நீங்க தான் வில்லன் நம்பர் 1

   e-waste

எல்லோருக்குமே தன்னை ஒரு ஹீரோவாகப் பாவிப்பதில் தான் ஆசையும், சிலிர்ப்பும். அதனால் தான் வில்லன்களைக் காணும் போது கோபமும் எரிச்சலும் பீறிட்டுக் கிளம்புகிறது நமக்கு. எப்படியாவது வில்லனை வீழ்த்தி நமது ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதே நமது கனவாய் இருக்கும். ஆனால் நாமே சில விஷயங்களில் வில்லனாகத் தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை. கோபப்படாம படிங்க.

 பிளாஸ்டிக்
 
 ஆடித் தள்ளுபடிக்கு இரண்டு கைகளிலும் பத்து பிளாஸ்டிக் பைகளை அள்ளி வருகிறோம். இந்த பிளாஸ்டிக் பைகள், நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு, அடுத்த ஐந்தாவது ஆண்டு என்ன நிலையில் இருக்கும் என நினைத்துப் பார்த்ததுண்டா. 

ஆகஸ்ட் பதினைந்திற்கு எல்லோருடைய கைகளிலும் ஒன்றுக்கு இரண்டாக கொடிகள். பெரும்பாலும் பிளாஸ்டிக் கொடிகள். தேசப் பற்று எனும் பெயரில் தேசத்தின் முதுகில் எத்தனை டன் பிளாஸ்டிக் இறக்கி வைக்கிறோம். நமக்கிருக்கும் வேலையில் இதையெல்லாம் யோசிக்க ஏது டைம் என நினைக்கும் போது சட்டென வில்லனாகிவிடுகிறோம்.

உலகில் பல நாடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடையும் வரிகளும் விதித்திருக்கின்றன. இருந்தாலும் நிலமை plastic_bagsசீரடையவில்லை. உலகின் வளர்ந்த நாடான யூ.கேவில் ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 13 பில்லியன். உலகில் ஒரு நாள் சேரும் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் ஐயாயிரம் டன் !

சகட்டு மேனிக்கு வாட்டர் பாட்டில்கள் வாங்குவதையும், குப்பை போட உதவும் என ஒன்றுக்கு இரண்டாய் பிளாஸ்டிக் பைகள் வாங்குவதையும் நிறுத்தினாலே போதும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்த.

அடுத்த முறை பிளாஸ்டிக் பை ஒன்றைக் கையில் எடுக்கும் போது நினைவில் கொள்வோம். ஒரு பை அழிய எடுத்துக் கொள்ளும் காலம் ஆயிரம் ஆண்டுகள்.  

  குளோபல் வார்மிங் என்றவுடன் இதெல்லாம் தலைவர்கள் சமாச்சாரம் என்று ஒதுங்கிவிடுவது தான் நமது இயல்பு. உண்மையில் இது தலைவர்கள் சமாச்சாரமே கிடையாது. நீங்களும் நானும் சம்பந்தப்பட்ட விஷயம் தான் இது. பூமியை மாசுபடுத்துவது, காற்றை மாசுபடுத்துவது, நதிகளை மாசுபடுத்துவது இவையெல்லாம் தான் குளோபல் வார்மிங்கின் முக்கியமான காரணிகள்.

வெள்ளப்பெருக்கு, சுனாமி, சுழல்காற்று, உணவுப் பற்றாக்குறை, கடல் மட்டம் உயருதல், துருவங்கள் உருகுதல் என இதன் GlobalWarmingவிளைவுகள் படுபயங்கரமானவை. இது தேச பாதுகாப்புக்கும் மாபெரும் வில்லனாக வந்து நிற்கிறது என கடந்த வாரம் அமெரிக்கா தெரிவித்திருந்தது. குளோபல் வார்மிங் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என அமெரிக்கா சொல்லியிருப்பது இதுவே முதல் முறை !

இன்றைய இதே நிலையில் போனால் 2040ல் பூமி உதவாக்கரையாகிவிடும். அதன் பின் பூமியைத் திருப்பி பழைய நிலைக்குக் கொண்டு வருவது கூட சாத்தியமற்றதாகி விடுமாம். இப்போதே காலநிலையில் நிலவும் ஒழுங்கற்ற மாற்றங்களால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகியிருக்கிறது. இதைத் தடுக்க அமெரிக்கா துவங்கி உலக நாடுகளெல்லாம் கரம் கோர்த்து நிற்க, நாமும் நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்.

அட ! அணில் கூட மண் சுமக்கலையா ? 

இ-வேஸ்ட்

 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செல்போனை மாற்றுவது தான் இப்போதைய இளசுகளின் டிரெண்ட். வாங்கி நான்கு வருடங்களாகிவிட்டால் கம்ப்யூட்டரும் குப்பைக்கு. இருக்கும் பிரச்சினை போதாதென்று சிடிக்கள், வயர்கள், எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் என பூமிக்குப் பாரமாய் எலக்ட்ரானிக் குப்பைகள். உலகில் ஆண்டு ஒன்றுக்கு சேரும் எலக்ட்ரானிக் வேஸ்டின் எடை மட்டுமே ஐந்து கோடி டன் ! இன்னும் இரண்டே ஆண்டுகளின் இந்த கணக்கு மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.

 

 

e-waste1இந்த எலக்ட்ரானிக் பொருட்களில் சுமார் ஆயிரம் வகையான நச்சுப் பொருட்கள் உண்டு. அலர்ஜி முதல் கான்சர் வரை பல்வேறு நோய்களின் தாய் இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட். இதைப் புதைத்தால் பூமி மாசுபடும், எரித்தால் விஷப் புகை வந்து காற்றை மாசுபடுத்தும். இந்த எலக்ட்ரானிக் பொருட்களின் தேவை முடிந்து விட்டால் மறு சுழற்சிக்கு ஒப்படைப்பது மட்டுமே தீர்வு.

அடுத்த முறை எதையும் சும்மா எறியாதீங்க.

   அழகுசாதனப் பொருட்கள்

இதைப் பூசுங்கள். ஆறே வாரங்களில் நீங்கள் உலக அழகி ஆகிவிடுவீர்கள். என களத்தில் குதிக்கும் அழகுசாதன நிறுவனங்களை நம்புவது நமது வாடிக்கையாகிவிட்டது. ஆறுவாரம் அழுத்தி அழுத்தித் தேய்த்தும் நமது நிறம் மாறவில்லையே என யோசிக்கும் போது அடுத்த விளம்பரம் வரும். இதோ புதிய பார்முலாவில் அதே கிரீம் ! 

உண்மையில் இந்த அழகுசாதனப் பொருட்களால் ஏதேனும் நன்மை உண்டா என்றால் பெரும்பாலும் உதட்டைப் பிதுக்க வேண்டியது தான். அப்புறம் ஏன் கண்ணுக்கு ரெண்டு, மூக்குக்கு மூணு, காலுக்கு நாலு என அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் ?

இந்த அழகுசாதனப் பொருட்களில் இருக்கக் கூடிய அமிலங்கள் பல்வேறு அலர்ஜி நோய்களைத் தரும். இந்த அழகு சாதனப்make பொருட்களில் இருக்கும் பி.பி.டி எனும் நச்சுப் பொருள் கொடுமையானது. சமீபத்தில் பதினைந்து வயதான கர்லா ஹாரிஸ் எனும் சிறுமி ஹேர் டை ஒன்றை உபயோகித்ததில் மரணம் வரை சென்று திரும்பியிருக்கிறார். இது லோரியல் எனும் புகழ்பெற்ற அழகுசாதனப் பொருள் தயாரிப்பு என்பது குறிப்பிடத் தக்கது. உலகப் புகழ் நிறுவனத்தின் தயாரிப்பே இப்படியெனில், மேட் இன் சைனாக்கள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? அழகு சாதனப் பொருட்கள் உபயோகிப்பவர்களில் 7.1 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு பிரச்சினை வந்து விடுகிறது என்கிறது கடந்த ஆண்டைய ஆய்வு ஒன்று.

எதுக்கும் இன்னொரு தடவை யோசிங்க !

தண்ணீர் பிரச்சினை

 தண்ணிக்கு என்னப்பா பிரச்சினை ? கிணறு வெட்டினா வந்துடப் போவுது. அல்லது பணம் குடுத்தா லாரில வந்துடப் போகுது என நினைக்கும் ஆசாமியா நீங்க ? கொஞ்சம் முழிச்சுக்கோங்க சாமி. தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் உலகம் பாலை நிலமாகப் போகிறது. அச்சுறுத்துவது நான் அல்ல ஐ.நா.

 

WasteWaterஆண்டு தோறும் தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. கடந்த ஒரு நூற்றாண்டை மட்டும் எடுத்துப் பார்த்தாலே உலகின் தண்ணீர் தேவை ஆறு மடங்கு அதிகரித்திருக்கிறது ! உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தண்ணீர் இல்லாமல் மானுடம் தவிக்க வேண்டியது தான் என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்

ஆசிய பசிபிக் பகுதியில் வாழும் மக்களில் சுமார் 110 கோடி மக்களுக்கு இப்போதே நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை ! அதனால் தான் அரசுகள் தண்ணீர் சேகரிப்பு, மழை நீர் சேகரிப்பு, மரங்களை நடுதல், தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்தல் என முழங்கிக் கொண்டிருக்கின்றன.

தண்ணீர் சேமிப்பு ரொம்ப முக்கியங்க. அடுத்த முறை குழாயைத் திறக்கும் போது மனசையும் சேர்த்தே திறப்போம்.

 உடலை அழிக்காதீங்க 

ஒவ்வொரு முறை புகையை ஆழமாய் உள்ளிழுத்து வெளிவிடும் போதும் உங்க உடலுக்கு நீங்களே வில்லனாகிறீர்கள். உலக அளவில் புகைக்கு அடிமையானவர்களில் 10 சதவீதம் பேர் நமது நாட்டிலுள்ளவர்கள் ! மேலை நாடுகளெல்லாம் புகைப் பழக்கத்தை குறைத்துக் கொண்டிருக்க வளரும், மற்றும் வளர்ந்த நாடுகள் தான் விட முடியாச் சிக்கலில் கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்த நூற்றாண்டில் புகைக்கு அடிமையாகியிருக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடி !

 இன்னும் இருபது ஆண்டுகள் கழிந்து புகைக்குப் பலியாவோரில் 80 சதவீதம் பேர் பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளில்teensmoke தான் இருக்கப் போகிறார்கள் . உலக அளவில் “தம்” பழக்கத்தால் இறந்து போகும் மக்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 15,000. காரணம் உலக அளவில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு போதுமானதாய் இல்லை என்பது தான். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் என எங்கு வேண்டுமானாலும் புகைத்துக் கொள்ளுங்கள் என்னும் நிலமை தான் 74 நாடுகளில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

அடுத்த முறை ஒரு தம் ஒன்றைப் பற்ற வைக்கும் போது நினைவில் கொள்ளுங்கள், உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகையினால் வருகிறது !

 

கவிதை : காதல் வழிப்போக்கன்

freida-pinto4

ஒவ்வொரு கவிதை
முடிவிலும்,
உன்னை இன்னும் அதிகமாய்
நேசிப்பதாய் உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல் எழுதத் துடிக்கிறேன்.

freida-pinto4

உன் உதடுகளை
என் உதடுகளால்
பிரதி எடுக்க
பிரியப்படுகிறேன்.
நீயோ
அதற்கு இன்னோர்
பிறவி எடுக்கச் சொல்கிறாய்
freida-pinto4

மறந்து போயிருந்த
ஒரு
இதயம் கொத்திய
பழைய பாடலை
இரவின் நிசப்தத்தில்
மெல்லிய சப்தத்தில் கேட்டேன்.
உன்
ஞாபகம் கொத்திக் கிளறுகிறது.

freida-pinto4

ஒவ்வொரு முறை
நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை
வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும்
ஓவியமாய் நான்.

freida-pinto4

பட்டென்று கட்டிக் கொள்ளும்
ஓர்
குழந்தையின்
குரங்கு பொம்மையாய்
நீ.
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கும்
கடைவீதியின்
கடைக்குட்டி குழந்தையாய்
நான்.

freida-pinto4
உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.

freida-pinto4

என் வீட்டுக் கண்ணாடி
உனக்கான
என்னைக் காட்டுகிறது.
உன் காதல் மட்டுமே
நான் என்ற
என்னைக் காட்டுகிறது.

freida-pinto4
முள்ளை முள்ளால் தான்
எடுக்க வேண்டும்.
என் காதலை
உன் காதலாலும்.

freida-pinto4

செலவழித்தால்
சேரும்,
சேர்த்து வைத்தால்
தொலைந்துபோகும்…
ஓர்
வியப்பின் விதை
காதல்.

freida-pinto4

நாம் இருவரும்
எதைப்பற்றித் தான் பேசவில்லை
மனதுக்குள்
பற்றிக் கொண்டிருந்த
காதலைத் தவிர..

freida-pinto4

கருவாட்டுக் கூடையில்
தலைவைத்துத்
தூங்கும் மீன்காரி போல,
உன்
நினைவுக் கூடைக்குள்
தலை வைத்துப் படுக்கவே
பிடித்திருக்கிறது
எனக்கு.

freida-pinto4

நீ
பேச மறுத்த
காலங்களில் தான்
என்
கவிதைகள் அதிகமாய்
பேசின.

freida-pinto4

ஆணி கிழித்த
காயத்தைத்
தேன் பூசி மறைப்பதாய்
இருக்கிறது

நீ
காதலை நிராகரித்து
நட்பை நீட்டும் போது.

freida-pinto4

ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.

ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.

0

மனசுக்கு டானிக் : கைகளில்லை + கால்களில்லை = கவலைகள் இல்லை

Nick9

“உங்களுக்கு ஒரு பையன் பொறந்திருக்கான்” என நிக்கை (Nick Vujicic) அவனுடைய தந்தையிடம் காட்டியபோது உள்ளுக்குள் குமட்டிக் கொண்டு வர, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஒடி வந்து வாந்தியெடுத்தார் தந்தை !

“இந்தாங்க உங்க பையன்” என தாயிடம் நீட்டியபோது “ஐயோ.. என் முன்னாலிருந்து கொண்டு போங்கள்…” என நான்கு மாதங்கள் அவனைத் தொடாமலேயே அழுது தீர்த்தாள் தாய்.

விஷயம் இது தான். நாளும் கிழமையும் எண்ணி எண்ணி ஆவலுடன் குழந்தையைக் கொஞ்ச காத்திருந்த அந்த பெற்றோருக்குப் பிறந்ததோ கைகளும் கால்களும் இல்லாத ஒரு குழந்தை ! இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத ஒருவனால் என்ன செய்ய முடியும் பிச்சை எடுப்பதைத் தவிர ? என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

அந்தக் கவலைதான் அந்த ஆஸ்திரேலியப் பெற்றோருக்கும் இருந்தது. ஒரு சின்ன குறை இருந்தாலே சமூகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். கைகளும் இல்லாமல், கால்களும் இல்லாமல் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழப்போகிறான் ? தொட்டதுக்கெல்லாம் யாரோ ஒருவருடைய உதவியில் தானே இவன் வாழ முடியும் என்பதே பெற்றோரின் தலையாய கவலையாய் ஆகிப் போனது.

அன்றைக்கு அவர்களிடம் போய், “கவலைப்படாதீர்கள். உங்கள் மகன் ஒரு நாள் ஓடுவான், குதிப்பான், நீச்சலடிப்பான், கால்ஃப் Nick4விளையாடுவான், புட்பால் விளையாடுவான், கடலில் ஷர்ப் செய்வான் என்றெல்லாம் சொல்லியிருந்தால்” அன்றைக்கே ஒரு கொலை விழுந்தாலும் விழுந்திருக்கும். ஆனால் எல்லாமே ஒரு பரபரப்பான சினிமா போல நிஜமாகியிருக்கிறது இன்று.

தற்போது தனது இருபத்து ஆறாவது வயதில் இருக்கும் நிக், இன்றைக்கு மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்கிறார். கூடவே கோடானு கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் சின்னமாகவும் உருவெடுத்திருக்கிறார்.

இப்போது மிகவும் உற்சாகமாய் இருக்கும் நிக் கடந்து வந்த ஆரம்ப வாழ்க்கை ரொம்பவே கொடுமையானது. கைகளும் கால்களும் இல்லையென்றாலும் பெற்றோர் அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குச் சென்றால் பிள்ளைகள் நிக்கை நெருங்கி வரவே பயப்பட்டார்கள். ஏதோ ஏலியனைப் பார்ப்பது போலத் தான் நிக்கை பார்த்தார்கள்.

எல்லாரையும் போல சாதாரணமாய் வாழ முடியாத ஏக்கம் நிக்கிற்குள் டன் கணக்காய் கனத்தது. மற்றவர்களின் கிண்டலும், கேலியும், அருவருப்புப் பார்வையும் நிக்கை நிலைகுலைய வைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. டீன் ஏஜ் வயது வரை நிக் செய்த செபம் என்ன தெரியுமா ? “கடவுளே தலைமுடி வளர்வது போல எனக்கு கைகளும் கால்களும் வளர வேண்டுமே” என்பது தான்.

EFG6462

அப்போதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் தற்கொலைச் சிந்தனைகள் வந்து கொண்டே இருந்தன. எப்படியாவது செத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும் அதையும் தனியே செய்ய முடியாத நிலை. “கொஞ்சம் என்னைக் கொல்வீர்களா பிளீஸ்” என யாரிடமாவது கெஞ்ச வேண்டிய நிலையே நிக்கிற்கு.

அப்படியும் ஒருமுறை பாத்டப்பில் தண்ணீரை நிரப்பி மூழ்கிச் சாக முனைத்திருக்கிறார். இன்னொரு கழுத்து உடையட்டும் செத்து விடலாம் என டேபிளில் இருந்து தலைகீழாய் குதித்திருக்கிறார். ! என்ன செய்ய? வாழவேண்டும் எனும் விதி அவருக்கு. எல்லா தற்கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆரம்ப காலத்தில் நிக்கின் உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் பின்னர் நிக்கிற்கு தன்னம்பிக்கையை ஊட்டத் துவங்கினர். 18 மாதமாக இருந்தபோதே நீச்சல் பழக்கத் துவக்கிய தந்தை, ஆறு வயதாக இருக்கும் போது கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். தாய் பிளாஸ்டிக்கில் ஒரு வளையத்தைச் செய்து அதில் பென்சிலை மாட்டி எழுத கற்றுக் கொடுத்தார். இவையெல்லாம் தான் நிக்கிற்கு நிமிர்ந்து நிற்கும் தைரியத்தைக் கொடுத்தது.

Nick1

நிக்கின் இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் ஆறாவது விரல் போல நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாகம் தான் அவனுடைய வரப்பிரசாதம். அதுதான் அவனுடைய கை, கால், துடுப்பு, எல்லாமே !. நடப்பது, எழுதுவது, நீந்துவது, விளையாடுவது என சர்வமும் அதன் வழியாகவே. இது மட்டும் இல்லாமலிருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியாது என சொல்லி சிரிக்கிறார் நிக்.

தனது பதின்மூன்றாவது வயதில் ஊனமுற்ற ஒருவரைப் பற்றிய வரலாறு ஒன்றை நிக் படித்தார். அதுதான் அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அந்த ஊனமுற்ற மனிதர் கழுத்தையும், நாடியையும் பயன்படுத்தி கால்ப் விளையாடியதைப் படித்தபோது நிக்கிற்குள் ஒரு மின்னல் அடித்தது.

Nick3

“அடடா… தேவையில்லாமல் தற்கொலை செய்யப் பார்த்தேனே” என தன்னையே நொந்து கொண்டவர், “நல்ல வேளை இதுவரை சாகவில்லை” என நினைத்துக் கொண்டு வாழ்க்கையை புதிய உத்வேகத்துடன் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதுவரை கண்ணாடியைப் பார்க்கும் போது கைகளும், கால்களும் இல்லாத சதுர உடம்பு மட்டுமே தெரிந்த நிக்கிற்கு அதன் பின் தான் தனது அழகிய கண்கள் தெரிந்தன என சிலிர்ப்பூட்டும் நம்பிக்கை விதைக்கிறார்.

அதன் பிறகு கடவுளைப் பழிப்பது, சாக நினைப்பது, முனகுவது, அழுவது, கவலை கொள்வது என அனைத்து வேண்டாத விஷயங்களையும் மூட்டை கட்டி தூர எறிந்து விட்டு உற்சாகமாகிவிட்டார் நிக். பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் மீட்டிங்களையும் நடத்தத் துவங்கிவிட்டார்.

அப்படி ஆரம்பித்த அவரது தெம்பூட்டும் பணி, 24 நாடுகளுக்குப் பயணம் செய்து இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் உரையாற்றுமளவுக்கு பரந்து விரிந்திருப்பது வியக்க வைக்கிறது ! தற்போது ஊனமுற்றவர்களுக்காக இயங்கும் “லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்” எனும் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் அவர்.

Nick5

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் பிறந்த நிக் இப்போது வசிப்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில். சோர்வுற்றும், சோகமுற்றும் இருப்பவர்களுக்கு இப்போது உற்சாக டானிக் இவர் தான், இவருடைய பேச்சுகள் தான்.

ஐயோ அது இல்லையே, இது இல்லையே என புலம்பும் மக்கள் எதுவும் இல்லாமல் எல்லாம் இருப்பதை விட மகிழ்ச்சியாய் இருக்கும் நிக்கைப் பார்த்ததும் விளக்கைப் போட்ட இருட்டு அறைபோல சட்டென தெளிவாகி விடுகின்றனராம்.

குறிப்பாக இளம் வயதினரின் தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, மன அழுத்தம் இவையெல்லாம் இவரைப் பார்த்ததும் பனிக்கட்டியில் வரைந்த ஓவியமாய் ஈரமாய் ஒழுகி மறைந்துவிடுகிறதாம்.

“கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை” எனச் சிரிக்கும் நிக் உண்மையிலேயே இந்த நூற்றாண்டின் வியப்புக் குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறார்.

Nick7

தமிழிஷில் வாக்களிக்க….

கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

 rock

மலைகளே…
பூமிப் பந்தின்
கர்வக் கிரீடங்களே,

மலைகளே,
மலைப்பின்
மறு பெயர்களே.

உங்கள்
தலை துடைக்க
மென்மையின் மேன்மையான
மேகத் துகள்.

உங்கள் உள்ளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறீர்கள்
ஓராயிரம்
ஒய்யாரச் சிற்பங்கள்.

காற்றுக்கும் கதிரவனுக்கும்
கலங்காத
கருங்கல்  இதயம்
உனக்கு.,

உன்னை
எப்படிப் புகழ்வது ?

நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்
வீரத்துக்கா,
சில செடிகளுக்கு
வேர் விட வழி விடும்
ஈரத்துக்கா ?

உன் மர்மப் பிரதேச
மரக்கிளைகளில்
தான்
உண்மைச் சங்கீதம்
உறங்கியே கிடக்கிறது.

சங்கீதத்தை
இரைச்சல்களிலிருந்து
இழுத்தெடுத்து
இதயம் வலிக்கும் போதெல்லாம்
மௌனத்துள் கரைந்து
இசைக்கச் சொன்னது
உன் மௌனம் தான்.

நாடுகளுக்கும்
காடுகளுக்கும்
நீ
வேலியாய் விளைந்தவன்.

சிங்கங்களின் சோர்வகற்ற
உன்னைப் போல உறுதியான
குகைகள்
குடைந்தவன்.

சில நேரம்
பரவசங்களின் பதுங்கு குழி
உயரமான உன்
முதுகு தான்.

நாங்கள்
உன்னைப் பார்த்து
ஆச்சரிய மூச்சு விடும்போது
நீ
பள்ளங்களைப் பார்த்து
பெருமூச்சு விடுகிறாயா ?
தெரியவில்லை.

ஆயிரம் தான் சொல்,
கல்லாய் நடக்கும்
மனிதர்களை விட,
கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே.

ரோபோவுடன் செக்ஸ் !

 

 Robo6 

 உலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் ! வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.

டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.

ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.

வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.

போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !

இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.

ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.

நன்றி : ஆனந்த விகடன்

கவிதை : மருதாணிக் கனவுகள்

old

அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,

பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,

ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,

அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை

விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,

கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,

படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.

எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.

புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.

தமிழிஷில் வாக்களிக்க…

ஆனந்த விகடன் : காட்டேரி காதல்

  twilight_bigteaserposter 

வேம்பயர்கள் அல்லது இரத்தக்காட்டேறிகள் என்றாலே உள்ளுக்குள் உதறல் எடுக்க வேண்டும். பயத்தினால் தூக்கம் கெடவேண்டும். அது தான் நியதி. ஆனால் ஒரு வேம்பயர் இளம் பெண்களுடைய தூக்கத்தைக் கனவுகளால் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வசீகர வேம்பையர் டுவைலைட் கதையில் வரும் நாயகன் எட்வர்ட் குல்லன்.

கதையின் நாயகி பதினேழு வயதான அழகுப் பெண் பெல்லா எனும் இஸபெல்லா ஸ்வான். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் இருக்கும் தந்தையுடன் வாழும் ஆசையில் அரிசோனா மாநிலத்தை விட்டு வருகிறார். புது இடத்தில், புது பள்ளிக்கூடத்தில் புதுப் புது நட்புகள். வகுப்பில் அருமே அமர்ந்திருக்கிறார் கதாநாயகன் எட்வர்ட். “தன்னை அறியாமலேயே” காதலில் விழுகிறாள்.

ஆனால் நாயகனோ ஒரு மர்ம மனிதனாய் இருக்கிறான். ஒருமுறை வேன் ஒன்று பெல்லாவை இடிக்கப்போகும் நேரத்தில் வெறும் கையால் வேனை நிறுத்தி பெல்லாவைக் காப்பாற்றுகிறான். திடீர் திடீரென காணாமல் போய்விடுகிறான். அப்புறம் தான் விஷயம் தெரிகிறது, அவன் ஒரு இரத்தக் காட்டேறி. ஆனால் மனுஷ இரத்தம் குடிக்காமல் வெறும் மிருக இரத்தம் குடிக்கும் நல்ல காட்டேறி.

Bella-and-Edwardஇவர்களுக்கிடையே வில்லனாய் வருகிறார் ஜேம்ஸ் எனும் படு பயங்கர இரத்தக் காட்டேறி. பெல்லாவின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க வேண்டும் எனும் வெறி அவனுக்கு. வேம்பயர்களுக்கும், மனுஷர்களுக்கும் காதல் என்பதை அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பார்முலா மாறாமல், எட்வர்ட் மற்றும் நல்ல காட்டேறிகள் எல்லாம் சேர்ந்து வில்லனின் திட்டங்களை ஒவ்வொன்றாய் முறியடிக்கின்றனர்.

வில்லனின் அட்டகாசங்களைப் பொறுக்க முடியாத பெல்லா தனது சொந்த ஊருக்கே ஓடி விடுகிறார். விடுவாரா வில்லன், சொந்த ஊருக்கே சென்று கதா நாயகியைக் “கடித்து” விடுகிறான். ஹீரோ தக்க சமயத்தில் சென்று கதாநாயகியை மீட்டு, வில்லனை ஒழிக்க, கதை முடிகிறது.

ஸ்டெபனி மேயர் எழுதிய நான்கு நாவல்களின் முதல் பாகம் தான் இந்த டுவைலைட். “இதையெல்லாம் புத்தகமா போட முடியாதும்மா” என 14 பப்ளிஷர்ஸ் நிராகரிக்க, கடைசியில் ஒரு பப்ளிஷர் புத்தகத்தைப் போட்டார். அடித்தது ஜாக்பாட். பெட்ரோலில் பற்றிய தீ போல இளசுகளின் மனசை சட்டென பற்றிக் கொண்டது நாவல். உலகெங்கும் படு ஹிட்டாகியிருக்கும் இந்த நாவலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகங்களும் வெளியாகி இலட்சக் கணக்கில் விற்று வசூலில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதியில் முப்பத்து ஏழு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, இருபத்து ஆறு நாடுகளில் விற்பனையாகி ஒரு சர்வதேச ஹிட் நாவலாகியிருக்கிறது இது. காரணம் இளசுகள் இந்த நாவலில் காட்டும் அதீத ஆர்வம்.

முதல் நாவலான டுவைலைட் கடந்த ஆண்டு திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. ராபர்ட் பாட்டின்சன் நாயகனாகவும், கிரிஸ்டன் ஸ்டிவர்ட் நாயகியாகவும் கலக்கியிருந்தனர். நாவலின் அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் திரையேறப் போகின்றன.

“இப்படி ஒரு கதை எழுத எப்படித் தோணிற்று” என்று கதாசிரியரைக் கேட்டால், ஒரு நாள் ஒரு கனவு கண்டேங்க, அதைத் தான் நாவலாய் எழுதினேன் என்கிறார் கூலாக.

ம் நமக்கும் வருதே கனவு !

சிறுகதை : அண்டி ஆபீஸ்

c1சுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.

குடிசை போன்ற தனது வீட்டின் உள் அறையில் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்து அழுது கொண்டிருந்தாள். உலகமே இருட்டானதுபோல் இருந்தது அவளுக்கு. நிமிர்ந்து பார்த்தாள்.

கூரை தனது சக்தியையும் மீறி உழைத்ததன் அடையாளமாக நைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய காற்றோ, ஒரு சிறிய மழையோ அழித்து விடக் கூடிய நிலையில் பரிதாபமாய் பல்லிளித்தது அது.

மொத்தமே ஒரு வராண்டாவும், இரண்டு அறைகளும் கொண்ட குடிசை அது. இன்னும் கலாச்சாரம் இற்றுப் போகவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு திண்ணை. அதுவும் சாணம் மெழுகப்பட்டிருந்த திண்ணை. திண்ணையை ஒட்டியிருந்த சுவற்றில் பலகைகள் இல்லாத ஒரு சன்னல். வறுமையின் நிலையை உடைந்து போன துணுக்குகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அது.

தரை சாணத்தினால் மெழுகப்பட்டிருந்தது. குண்டும் குழியுமாக கிடந்தாலும் ஒரு அதீத சுத்தம் அந்த வராண்டாவில் இருந்தது. வராண்டாவிலிருந்து வீட்டுக்கு வெளியே இறங்கினால் படியாகப் ஒரு கருங்கல். அதைத் தாண்டி வலது புறம் இருந்த தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஆடு மட்டும் தான் அவர்களுடைய ஒரே சொத்து.

வீட்டின் இடது புறமும் வலது புறமும் மூன்றடியோ நான்கடியோ இடம் உண்டு. பின் பக்கம் பள்ளத் தாக்கு, முன்பக்கம் மண் சாலை இரண்டுக்கும் இடையில் கிடக்கும் நிலம் இது. பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதனால் எப்போது இடிக்கப்பட்டு நிராயுதபாணியாய் நிற்க வேண்டிவருமோ என பயத்துடனே வாழ வேண்டிய கட்டாயம்.

அம்மா இன்னும் வரவில்லை. ஏமானின் வயலில் களை பிடுங்க போயிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும் ? மகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா ? பொத்திப் பொத்தி சிறகின் கீழே இரண்டு பெண்களையும், ஒரு பையனையும் வளர்ப்பவர்கள் அவர்கள்.

“நமக்கு எதுக்கு மோளே சொத்து ? நம்மளுக்கு கடவுள் உண்டு, எனக்கு நீங்க உண்டு, உங்களுக்கு நான் உண்டு. வேற என்ன வேணும் ? ஏதெங்கிலும் காச்சி பறக்கி குடிச்சோண்டு சந்தோசமா இருக்கணும்” வறுமையின் உக்கிரம் உலுக்கினாலும் தாய் இதைத் தான் அடிக்கடி சொல்வாள்.

குழந்தைகளை மிகப்பெரிய சொத்தாக பாவிக்கும் ஒரு அதீத பாசமுள்ள தாய் அவள். சுமதிக்குத் தெரிந்து அம்மா அழுததில்லை. பட்டினியாய் கிடந்ததுண்டு, பக்கத்து வீடுகளில் கடன் கேட்கப் போய் அவமானப் பட்டதுண்டு, கிழிந்த துணியை மட்டுமே உடுத்தி நடந்ததுண்டு. ஆனால் அழுததில்லை.

பிள்ளைகள் யாரும் சுமதியின் தாய் கனகம் அழுததைப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. இருப்பதைப் பிள்ளைகளுக்குக் உண்ணக் கொடுத்துவிட்டு. எல்லோரும் அயர்ந்து தூங்கியபின் விடிய விடிய விழித்திருந்து அவள் அழுத தினங்களே அனேகம்.

முந்திரி ஆலையில் மேஸ்திரி பணி செய்து கொண்டிருந்தவனுடைய வலையில் விழுந்து, அவனை நம்பி வாழ்க்கைப் பட்டதும். அந்த வாழ்க்கை பட்டுப் போனதும் அவளுடைய நினைவுகளின் அழியாமல் கனன்று கொண்டிருப்பதை அவளுடைய அழுகை அவ்வப்போது அறிவிக்கும்.

கனகத்தின் இளமைக் காலத்தில் சந்தையில் கனகத்துக்காகவே துணி வாங்கி, வளையல் வாங்கி, வாட்ச் வாங்கி தனிக்கவனம் எடுப்பதாய் பாவித்து அவளை வசீகரித்தவன் தங்கன். தன்னை ஒரு ஆண் நன்றாகக் கவனித்துக் கொள்கிறானே, இவனே கணவனாய் அமைந்து காலம் முழுதும் குடும்பத்தை இப்படியே கவனித்துக் கொண்டால் எத்தனை நன்றாய் இருக்கும் என எல்லா பெண்களையும் போலவே கனகமும் நினைத்தாள். திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு ஆரம்பித்த வாழ்க்கையும் துவக்க வருடங்களில் அழகாய் தான் இருந்தது. ஆனால் நீடிக்கவில்லை.

அவனுடைய தேவை வனப்பான அவளது உடல் என்பது அவளுக்கு விரைவிலேயே புரிந்து போய் விட்டது. பேசவும், கவனிக்கவும், சோகத்தைப் பகிரவும் துணையாய் வருவான் என நினைத்தவன் சுமதி பிறந்தபின் நிறம் மாறித் தான் போனான். ஆலையில் பணி செய்யும் பெண்களிடம் சில்மிஷம் என்றும், வேறோரு பெண்ணை வைத்திருப்பதாகவும் வதந்திகள் வரும்போதெல்லாம் கனகம் அடுப்படியில் நின்று அழுவாள். பெருங்காற்றில் சிதறடிக்கப்படும் நாய் குடை போல சிதறுவாள்.

மூன்றாவது பையன் பிறந்த கையோடு தலை முழுகிப் போனவன் தான். தெக்கேக்கரை வாழைத் தோப்புக்கு அருகே ஒரு குடிசை கட்டி பொன்னம்மா என்பவளோடு வாழ்க்கை நடத்துவதாய் பேசிக் கொண்டார்கள். இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை அவன்.

கனகம் உறுதியான மனசுக்காரி. எத்தனை அழுத்தமான சோகமான சூழல் எனினும் அதை பிள்ளைகளிடம் காட்டாமல் ஆனந்தமாய் இருப்பதாய் பாவிப்பாள். பொருளாதாரமா எல்லாம் ? ஒரு பிள்ளையின் சிரிப்பை ஒரு கோடி ரூபாய் தருமா என்பாள்.

பிள்ளைகளின் முன்னால் கனகம் அழுததில்லை என்றாலும், ஏறக்குறைய அழுகையின் விளிம்புக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்து நன்றாகப் படித்துக் கொண்டிருந்த சுமதியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் படிப்பை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது கனகம் கண்ணீர் விட்டாள். மகளின் முன் ஒரு குழந்தையாய் அவள் அழுதாள்.

“பத்தாங்கிளாஸ் படிக்கணுன்னா மருதங்கோடு போணும் மோளே. யூனிபாஃம் வேணும், புக் வேணும், பஸ்ஸுக்கு காசு வேணும்… அதெல்லாம் எப்படி மக்கா ? “ கனகம் கண்ணீர் விட்டதை சுமதி அன்று தான் பார்த்தாள்.

“வேண்டாம்மா… நான் பள்ளிக்கு போவல்ல… அண்டி ஆபீஸ் போறேன்” சுமதி சொன்னாள். அவளுடைய கண்களில் கல்வி கிடைக்காமல் போகிறதே எனும் ஆதங்கம் ஆழமரமாய் கிளர்ந்திருந்தது.

“அண்டி ஆபீஸா … அங்கேயெல்லாம் போவண்டாம். நான் பாக்கட்டு. ஏதெங்கிலும் வழி உண்டெங்கி உன்னை படிக்க வெப்பேன்” கனகம் சொன்னாள்.

அண்டி ஆஃபீஸ் என்பது முந்திரி ஆலைக்கு அந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் பெயர். ஏழைப் பெண்களின் உழைப்பை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுக்கும் இடம் என்று சொல்லலாம். பெரும்பாலும் மலையாள முதலாளிகளால் நடத்தப்படும் இந்த முந்திரி ஆலைகள் உழைப்பாளிகளை ஏளனப் பொருளாகவே பார்க்கிறது என்பதை கிராம மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் பிழைப்புக்கு வழியற்ற நிலையில் ஏதோ ஒரு கொழு கொம்பில் எட்டிப் பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டனர்.c2

உழைப்புக்கேற்ற ஊதியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பொதுவாக வாரம் ஐம்பது ரூபாய் முதல் முன்னூறு ரூபாய்கள் வரை கிடைக்கும். பாதியிலேயே படிப்பை விட்ட பெண்களுக்கும், குடிகாரக் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், வாய்ப்பு தருவது போல உழைப்பைச் சுரண்டுவது தான் பெரும்பாலும் இந்த முந்திரி ஆலைகளின் ஒரே நோக்கம்.

கேரளாவில் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்தால் உடனே சிவப்புக் கொடிகளை ஆலைகளின் முன்னே நட்டு ஊர் மக்கள் போராட்டங்களில் இறங்கிவிடுவார்கள் என்பதால் கேட்பாரற்ற தமிழகத்தின் குமரிக் கரையில் கடை விரித்திருப்பவர்கள் தான் இந்த முந்திரி ஆலை முதலாளிகள். தமிழ் பெண்களின் உழைப்பை மலையாளக் கரைக்குக் கடத்தும் முதலாளிகள் என்றும் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக மலையாளக் கரையை ஒட்டிய குமரி எல்லைகளில் வரிசையாக ஆலைகள் வைத்து ஏழைகளை ஏறக்குறைய நிரந்தர அடிமைகளாகவே ஆக்கி வைத்திருக்கின்றனர் இவர்கள்.

பண விஷயம் என்றில்லை. தொன்னூறு விழுக்காடும் பெண்களே இருக்கும் இந்த ஆலைகளில் நடக்கும் கலாச்சார அத்துமீறல்களும், பாலியல் தொந்தரவுகளும் வெளியே தெரிய வருவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு தான், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் எருமைத் தோலோடு வாழவேண்டும் என்னும் நிலமை தான் இங்கே வேலை செய்யும் தமிழகப் பெண்களுக்கு.

இது தான் சுமதி முந்திரி ஆலைக்குச் செல்வதாகச் சொன்னபோது கனகம் சட்டென மறுக்கக் காரணம். அவளுக்கும் கசப்பான அனுபவங்கள் முந்திரி ஆலையில் தானே ஏற்பட்டன. தங்கனை தனக்கு அறிமுகம் செய்து வைத்த முந்திரி ஆலை அல்லவா அது ! அதுவே பிற்காலத்தில் அவளுக்கு முந்திரி ஆலை மீது வெறுப்பு ஏற்படவும் காரணமாயிற்று.

வயலில் களை எடுப்பதும், நாற்று நடுவதும் என கனகத்தின் வாழ்க்கை திசை மாறிப் போனதற்கும் அவனே காரணம். களை எடுக்குமிடமும் ஒன்றும் பரிசுத்தமானதில்லை தான். வயலில் குனிந்து குனிந்தே வாழ்க்கையைப் போல முதுகும் மிகப்பெரிய கேள்விக்குறியாய் மாறிப் போகும்.

ஏமான் – என்றழைக்கும் முதலாளிகளின் வயலில் முதுகொடிய வேலை செய்தால் கிடைப்பது மதிய கஞ்சியும், இருபத்தெட்டு ரூபாயும். அதுவும் சமீப காலமாகத்தான் இருபத்தெட்டு ரூபாய். முன்பெல்லாம் ஆறு ரூபாய், எட்டு ரூபாய் என்று தான் சம்பளமே.

கஞ்சிக்காக ஏமானுடைய வீட்டுக்குப் போக வேண்டும். ஆனால் வீட்டுக்குள் நுழையக் கூடாது. வீட்டுக் கொல்லையில் வரிசையாய் அமர்ந்து தரையில் ஒரு பள்ளம் தோண்டவேண்டும். அந்தப் பள்ளத்தின் மேல் கையோடு கொண்டு வந்திருக்கும் வாழை இலையை வைக்க வேண்டும். அந்த வாழையிலை மீது கஞ்சி ஊற்றுவார்கள். பள்ளத்தில் சற்றே அமுங்கி சிறு பாத்திரம் போல இலை மாறிவிடும். நன்றாகப் பழுத்த பலா இலை ஒன்றை எடுத்து, எடுத்து வாகாய் வளைத்து ஈக்கில் ஒன்றைச் சொருகிமுடித்தால் கரண்டி ரெடி.

பனை ஓலையை பாத்திரம் போல வளைத்துக் கட்டி அதில் கஞ்சி ஊற்றிக் கொடுக்கும் ஏமான்களும் உண்டு. அதை கோட்டு பாளை என்று அழைப்பார்கள். ஏமான்களின் வீட்டுப் பாத்திரம் எதையும் உழைப்பாளிகள் தொட அனுமதி இல்லை. உழைப்பாளிகளின் வியர்வையோ, நிழலோ, சுவடோ, சுவாசமோ எதுவுமே ஏமான்களின் வீட்டுப்படியைக் கூட தீண்டக் கூடாது என்பதில் ஏமான்களும், முதலாளிகளும் எல்லாருமே ஒன்றாகவே இருந்தார்கள்.

பெண்கள் மேலாடையே போடக் கூடாது என்று இருந்த இடமல்லவா குமரி மாவட்டம். எத்தனை பெரிய போராட்டத்துக்குப் பின் அந்த அவமானங்கள் துடைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அவமானத்தின் தலைமுறையான தமிழ் பெண்களுக்கு இன்னும் மிச்சமிருக்கும் தாழ்வு மனப்பான்மை அவர்களுடைய தலைமுறை மரபணுக்களிலிருந்து வந்திருக்கக் கூடும். அப்படியே, முதலாளிகளின் கர்வமும் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வந்த மரபணுவின் வேலையாய் தான் இருக்க வேண்டும்.

கனகம் ஒரு பிடிவாதத்துக்காய் மகளை முந்திரி ஆலைக்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னாலும் அதிலிருக்கும் நடைமுறை சாத்தியமின்மை அவளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. மூத்த மகள். அவள் மட்டுமாவது படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு தான் அவளை படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கனகம். ஊரில் இருந்த பள்ளிக் கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையே இருந்தது. அதனால் அதுவரை சுமதியைப் படிக்க வைப்பதில் வெற்றி கண்டிருந்தாள் கனகம்.

பத்தாம் வகுப்பு பெரிய படிப்பு. அதற்கு ஏதேதோ அரசு அங்கீகாரங்கள் வேண்டும் என்றெல்லாம் காரணம் காட்டி கிராமத்து பள்ளியில் பத்தாம் வகுப்பே இல்லாமல் போயிருந்தது. படிக்க வேண்டுமெனில் பக்கத்து கிராமத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குச் செலவாகும். அந்தச் செலவை எப்படித் தாங்குவது ? வயிறு பசித்துக் கதறும் போது அதை அடக்கவே திராணியற்றுக் கிடக்கும் போது மகளை எப்படிப் படிக்க வைப்பது ? கனகத்தின் மனதுக்குள் மிகப்பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

வழக்கம் போலவே, வயிறு வென்று, வாழ்க்கை தோற்றது.

சுமதி முந்திரி ஆலைக்குச் செல்லத் துவங்கினாள்.

தொன்னூறு விழுக்காடு பெண்களால் நிரம்பியவையே முந்திரி ஆலைகள். முதலில் வறுப்பு எனப்படும் முந்திரிகளை வறுக்கும் இடம். இந்த இடத்தில் தான் தோட்டங்களிலிருந்து பெறப்படும் முழு முந்திரிகளை சரியான பக்குவத்தில் வறுப்பார்கள். சற்று உடல் உழைப்பு தேவைப்படும் வேலை இது. எனவே இந்த வேலைக்கு ஓரிரு ஆண்கள் மட்டுமே நிற்பார்கள்.

c3வறுப்புக்குப் பின் முந்திரிகள் “கல்லடி” எனும் பிரிவுக்கு கொண்டு வரப்படும். இங்கே முழுக்க முழுக்க பெண்கள் வரிசையாக அமர்ந்து முந்திரிகளை கல்லில் வைத்து ஒவ்வொன்றாய்த் தல்லி உடைப்பார்கள். உடைத்து உள்ளே இருக்கும் முந்திரிப் பருப்பை தனியே எடுத்து வைக்க வேண்டும். இதுவே அவர்களுடைய பணி.

முந்திரியில் இருக்கும் அமிலம் கைகளிலும், தரையிலும் படாமல் இருப்பதற்காக வெள்ளை மண்ணைக் கொண்டு முந்திரியை புரட்டுவார்கள். கைகளில் இந்த அமிலம் படாமல் இருக்க எண்ணையும், சுண்ணாம்பு பொடியையும் கைகளில் தேய்ப்பார்கள்.

இதையெல்லாம் தாண்டியும் இந்தப் பெண்களின் கைகள் முந்திரியிலிருந்து வரும் அமிலம் பட்டுப் பட்டு தோலுரிந்து, கறுத்து, பார்க்கவே பரிதாபமாக, ஒரு தொழுநோயாளியின் கையைப் போல துயரத்தின் சின்னமாய் இருக்கும். ஒரு பெண் அண்டி ஆபீஸ் போகிறாளா என்பதை அவளுடைய கையை வைத்துத் தான் கண்டு கொள்வார்கள். இந்தப் பெண்களின் கைகள் சொல்லும் துயரக் கதைகளில் இரத்தமும், வலியும் கசிந்து கொண்டே இருக்கும்.

ஒரு கிலோ முந்திரியைத் தல்லி உடைத்துக் கொடுத்தால் ஆறு ரூபாய் ஐம்பது காசுகள் கிடைக்கும். திறமைக்கும், கைப் பழக்கத்துக்கும், லாவகத்துக்கும், வேகத்துக்கும் தல்லும் அளவு வேறுபடும். இரண்டு கிலோ முதல் ஏழெட்டு கிலோ வரை தல்லுவார்கள். முதுகு வலிக்க கவனம் சிதறாமல் தொடர்ந்து உடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் இவர்களுடைய ஒரே பணி.

பணி செய்யும் பெண்களைக் கண்காணிக்க எல்லா பிரிவுகளிலும் ஒரு ஆண் மேஸ்திரி இருப்பான். தல்லு பிரிவிலுள்ள ஆணை ‘தல்லு மேஸ்திரி’ என்பார்கள். மேஸ்திரி என்பது அவர்களைப் பொறுத்த வரை பெரிய பணி. மேற்பார்வையாளர் அவர் தான். மேஸ்திரிகள் பெரும்பாலும் கேரள இளைஞர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலை செய்யும் பெண்களை இளக்காரமாய் பார்த்தே பழகிப் போனவர்கள், அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டம் விடுவதே அவர்களுடைய முக்கியமான வேலை.

பெண்கள் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டாலோ, சற்று ஓய்வாய் இருந்தாலோ உடனே திட்டு விழும், அதுவும் அசிங்கமாக. யாரேனும் ஆசைப்பட்டு ஒரு முந்திரிப்பருப்பை வாயில் போட்டுவிட்டால் அவ்வளவு தான் வசவும், திட்டும், அவமானவும், வெளியேற்றமும் நடக்கும். தல்லி உடைக்கும் போது முந்திரிப் பருப்பு உடைந்து விடக் கூடாது, சிதைந்து விடக் கூடாது, அப்படி தவறுகள் நடக்கும் போதெல்லாம் திட்டு சரமாரியாய் விழுந்து கொண்டே இருக்கும். எனவே மேஸ்திரி என்றாலே பெண்கள் பயந்து நடுங்கி அமைதியாய் அமர்ந்திருப்பார்கள்.

இந்த மேஸ்திரிகளின் பார்வை பெரும்பாலும் பெண்களின் மேனியை வருடி அவர்களுக்கு அவஸ்தையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதுவும் வனப்பான ஒரு பெண் வந்துவிட்டால் அவ்வளவு தான். இரட்டை அர்த்த வசனங்களும், அங்கங்களை நோட்டம் விடுதலும் என அவர்களுடைய பொழுது கழியும்.c4

இங்கிருந்து சேகரிக்கப்படும் முந்திரிப் பருப்பை மீண்டும் ஒருமுறை வறுப்பார்கள். அதை போர்மை என்பார்கள். இந்த வறுப்பு எதற்கென்றால் முந்திரிப் பருப்பின் மீது இருக்கும் மெல்லிய தோல் எளிதாக கழன்று வருவதற்காக !

அந்த மெல்லிய தோலை அகற்றும் பிரிவை பீலிங் என்பார்கள். இங்கே நல்ல உடையாத பருப்பு, உடைந்தது என்றெல்லாம் தரம் பிரித்தலும் நடக்கும்.

அதன் பின் பாசிங் எனப்படும் பிரிவுக்குச் செல்லும் இந்த முந்திரிகள். அங்கே கடைசி கட்ட தரம் பிரித்தல் நடைபெறும். முந்திரியின் வெளித் தோலை தல்லும் இடத்திலிருந்து, பீலிங், பாசிங் போன்ற இடங்களுக்கு முன்னேறுதல் வேலை செய்யும் பெண்களைப் பொறுத்த வரை ஒரு பதவி உயர்வு. ஏனெனில் சில ரூபாய்கள் அதிகமாய் சம்பாதிக்க இந்த மாற்றம் உதவும். அங்கெல்லாம் மேஸ்திரிகளின் “சிறப்புக் கவனத்தைப்” பெற்ற பெண்களே இடம் பெறுவார்கள்.

அந்தப் பிரிவுகளெல்லாம் கல்லடி பிரிவை விட்டு தனியே மறைவாகவே இருக்கும். அங்கே மேஸ்திரிகள் நடந்து கொள்வது வெளியே தெரிய வராது. தல்லு பிரிவில் உள்ள பெண்களில் நம்பிக்கைக்குரியவர்களும், நீண்ட நாள் பணி புரிபவர்களும், அல்லது நல்ல வனப்பான – மேஸ்திரிகளின் காமப் பார்வையை தீப்பிடிக்க வைப்பவர்களும் இந்த பிரிவுகளுக்குச் செல்வார்கள்.

இதைத் தவிர எல்லா வேலைகளும் முடிந்தபின் முந்திரிகளை எடை போடுவது, ஆலையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்யும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள் அவர்களை மெக்காடுகள் என்பார்கள். அவர்களுக்கு ஒரு நாள் பதினைந்து ரூபாய் அதிகம் கிடைக்கும். எனவே அந்த சில மணி நேர வேலைக்காக பலரும் முனைவார்கள்.

சுமதி, கடந்த மாதம் வரை ஒரு சிட்டுக் குருவியாய் பள்ளிக்கூடத்திற்கு பறந்து திரிந்தவள். இப்போது முந்திரி ஆலைக்கு வரவேண்டிய கட்டாயம். அவளுடைய தோழி லீலா தான் அவளை முந்திரி ஆலைக்குக் கூட்டிக் கொண்டு வந்து மேஸ்திரியிடம் அறிமுகப் படுத்தி வைத்தாள்.

மேஸ்திரிக்கு சுமதியைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. வனப்பான தேகம், பள்ளி மாணவியாகவே வளர்ந்ததால் தெளிவான, அனுபவமற்ற , கள்ளம் கபடமற்ற கண்கள். இவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மேஸ்திரி உள்ளுக்குள் கருதிக் கொண்டான்.

சுமதி கல்லடி பிரிவுக்குள் தள்ளப்பட்டாள். நாட்கள் நகர்ந்தன. சுமதி தனது சுவாரஸ்யமான வாழ்க்கையை முந்திரி ஆலைக்குள் இழக்கத் துவங்கினாள். காலை முதல் இரவு வரை அமர்ந்து முந்திரி தல்லித் தல்லி அவளுடைய விரல்களெல்லாம் தோலுரிந்து பரிதாபமாய் இருந்தன.

கையில் பூசிக்கொள்ள அவளுக்கு வெள்ளை நிற மண்ணைக் கொடுத்தார்கள். அதை அவ்வப்போது கைகளில் பூசிக்கொண்டு வேலை செய்தாள் அவள். அடிக்கடி அவளுடைய கண்களில் கண்ணீர் வழியும். பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடம் படிப்பதாகவும், வீட்டுப் பாடம் செய்வதாகவும், முதல் மாணவியாக வந்ததை வயல் வரப்பினூடே ஓடிச் சென்று அம்மாவிடம் காட்டுவதாகவும் பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும்.

“என்ன சுமதி… அனுபவம் இல்ல அல்லே… ஸ்பீடு கொறவாணு… ஞான் டிரெயினிங் எடுக்கணோ ? “ பாலு மேஸ்திரியின் இரட்டை அர்த்த வசனங்கள் சுமதியின் காதுகளுக்குள் ஈயமாய் பாய்ந்தன. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

முந்திரிகளை வகை பிரிக்கும் பகுதியிலுள்ள மேஸ்திரி அவன், பால கிருஷ்ணன். பாலு மேஸ்திரி என்று தான் அவனை அழைப்பார்கள். அவனுக்கு சுமதியைப் பார்த்ததிலிருந்தே உள்ளுக்குள் ஒரு வெறி. சுமதி எதுவும் பேசவில்லை. கண்கள் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து விட்டு குனிந்து தனது வேலையைத் தொடர்ந்தாள்.

“சுமதி.. நல்ல குட்டியாணு. சுமதிக்கு எந்தெங்கிலும் ஆவஸ்யம் உண்டெங்கில் சோதிக்கணே..” பாலு மேஸ்திரி குறும்புப் பார்வையுடன் சுமதியிடம் சொன்னான். கூடியிருந்த பெண்களில் சிலர் நமுட்டுச் சிரிப்புடனும், சிலர் கவலையுடனும் சுமதியைப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியும் மேஸ்திரிகளின் பேச்சும் அதன் உள் அர்த்தமும்.

சுமதி அவமானமாய் உணர்ந்தாள். ஆனாலும் எதுவும் பேசவில்லை. அவளுடைய மனதுக்குள் எப்போதுமே அம்மா வந்து போவாள். அதன்பின் தங்கை, பின் தம்பி.. வரிசையாய் வந்து போவார்கள். தம்பியையாவது படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து பெரிய ஆள் ஆனபின் சினிமா கதா நாயகன் போல வந்து இந்த மேஸ்திரியைப் புரட்டி எடுக்க வேண்டும். உள்ளுக்குள் சுமதிக்கு எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

நாட்கள் ஓடின. ஒருநாள் சுமதியை தல்லு பிரிவிலிருந்து முந்திரிகளை வகை பிரிக்கும் பிரிவுக்கு மாற்றினார்கள். சுமதி அதிர்ந்தாள். இந்த மாற்றம் அவளுக்குப் பிடிக்கவில்லை. இது பாலு மேஸ்திரியின் வேலை தான் என்பது சுமதிக்கும், கூடியிருந்த பெண்களுக்குப் புரிந்தது. அவன் இவளை வளைப்பதற்காகத் தான் அங்கே இழுக்கிறான் என பெண்கள் கிசு கிசுத்தார்கள்.

சுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேசாமல் வேலையை விட்டு விடலாமா ? அப்படி விட்டு விட்டால் குடும்பம் மீண்டும் தவிக்குமா ? அவளுடைய மனதுக்குள் பாறையாய் சோகம் வந்தமர்ந்தது. வேறு வழியில்லை, தரும் வேலையைச் செய்து தான் ஆகவேண்டும்.

இன்னும் வாரக் கடைசி ஆகவில்லை. இந்த வாரம் வேலை அனுபவம் மோசமாய் இருந்தால் வாரக் கடைசியில் பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிட வேண்டியது தான். வேறு ஏதேனும் வேலை தேடலாம். டவுணில் சென்று துணிக்கடைகளிலோ எங்கேனும் ஒரு வேலை கிடைக்குமா என பார்க்கலாம். சுமதி மனதுக்குள் நினைத்தாள்.

முதல் நாள் சுமதிக்கு நன்றாகவே சென்றது. பாலு மேஸ்திரி வளைய வளைய வந்தாலும் ஏதும் தொந்தரவு தரவில்லை. அடிக்கடி ஓரக் கண்ணால் பார்ப்பதும். அருகில் நெருங்கி வந்து சில்மிஷப் பார்வை ஒன்றை வீசுவதும் என அலைந்து கொண்டிருந்தான்.

மறு நாள் அவனுடைய சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த சுமதியிடம் வந்து பாலு குழைந்தான். அங்கே சுமதியைத் தவிர இரண்டு பெண்களும் இருந்தார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்ப்பவர்கள்.

“எந்தா சுமதி… ஒந்நும் சம்சாரிக்காறில்லே … ?” பாலு கேட்டான். சுமதி பதில் பேசவில்லை.

“சுமதி நல்ல குட்டியாயிட்டு இருந்நால் ஞான் நின்னே வலிய ஆளாக்கும்… “ பாலு தொடர்ந்தான். அருகில் இருந்த இரண்டு பெண்களுக்கும் பாலுவின் பேச்சு புரிந்து போயிற்று எதிர்த்துப் பேச முடியாத நிலையில் அவர்கள் ஏதும் கேட்காதது போல அமைதியாய் இருந்தார்கள்.

“ஒரு திவசம் எனிக்கு நல்ல ஊணு தரணே… “ பாலு சொல்லிக் கொண்டே சுமதியின் அருகே வந்தமர்ந்து அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான்.

ஒரு நாள் நல்ல சாப்பாடு போடு எனும் அர்த்தம் என்னவென்பதை சுமதியும் விளங்கிக் கொண்டாள். சட்டென அவளுக்குள் அமுங்கியிருந்த கோபம் வெளிப்பட்டது.

“போடா மயிரே…. “ சுமதியின் கோபம் வார்த்தையாய் தெறித்தது. பாலு சட்டென திடுக்கிட்டுப் பின்வாங்கினான். அவளுடைய கோபத்தைக் கண்ட அருகில் இருந்த பெண்களும் திடுக்கிட்டனர். உள்ளுக்குள் அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் என்ன நடக்குமோ என பயந்தனர்.

பாலு அவமானமாய் உணர்ந்தான். இரண்டு பெண்களுக்கு முன்னால் வைத்து தன்னை இப்படிப் பேசி விட்டாளே என கூனிக் குறுகினான். ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை.

“செரி.. செரி.. ஞான் போகாம். நீ ஜோலி செய்…” சொல்லி விட்டு வெளியே போனான் பாலு.

அவமானப் பட்ட பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஏதும் நிகழாத பாவத்தில் வேலையைத் தொடர வேண்டும் என்பது தான் அந்த முந்திரி ஆலையின் விதி. ஆனால் பாதிக்கப்பட்ட ஆண் அப்படி இருக்க மாட்டான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது மறு நாள்.

மறு நாள் மாலை.

சுமதி வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள். அப்போது பாலு வந்தான். கூடவே தலைமை மேஸ்திரி ஒருவர்.

“சேட்டா… இதாணு பெண்ணு. பயங்கர மோஷணம். திவசமும் அண்டி மோஷ்டிச்சு கொண்டு போகயா… நல்ல குட்டியல்லேந்நு இவிட ஜோலி குடுத்தா இதாணு அவளுடே பணி” பாலு சொன்னான்.

சுமதி அதிர்ந்தாள். என்னது நான் முந்திரி திருடுகிறேனா ? எத்தனை கொடூரனாய் இருக்கிறான் இவன். இப்படி பழி போடுகிறானே ! அவனுடைய காமத்துக்கு இடம் கொடுக்கவில்லையெனில் என்னைத் திருடி என்பானா ? சுமதி தளர்ந்தாள்.

பாலு அருகில் நின்றிருந்த இரண்டு பெண்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டு சுமதியைப் பார்த்தான்..

பாலுவும், தலைமை மேஸ்திரியும், சுமதியும் மட்டுமே அந்த பிரிவில் நின்றிருந்தனர்.

“நான் திருடல்ல. என்னை விடுங்க.. கள்ளம் சொல்ல மாட்டேன்” சுமதி மெலிதாய் சொன்னாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை அவளுடைய மனம் சொல்லிற்று. கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இதற்குள் வெளியே சென்ற மற்ற இரண்டு பெண்களும் விஷயத்தை மற்ற பெண்களின் காதுகளில் போட அவர்கள் ஆங்காங்கே மறைந்திருந்து இவளுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“நின்னே எனிக்கு விஸ்வாசமில்ல… நின்னே ஞான் செர்ச் செய்யணும் “ பாலு சொன்னான்.

c5என்ன சோதனையா ? சுமதி உள்ளுக்குள் பயந்து போய் பின் வாங்கினாள்.

“நீ கள்ளியில்லங்கில் பின்னே பேடி எந்தினா குட்டி ? செர்ச் செய்யட்டே..” தலைமை மேஸ்திரி சொன்னான்.

“செர்ச் செய்யுங்க பிரச்சனை இல்ல. ஏதெங்கிலும் பெண்ணுங்க செர்ச் செய்யட்டு…நீங்க என்ன தொடாதீங்க….” சுமதி கெஞ்சினாள்.

பாலு எதையும் காதில் வாங்கவில்லை. அவளுடைய தோளில் இருந்த தாவணியை உருவி உதறினான்.

சுமதி அதிர்ச்சியின் உச்சத்தில் விழுந்தாள். தாவணி இல்லாத நிலையில் நிர்வாணமாய் உணர்ந்தாள். இப்படி ஒரு நிகழ்வை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. கைகள் இரண்டையும் நெஞ்சுக்குக் கவசமாய் போர்த்திக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.

பாலு விடவில்லை. முந்திரி இருக்கிறதா என சோதனையிடும் சாக்கில் அவளுடைய மேனியில் கைகளை ஓட்டினான். சுமதி கத்தினாள். திமிறிக் கொண்டு எழுந்து கீழே கிடந்த தாவணியையும் எடுத்துப் போர்த்திக் கொண்டே ஓடினாள்.

வெளியே ஓடும் போதுதான் கவனித்தாள். பெண்கள் ஆங்காங்கே நின்று வெறுமனே வேடிக்கை பார்ப்பதை. யாரும் தனக்கு உதவாமல் தன்னை அவமானச் சின்னமாகப் பார்ப்பதை. அதைக் கண்ட சுமதியின் அழுகை இன்னும் அதிகரித்தது.

அவளைத் தொடர்ந்து வெளியே ஓடி வந்த பாலுவும் சட்டென கவனித்தான், ஆலையிலுள்ள பெண்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் மறைந்து நின்று கவனிப்பதை. சட்டென வேகம் குறைத்து உரக்கச் சொன்னான்.

“அண்டி கள்ளீ… பிடி கிட்டியதும் ஓடுந்நு… ஓடு… நினிக்கி இனி இவிடே ஜோலி இல்ல கேட்டோ.. அண்டிக் கள்ளி… “ பாலு அவளுக்கு திருடிப் பட்டம் சூட்டினான்.

ஆனால் கூடியிருந்த பெண்கள் உண்மை அறிந்தவர்கள் ஆனால் எதுவும் எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்கள். அமைதியாய் கலைந்தனர். தன்னைத் திட்டியவளைப் பழிவாங்கிய திருப்தியில் பாலு மேஸ்திரி எனும் மிருகம் உள்ளே சென்றது.

சுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.

இந்த அவமானம் இனிமேல் ஊரில் பரவி விடுமே என அவளுக்குள் திரும்பத் திரும்ப குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால் ? மேஸ்திரிகளுக்கு எதிராய் பேசும் குரலும் இல்லை, பணமும் இல்லை. இந்த அவமானங்கள் தான் வாழ்க்கையா ? சுமதி அழுது கொண்டிருந்தாள்.

அம்மா இன்னும் வரவில்லை. அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை சுமதிக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன என தோன்றியது சுமதிக்கு.

பேசாமல் செத்துப் போயிடலாமா ?

“சுமதீ…. “ அம்மாவின் குரல் அந்தக் கிராமத்தையே உலுக்கி எடுத்தது.

“பொத்தி பொத்தி வளத்தேனே மோளே.. என்னை விட்டோண்டு போனியே.. எனக்கோட ஒரு வாக்கு கூட சொல்லாம போனியே மோளே… கெட்டினவன் பாதில தள்ளுனான். நீயும் இப்படி பாதில கரைய வெச்சிட்டு போனியே … நீ இல்லாத நான் என்ன செய்வேன்… கடவுளே… என் பொன்னே… உன்னை கஷ்டப்பட்டு வளத்தது இப்படி காலனுக்கு குடுக்கவா ?” அம்மாவின் குரல் ஊரையே உலுக்கியது.

“அக்கா… என் செல்ல அக்கா… ஏன்க்கா இப்படி செய்தே ? எங்களுக்கோட இருக்க பிடிக்கலியா ? ஏன்க்கா ? இப்படி செய்தே… நீ இல்லாத எங்களுக்கு விளையாட கூட ஆளில்லியேக்கா ? ” தங்கை கதறினாள்.

“ஐயோ அக்கா… எப்பவும் சிரிச்சிட்டு என்னை கொஞ்சுவியே.. இப்போ ஏன்க்கா பேசாம கிடக்குதே… “ தம்பியின் குரலும் கதறியது.

அழுகையும், ஒப்பாரியும் அந்த வீட்டை அடர்த்தியாய் ஆக்கிரமித்தபோது சுமதியின் தோள் தொட்டு உலுக்கினாள் அம்மா.

“சுமதி… ஏய் சுமதி ”

சட்டென விழித்துக் கொண்டாள் சுமதி. தான் சாகவில்லை என்பதும், சும்மா கற்பனை செய்து தான் பார்த்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ளவே சுமதிக்கு கொஞ்ச நேரம் பிடித்தது.

“அம்மா….அண்டி ஆபீஸ்ல…” சுமதியின் குரல் பிசிறடித்தது.

“லீலா எல்லாத்தையும் சொன்னா… “ அம்மாவின் குரல் இறுக்கமாய் இருந்தது. பெருமூச்சு ஒன்று ஆழமாக வெளிவந்தது.

“நீ கிறுக்குத் தனமா ஏதெங்கிலும் செய்யக் கூடாதேன்னு தான் அரக்கப் பரக்க ஓடி வந்தேன்… “ அம்மா தொடர்ந்தாள்.

சுமதி அம்மாவையே பார்த்தாள்.

“நீ.. எனக்க மோளாக்கும். நீ அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்னு நினைச்சேன். எங்கிலும் வந்து சேரோக்குள்ள கும்பி கலங்கி போச்சு. கள்ளி வெட்டி சாரியோண்டு போன பயலுவ எப்பிடியெங்கிலும் நம்மள கொல்ல பாப்பினும். சாவருது மோளே.. சாவருது. நான் பட்ட கஷ்டம் உனக்கு அறிஞ்சு கூடாம். என்ன விட்டோண்டு உனக்க அப்பன் ஓடும்போ நீங்க கொஞ்சு பிள்ளிய. உங்களை வளத்தோக்கு நான் பட்ட கஷ்டமும் மானக் கேடும் கொறச்சொண்ணும் இல்லா… ஆனா நான் சாவல்ல…. சாவருது மக்களே சாவருது. நாம என்ன சாவோக்கு பொறந்தவியளா ? வாளணும். எல்லா பயலுவளுக்கும் மின்னே நாம நிமிந்து வாளணும்” அம்மா இறுக்கம் கலைக்காமல் சொன்னாள்.

“அம்மா… எல்லாரும் பாத்தோண்டு நிந்நினும். அந்த தொட்டி பய … எனக்கு பயங்கர மானக்கேடா இருந்து… “ சுமதி அழ ஆரம்பித்தாள்.

“நீ எதுக்கு மோளே கரையுதே ? ஒரு வாயில மண்ணு விளுந்தோண்டு போன மேஸ்திரி உன்னை கள்ளீன்னு சொன்னா நீ கள்ளியாவியா ? செல்லு மோளே. நமக்க ஜீவிதம் இப்பிடி தான். இனி நம்ம கொச்சு பய தலையெடுத்து வரணும். அதுவர நம்மளை இவனுவ எல்லாம் நல்லா மானங் கெடுத்த பாப்பினும். ஒந்நுக்கும் பேடிச்சரு. பேடிச்சல்லங்கி பேய் கூட அடிச்சாது. பின்னயாக்கும் இந்த கிறுக்கு பயலுவ” அம்மா சொல்லச் சொல்ல சுமதியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் விழ ஆரம்பித்தது.

அம்மா அழவில்லை. நடந்திருப்பதை ஒரு அவமானமாய் உணரவில்லை. அம்மா வாழ்க்கையில் அடிபட்டிருக்கிறார்கள். கணவனால், சமூகத்தால், உறவினர்களால். தானும் அம்மாவுக்கு ஒரு சோகத்தைக் கொடுக்க நினைத்தேனே என நினைக்கும் போதே சுமதிக்கு அழுகை வந்தது. அம்மா வாழ்க்கையில் எத்தனை பெரிய துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பதையும், அதன் வலியின் ஆழம் எவ்வளவு என்பதையும் இப்போது சுமதியால் தெளிவாக உணர முடிந்தது. அம்மாவின் உறுதி இவளுடைய சோகங்களையெல்லாம் துடைத்தெறிந்தது போல் தோன்றியது. அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மொகங் களுவியோண்டு வா… சோறு தின்னுலாம்.” அம்மா சுமதியின் தோள் தொட்டு எழுப்பினாள்.

“அம்மா.. இனி நான் அந்த அண்டி ஆபீசுக்கு போவ மாட்டேன்” சுமதி சொன்னாள்.

“நீ அங்க போகண்டாம் மோளே. ஒரு கதவு மூடினா ஒம்பது கதவு தொறக்கும். பேடிச்சாத. எல்லாத்துக்கும் வழி உண்டாவும். யாரும் நம்மள விழுங்க மாட்டினும்.” அம்மா சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

சுமதியின் மன பாரம் குறைந்தது போலிருந்தது. எத்தனையோ துயரங்களையும், அவமானங்களையும், கொடுமைகளையும் அந்தப் பகுதியிலுள்ள ஏழைப் பெண்களின் மேல் மூட்டை மூட்டையாய் சுமத்தும் முந்திரி ஆலைகள் எது குறித்த கவலையும் இன்றி இருளுக்குள் மூழ்கத் துவங்கின.

0

தமிழிஷில் வாக்களிக்க…

நிலா 40 !!

 

 

1969

ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 !

உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” என அழைக்கப்படும் மனிதனின் முதல் நிலவு நடை உணர்ச்சி பூர்வமாக திரும்பிப் பார்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ல் இளைஞர்களாக பூமிக்கு வெளியே போய் நிலவைப் பார்த்து வந்தவர்கள் இப்போது முதுமைக்காலத்தில் சந்தித்து தங்கள் இறந்த காலத்தின் பறந்த நினைவுகளைப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.

மைக்கேல் காலிங்ஸ் விண்கலத்தில் அமர்ந்து நிலவுக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்க, பதட்டமும், பயமும், திகிலும் நிறைந்த மனநிலையில் வேற்றுக் கிரகத்துக்குள் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் பாதம் பதித்த நிமிடங்கள் இன்னும் அவர்கள் மனதில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் போலவே விரிகிறது.

இவர்கள் பயணம் செய்த விண்கலத்தின் தொழில் நுட்பத்தை விட மிகச் சிறந்த தொழில் நுட்பம் இன்றைக்கு நாம் சர்வ சாதாரணமாய் கையில் வைத்துச் சுழற்றும் செல்போனுக்கு உண்டு ! இன்றைக்கு அருங்காட்சியகத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய அந்த தொழில் நுட்பத்தைக் கொண்டே நிலவு வரை போய் வந்ததை நினைத்து இப்போது வியக்கின்றனர் இந்த விண்வெளி வீரர்கள்.

ஒரே விண்கலத்தில் நிலவு வரை சென்று திரும்பியிருந்தாலும், நிலத்தில் வந்தபின் தனித் தனியாகிவிட்டார்கள். எப்போதாவது அத்தி பூத்தார்போல சந்தித்துக் கொள்வது தான் இவர்களது வழக்கம். இதற்கு முன் 35வது ஆண்டு நிறைவு விழாவில் சந்தித்துக் கொண்டவர்கள் இப்போது 40வது ஆண்டு நிறைவு விழாவில் கைகுலுக்கிக் கொண்டனர். அவ்வளவு தான்.

ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய விண்வெளி மியூசியத்தில் நடந்த நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா விண்வெளி ஜாம்பவான்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், நாசா ஊழியர்கள் என ஒரு சிறப்பு மிக்க விழாவாக நடந்தது.

இந்த நினைவு கூரலின் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும் சந்தித்தனர் இந்த மூன்று விண்வெளி வீரர்களும். நிலவு வரை போய்வந்தவர்களின் அருகில் நிற்பதே பரவசமானது என நெகிழ்ந்து போனார் கருப்புத் தங்கம் ஒபாமா.

8“நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஹவாய் தீவில் என்னுடைய தாத்தாவின் தோளில் அமர்ந்து கொண்டு விண்வெளி வீரர்களை கொடியசைத்து வரவேற்றபோது எனக்கு வயது எட்டு. அமெரிக்கர்கள் தங்கள் கனவை எப்படி நனவாக்குகிறார்கள் என்பதன் மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பயணம் என்றார் என்னைத் தோளில் தாங்கியிருந்த தாத்தா.” என ஒபாமா மழலைக்கால நினைவுகளை சுவாரஸ்யமாய் நினைவு கூர்ந்தார்.

 

 

 

 

 

ஒபாமாவைச் சந்தித்த விண்வெளி வீரர்கள், அமெரிக்கா மீண்டும் இது போன்ற விண்வெளிப் பயணங்கள் நடத்தவேண்டும். குறிப்பாக செவ்வாயை இலக்காய் வைத்து புதிய புதிய விண்வெளிப் பயணங்கள் நடத்த வேண்டும் என தங்கள் விருப்பத்தையும் வெளியிட்டனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒபாமா, எதையும் சட்டென ஒத்துக் கொள்ளவில்லை. “ஆகட்டும் பார்க்கலாம்” என நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். செவ்வாய்ப் பயணத்துக்கு தோராயமாக 150 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். மக்கள் வேலையில்லாமல் நெருக்கடியில் இருக்கும் போது 150 பில்லியன் டாலர்களை விண்வெளிப் பயணத்துக்கு ஒதுக்கினால் ஒபாமாவின் கதை கந்தல் தான்.

ஏனென்றால் அமெரிக்காவிலுள்ள 60 சதவீத மக்களும் இதை எதிர்க்கிறார்கள். முதலில் பூமியைக் கவனியுங்கள் மகாராஜாவே !, பிறகு வானத்தைப் பார்க்கலாம் என்பதே அவர்களுடைய ஒட்டுமொத்த குரலொலி. பொருளாதாரம் படுகாயமடைந்து கிடக்கும் போது எதற்கு வெட்டியாய் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். முதலில் ஆடாமல் அசையாமல் நிற்கப் பழகுங்கள், பிறகு பறக்கப் பழகலாம் என படபடக்கின்றனர் அவர்கள்.

எனினும் நாசா செவ்வாய்க்கான பயணத்தையே அடுத்த மாபெரும் இலக்காக வைத்திருக்கிறது. “கான்ஸ்டலேஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் போகும் வழியில் நிலவில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு செவ்வாய்க்குச் செல்லுமாம் ! எனினும் நாசாவின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டான 18.6 பில்லியனை வைத்துக் கொண்டு பயணத்தை கற்பனையில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்பது தான் உண்மை.

செவ்வாய்ப் பயணம் நிலவுப் பயணத்தை விட பல மடங்கு சிக்கலானது. இப்போது இருக்கும் அதி நவீன டெக்னாலஜியை வைத்துப் பார்த்தால் கூட மனிதன் இங்கிருந்து கிளம்பி செவ்வாய்க்குச் சென்று சேர ஆகும் காலம் குறைந்த பட்சம் ஏழு மாதங்கள். பயணம் செய்பவர்கள் ஏழுமாதங்கள் விண்வெளியில் தாக்குப் பிடிப்பார்களா, தேவையான தண்ணீர் கொண்டு போக முடியுமா போன்றவையெல்லாம் விடை தெரியாத வினாக்கள்.

செவ்வாய்க்குப் போவது ஒரு அற்புதமான விஷயம். செவ்வாயில் இரண்டு நிலவுகள் உள்ளன, அதில் ஒன்றான “ஃபோபோஸ்” எனும் நிலவுக்குப் போவதை நாசா தனது அடுத்த இலக்காக வைத்துக் கொள்ளலாம் என கருத்து சொல்கிறார் முதன் முதலில் நிலவுக்குப் போய் வந்த மைக்கேல் காலின்ஸ்.

ரஷ்யாவுடன் நிகழ்ந்த ஆரோக்கியமான அறிவியல் மோதலே இந்த முதல் நிலவுப் பயணத்தின் மிக முக்கிய காரணம். இந்த பயணம் தான் நாடுகளுக்கிடையே உள்ள போர்க் குணத்தை மாற்றி அறிவியல் போரை தீவிரமாய் நடத்த தூண்டுகோலாய் இருந்தது என ஆரம்பிக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்வெளிப் பயணங்களுக்கு விஞ்ஞானிகள் துணிச்சலுடன் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய விண்வெளிப் பயணத்தின் ஒலிகளையும், படங்களையும் நவீன தொழில் நுட்பத்தில் தெளிவாக்கி நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அப்போதையை வீடியோவிலிருந்து சில சிலிர்ப்பூட்டும் படங்களை ஆண்ட்ரூ செய்கின் எனும் எழுத்தாளர் “நிலவிலிருந்து எழுந்த குரல்கள்” எனும் தனது நூலில் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இருபத்து ஓரு மணி நேரம் இவர்கள் நிலவில் செலவிட்ட நிமிடங்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இதே எழுத்தாளர் 1986ம் ஆண்டு “எ மேன் ஆன் தி மூன்” எனும் நூலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5

விண்வெளி வீரர்களுக்கு இன்று நிலவு சாதாராண சங்கதியாகிவிட்டது. நிலவில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் பாதங்களைத் தொடர்ந்து இன்றுவரை 12 பேர் நிலவின் மீது நடந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட “ஸ்கை வாக்” எனப்படும் விண்வெளிப் பயணங்களும் நடந்திருக்கின்றன.

நாசா விஞ்ஞானிகள் நிலவுப் பயணத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினாலும், இதெல்லாம் வெறும் கப்சா. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான். எஃப் .கென்னடி நாசாவை வைத்துக் கொண்டு நடத்திய நாடகம் தான் இந்த விண்வெளிப் பயணம். அதற்கான ஆதாரங்கள் இவை இவை என பட்டியலிடும் எதிர்ப்பாளர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

 

தமிழிஷில் வாக்களிக்க…

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers