswami சொன்னது,

    டிசம்பர் 21, 2008 இல் 12:36 பிற்பகல்

    http://www.sirippu.wordpress.com

    ஞாபகம் இருக்கா? இதுவும் உங்களோட ப்ளாகு தான். ஒழுங்கா அப்பப்போ அங்கயும் பதிவு போடுங்க.

    கொலைவெறியோடு சேவியரைத் துரத்துவோர் சங்கம். :)

  14. Shakthiprabha சொன்னது,

    டிசம்பர் 21, 2008 இல் 3:12 பிற்பகல்

    நல்லா இருக்கு

  15. பெயரிலி சொன்னது,

    டிசம்பர் 24, 2008 இல் 8:10 மு.பகல்

    நெஞ்சிற்கினிய நண்பர் சேவியருக்கு,
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்,உங்கள் இரண்டு செல்ல குட்டி மகள்களுக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். :-)

    நட்புடன்,
    குகன்

  16. குகன் சொன்னது,

    டிசம்பர் 24, 2008 இல் 8:12 மு.பகல்

    பெயர் அடிக்க முந்தைய பின்னூட்டத்தில் மறந்து விட்டது. கண்டுக்காதீங்க ;-)

  17. uumm சொன்னது,

    டிசம்பர் 24, 2008 இல் 1:49 பிற்பகல்

    இயல்பாய்..இனிக்கிறது.

  18. Ganesan Devadoss சொன்னது,

    டிசம்பர் 24, 2008 இல் 2:09 பிற்பகல்

    Good and a realistic touch in it. Keep going. Wishing you and family a Happy and a Merry Christmas and to all over the World.

  19. குகன் சொன்னது,

    டிசம்பர் 31, 2008 இல் 10:27 மு.பகல்

    அன்பிற்குரிய நண்பர் சேவியருக்கு,
    மிக இனிய ஆங்கில புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள் :-)

    நட்புடன்
    குகன்

  20. Solomon Dathi ( Kuwait ) சொன்னது,

    ஜனவரி 10, 2009 இல் 2:33 பிற்பகல்

    All//
    ***Sari is vere nice****

  21. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2009 இல் 10:14 பிற்பகல்

    :)

  22. balaji சொன்னது,

    ஜனவரி 21, 2009 இல் 4:25 பிற்பகல்

    nice
    it shows the ups and down in the society.

  23. சேவியர் சொன்னது,

    ஜனவரி 27, 2009 இல் 4:42 பிற்பகல்

    நன்றி பாலாஜி…


மறுமொழியொன்றை வழங்குக