
தனிமை
வறுத்தெடுக்கும் நாளில்
சில்லிடும் பனித் துகளாய்
வானிலிருந்து
உன் நினைவுகள்
நெஞ்சில் விழுந்ததாய்
சொல்லியிருக்கிறேன்.
பிறிதொரு நாளில்
கடுங்குளிர் போர்வை விரிக்க
ஓர்
வெப்பத் துளியாய்
என்
உயிரில் விழுந்ததையும்
சொல்லியிருக்கிறேன்.
உன்
பார்வை படும் தூரங்களே
என்
வாழ்வை நடும் தூரங்களென்றும்,
உன்
வார்த்தை விழும் சமவெளிகளே
என்
வாழ்க்கை எழும் சமவெளிகள்
என்றும் சொல்லியிருக்கிறேன்.
காதலிக்கிறேன் என்று
ஏன்
சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து





gayathri சொன்னது,
ஜனவரி 13, 2009 இல் 6:29 பிற்பகல்
hey me they 1st pa
gayathri சொன்னது,
ஜனவரி 13, 2009 இல் 6:36 பிற்பகல்
ivalavu solli irukenga appa kudava avangala purinjika mudiyala
சேவியர் சொன்னது,
ஜனவரி 13, 2009 இல் 6:38 பிற்பகல்
இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் எசமான்
ஹேமா சொன்னது,
ஜனவரி 14, 2009 இல் 1:07 மு.பகல்
சரியாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால் அது உண்மையான காதல் இல்லைதானே!
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:45 பிற்பகல்
கலக்கறீங்க ஹேமா… உண்மை தான்
Shangaran சொன்னது,
ஜனவரி 18, 2009 இல் 9:43 மு.பகல்
Miga arumai… touching one.
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்
நன்றி சங்கரன்.
சொல்லாமல் சொன்னவை சொன்னது,
ஜனவரி 26, 2009 இல் 11:41 மு.பகல்
[...] தனிமை வறுத்தெடுக்கும் நாளில் சில்லி… [...]
sathya சொன்னது,
ஜனவரி 31, 2009 இல் 4:57 பிற்பகல்
dasd
naan thoondil meen pole சொன்னது,
ஜனவரி 31, 2009 இல் 4:58 பிற்பகல்
now i am like a cat in the walll
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:36 பிற்பகல்
எங்கேயாவது ஒரு பக்கம் குதிச்சுடுங்க பாஸ்….
ஷாமா சொன்னது,
ஜூன் 10, 2009 இல் 10:33 மு.பகல்
//காதலிக்கிறேன் என்று
ஏன் சொல்லவில்லை என்கிறாய்
பிரிவின் விரல் பிடித்து//
ஆழமான நட்பு கூட
மென்மையின்
உணர்வைக் கூறும்,
மயில் இறகின்
வருடலுக்கு
ஒத்ததாக இருக்கும்.
எனவே,
காதலைச்
சொல்லி விடுவது தான்
இதற்கு ஒரே வழி!
பெண்ககளை நாணம் தடுக்கும்….
…. just 4 fun.
ஆண்கள் சொல்லிடலாமா?
சேவியர் சொன்னது,
ஜூன் 10, 2009 இல் 7:38 பிற்பகல்
//ஆழமான நட்பு கூட மென்மையின் உணர்வைக் கூறும், மயில் இறகின் வருடலுக்கு ஒத்ததாக இருக்கும். எனவே, காதலைச் சொல்லி விடுவது தான் இதற்கு ஒரே வழி!//
நச் ! வெகு அழகாய் சொல்லி விட்டீர்கள்
சேவியர் சொன்னது,
ஜூன் 10, 2009 இல் 7:42 பிற்பகல்
//பெண்ககளை நாணம் தடுக்கும்….
ஆண்கள் சொல்லிடலாமா?//
காதலைச் சொல்லும் பெண்களை ஆண்கள் புழுவைப் போல பார்ப்பதில்லை, திட்டுவதில்லை, செருப்பால் அடிப்பதில்லை, ஆள் வைத்து மிரட்டுவதில்லை…..
இப்போ சொல்லுங்க…. யார் சொல்வது நல்லது