வெள்ளை தேசம் வேண்டும்

DSC_0324

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கும்
சிறு விண்மீன் துண்டாய்,
விழிகளை வருடும்
என்
புன்னகைப் பெண்ணே,

உனக்கு
வெள்ளை நிறம்
பிடிக்கும் என்ற பின்
நான்
கார் மேகத்தைக் கூட
வெறுக்கத் துவங்கினேன்.

உன் விழி மயில்கள்
வழக்கிடும் போதெல்லாம்
நான்
வெள்ளைக்காய்
வாதாடுவதால்
என் கருவிழிகளுக்குக் கவலை.

அவைகளுக்கெங்கே
தெரியப் போகிறது
நான்
விளக்கைப் அணைக்காமல்
துயிலும் ரகசியம்.

குளிர்காலப் பனித்தூவல்களை
கைகளில் அள்ளி
நான்
உன் முகத்துக்கு
முத்தம் தரும் பரவசம்.

பௌர்ணமி இரவுகளில்
வானம் பார்த்தே
நான்
விழித்துக் கிடக்கும்
புது சுகம்.

ஒரே
ஒரு கவலை தான்
எனக்கு,

கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
அதன்
வெள்ளையை வார்த்தைகள்
கொள்ளையடிக்கும் என்பதால்
அதில்
பேனா வைத்தாலே
பதறிப் போகிறேன்.

பிரசுரமாகாமல் கிடக்கின்றன
உன்
நினைவுகள் பதிந்த
வெள்ளைக் காகிதங்கள்.

0

8 மறுமொழிகள்

  1. ஷாமா சொன்னது,

    மே 27, 2009 இல் 2:41 மு.பகல்

    ” வெள்ளையை வார்த்தைகள் கொள்ளையடிக்கும் என்பதால்
    அதில் பேனா வைத்தாலே பதறிப் போகிறேன்.
    பிரசுரமாகாமல் உன் நினைவுகள்! ”

    அழகிய… மென்மையான… உணர்வை வருடுகின்ற… இனிய… காதல் வரிகள்…. வாழ்த்துகள்!!

    பிரிந்த நெஞ்சம் கொன்று,
    இணையும் உள்ளம் கொள்வோம்!
    மனதால் ஒருங்கிணைந்து,
    கருத்தில் ஒன்றுபட்டு,
    வெள்ளைத் தேசம் படைப்போம்!

    இதுவும்
    வெள்ளைத் தேசம் ஆகுமா??…..

  2. vijaygopalswami சொன்னது,

    மே 27, 2009 இல் 3:54 மு.பகல்

    அண்ணே, ஃப்ரான்ஸ் சிவா குடுத்த டரியலே இன்னும் சரியாகல. கொஞ்சம் கேப் உடக் கூடாதா…

  3. மயாதி சொன்னது,

    மே 27, 2009 இல் 8:15 பிற்பகல்

    மென்மையான காதல்…

  4. சேவியர் சொன்னது,

    மே 28, 2009 இல் 11:41 பிற்பகல்

    //மென்மையான காதல்…//

    நன்றி மயாதி.

  5. சேவியர் சொன்னது,

    மே 28, 2009 இல் 11:42 பிற்பகல்

    //அண்ணே, ஃப்ரான்ஸ் சிவா குடுத்த டரியலே இன்னும் சரியாகல. கொஞ்சம் கேப் உடக் கூடாதா…//

    என்னவோ போடா மாதவா :)

  6. சேவியர் சொன்னது,

    மே 28, 2009 இல் 11:43 பிற்பகல்

    அன்பின் ஷாமா, கருத்துக்கும், கவிதைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கள் நன்றிகள் :)

  7. karthi சொன்னது,

    ஜூன் 7, 2009 இல் 8:50 பிற்பகல்

    ஒரே
    ஒரு கவலை தான்
    எனக்கு,

    கவிதை எழுதக் காகிதம் எடுத்தால்
    அதன்
    வெள்ளையை வார்த்தைகள்
    கொள்ளையடிக்கும் என்பதால்
    அதில்
    பேனா வைத்தாலே
    பதறிப் போகிறேன்.

    பிரசுரமாகாமல் கிடக்கின்றன
    உன்
    நினைவுகள் பதிந்த
    வெள்ளைக் காகிதங்கள்.

    simply super anna,,,,

  8. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:55 பிற்பகல்

    மிக்க நன்றி கார்த்தி :)


மறுமொழியொன்றை வழங்குக