உனது குரல்..

 neetu-chandra-42

எப்போதோ
நீ விட்டுச் சென்ற
குரலின் விரல்களை
இன்னமும்
இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்.

பார்வையற்ற ஒருவனின்
பாதங்களுக்குக்
கீழே
பரவும் வெளிச்சம் போல
பயனற்று வழிகிறது
என் எதிர்பார்ப்பின் கதறல்.

உன் குரலில்
இப்போது
இனிமை கூடியிருக்கலாம்.
அல்லது
கரகரப்பு கலந்திருக்கலாம்.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில்
மிகப் பழமையான
சிற்பம் போல,
அதிகபட்சக் கவனத்துடனே
அன்றைய உன் குரலை
பாதுகாக்கிறேன்.

அந்தக் ஒலிக்குள் இருக்கும்
மொழி
என்னைக் காயப்படுத்திய
விலகலின் வார்த்தை தான்,
ஆனாலும்
விலக்காமல் வைத்திருக்கிறேன்.

ஒருவேளை
அந்தக் குரல் தொலைந்து
போனால்,
மீண்டும் ஒரு குரலுக்காய்
உன் வாசலுக்கு
யாசகனாய் வருவேனோ என்னும்
பயத்துடன்.

8 மறுமொழிகள்

  1. கவின் சொன்னது,

    ஜூன் 1, 2009 இல் 2:11 மு.பகல்

    ரசனைமிகுந்த கவிதை…

  2. ஷாமா சொன்னது,

    ஜூன் 1, 2009 இல் 2:41 மு.பகல்

    [[மிகப் பழமையான சிற்பம் போல,
    அதிகபட்சக் கவனத்துடனே
    அன்றைய உன் குரலை பாதுகாக்கிறேன்.]]
    அழகிய சுவையான கவிதை சேவியர்!

  3. கவிதைக்காரன் சொன்னது,

    ஜூன் 3, 2009 இல் 1:37 மு.பகல்

    //பார்வையற்ற ஒருவனின்
    பாதங்களுக்குக்
    கீழே
    பரவும் வெளிச்சம் போல
    பயனற்று வழிகிறது
    என் எதிர்பார்ப்பின் கதறல்.//

    கதறலின் பரவல்.. :) )

  4. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:58 பிற்பகல்

    நன்றி :D

  5. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:58 பிற்பகல்

    மிக்க நன்றி ஷாமா.. உங்கள் ரசனைக்கு !

  6. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:58 பிற்பகல்

    மிக்க நன்றி கவின் :)

  7. laxman சொன்னது,

    ஜூலை 10, 2009 இல் 2:52 மு.பகல்

    //குரலின் விரல்களை
    இன்னமும்
    இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன்//
    நல்ல கற்பனை…அருமையான கவிதை…
    அழகான நீது வின் படம் கவிதையின் அழகை கெடுக்கின்றது.

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:13 மு.பகல்

    நன்றி லக்ஷ்மன்… உங்கள் கருத்துக்கும் நன்றிகள் :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers