
உனைத் தடுக்கமாட்டேன்.
விலக வேண்டுமென்றால்
விலகிவிடு
யாசிக்க மாட்டேன் நான்.
முடிந்தால்
முடிவு வரை
இந்தக் கவிதையை
வாசித்துப் போ.
எங்கே முளைத்தது
நம்
காதலைச் சாய்க்கும்
களைகளின் விதை.
பயிரிடுகையிலும்
முளை விடுகையிலும்
நம்
வயல்களில் விளைந்தது
பயிர்கள் என்று
பறைசாற்றியிருக்கிறோம்.
உதடுகளில்
புன்னகை பறிக்கவே
பழக்கப்பட்டிருந்தோம்.
நெஞ்சுறுதியும்
வாக்குறுதியும்
நிறையவே வைத்திருந்தோம்.
இப்போது
விலகுகிறேன் என்கிறாய்.
விரும்புகிறேன் என்று சொல்ல
நான்
பிரயாசைப்பட்டதில்
கடுகளவு கூட பிரயாசையின்றி.
இப்போது
பாதி வழியிலேயே
உறைந்து போய் நிற்கும்
என்
மழையை என்ன செய்வது ?
திட நிலைக்குத்
தள்ளப் பட்ட
என்
மூச்சுக் காற்றை என்ன செய்வது ?
மனசுக்குள்
தூக்குப் போட்டுக் கொண்டிருக்கும்
உயிரை நான்
என்ன செய்வது ?
உன்னைத் தடுக்கவில்லை
நான்
விலக வேண்டுமெனில்
விலகிவிடு.
பழகிவிடும் எனக்கு
உயிரின்றியும் ஜீவிக்க.





bala சொன்னது,
April 27, 2009 இல் 6:39 பிற்பகல்
mmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmhum
தள்ளப் பட்ட
என்
மூச்சுக் காற்றை என்ன செய்வது ?
மனசுக்குள்
தூக்குப் போட்டுக் கொண்டிருக்கும்
உயிரை நான்
என்ன செய்வது ?
mmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmhum
mani சொன்னது,
April 27, 2009 இல் 11:39 பிற்பகல்
ungal kavithai mrumai. kathaliyen priunai solvathu alakaka irunthathu………
ungal priyan
mani………
my mobile no : 9345661602
சேவியர் சொன்னது,
மே 4, 2009 இல் 9:27 பிற்பகல்
மனமார்ந்த நன்றிகள் மணி.
சேவியர் சொன்னது,
மே 4, 2009 இல் 9:27 பிற்பகல்
நன்றி பாலா