நன்றி…. வாங்க பழகலாம்…

IMG_0924

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ( ஒண்ணு தானா என்று குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது) அது என்னண்ணா, எனக்கு வரும் இ-மெயில்களையெல்லாம் உடனடியா வாசிக்கிறதில்லை. மூட்டையா கட்டிப் போட்டு எப்போவாவது உக்காந்து படிக்கிறது. சமயத்துல சில வாரங்கள் படிக்காமலேயே கிடக்கும். அப்புறம் பார்த்தால் எக்ஸ்பயரி டேட் ஆகிப் போன பொருள் மாதிரி “அடச்..சே” போட வைக்கும்.

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, நட்சத்திரப் பதிவரா இருன்னு சொல்லி வந்த மின்னஞ்சலையும் ரொம்ப லேட்டா தான் பாத்தேன். அவசர அவசரமா நிமிர்ந்து காலண்டரைப் பார்த்தால், அதற்குள் ஒரு நாள் ஓடிப் போச்சு. சரி இருக்கிற நாட்களிலாவது கொஞ்சம் உருப்படியா ஏதாச்சும் பண்ணலாமேன்னு தான் இந்த கடிதமே !

என்னையெல்லாம் ஏன்இப்படி வம்புல மாட்டி விடறாங்க ? நாம எப்பவாவது ஏதாவது எழுதிட்டு ஓரமா கிடக்கிற பார்ட்டியாச்சே என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. எவண்டா இவன்ங்கற உங்க கேள்வியும் நியாயமானது தான் ! இருந்தாலும் ஜாம்பவான்கள் ஜம்முன்னு உக்காந்த இடத்துல அப்படி என்ன தான் இருக்குன்னு பாக்கற குறு குறுப்பு பாக்கியிருக்கு !

நன்றி !

இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டுப் போறதுக்குத் தான் இவ்ளோ நீட்டி முழக்கியிருக்கேன்.

தொடர்வோம்

12 மறுமொழிகள்

  1. ila சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2009 இல் 11:53 பிற்பகல்

    வாழ்த்துக்கள் ! கவிதை மழை பொழிஞ்சிருங்க..

  2. மஞ்சூர் ராசா சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 12:04 மு.பகல்

    வாழ்த்துகள் ஜேவியர்

  3. balasundaravinayagam சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 12:28 மு.பகல்

    கலியாணம் ஆச்சா இன்னுமில்லையா?

    ஆன பிறகு, பார்க்கவேண்டிய கடுதாசியாப் பாக்காமா, மறந்துட்டேன்னு சொல்லிப்பாருங்க தெரியும்!

  4. துளசி கோபால் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 2:53 பிற்பகல்

    நட்சத்திரத்துக்கு இனிய நல்வரவும் வாழ்த்து(க்)களும்.

    புத்தகமா எழுதிக் குவிச்சுட்டு, உங்களைப் பத்திச் சொல்ல ஒன்னும் இல்லைங்கறீங்க!!!!!

  5. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:11 பிற்பகல்

    //நட்சத்திரத்துக்கு இனிய நல்வரவும் வாழ்த்து(க்)களும்.

    புத்தகமா எழுதிக் குவிச்சுட்டு, உங்களைப் பத்திச் சொல்ல ஒன்னும் இல்லைங்கறீங்க!!!!!

    //

    மனமார்ந்த நன்றிகள் :)

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:14 பிற்பகல்

    /கலியாணம் ஆச்சா இன்னுமில்லையா?

    ஆன பிறகு, பார்க்கவேண்டிய கடுதாசியாப் பாக்காமா, மறந்துட்டேன்னு சொல்லிப்பாருங்க தெரியும்!

    //
    அதெல்லாம் ரொம்ப மறந்தாச்சு :D

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:14 பிற்பகல்

    //வாழ்த்துகள் ஜேவியர்//

    நன்றி மஞ்சூர்..

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:15 பிற்பகல்

    //69.136.255.82 Submitted on வ/மா/தி at 11:53பிற்பகல்
    வாழ்த்துக்கள் ! கவிதை மழை பொழிஞ்சிருங்க..
    //

    நன்றி இளா :)

  9. கோவி.கண்ணன் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 10:08 பிற்பகல்

    வாழ்த்துகள் சேவியர், அடுத்த நிலநடுக்கம் பற்றிய பதிவையும் படிச்சாச்சு. வேர்ட் ப்ரஸ் பதிவில் பின்னூட்டமிடுவதற்கு நிறைய நேரம் செலவளிக்க வேண்டி இருக்கு :)

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 1:55 மு.பகல்

    நன்றி கோவி.கண்ணன். அப்படியா ? வேர்ட்பிரஸ் எளிது என்றல்லவா நினைத்திருந்தேன் :(

  11. Stalin Felix சொன்னது,

    செப்டம்பர் 2, 2009 இல் 6:31 மு.பகல்

    வாழ்த்துகள்

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 3, 2009 இல் 6:15 மு.பகல்

    நன்றி ஸ்டாலின் :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers