
ஒவ்வொரு கவிதை
முடிவிலும்,
உன்னை இன்னும் அதிகமாய்
நேசிப்பதாய் உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல் எழுதத் துடிக்கிறேன்.

உன் உதடுகளை
என் உதடுகளால்
பிரதி எடுக்க
பிரியப்படுகிறேன்.
நீயோ
அதற்கு இன்னோர்
பிறவி எடுக்கச் சொல்கிறாய்

மறந்து போயிருந்த
ஒரு
இதயம் கொத்திய
பழைய பாடலை
இரவின் நிசப்தத்தில்
மெல்லிய சப்தத்தில் கேட்டேன்.
உன்
ஞாபகம் கொத்திக் கிளறுகிறது.

ஒவ்வொரு முறை
நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை
வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும்
ஓவியமாய் நான்.

பட்டென்று கட்டிக் கொள்ளும்
ஓர்
குழந்தையின்
குரங்கு பொம்மையாய்
நீ.
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கும்
கடைவீதியின்
கடைக்குட்டி குழந்தையாய்
நான்.

உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.

என் வீட்டுக் கண்ணாடி
உனக்கான
என்னைக் காட்டுகிறது.
உன் காதல் மட்டுமே
நான் என்ற
என்னைக் காட்டுகிறது.

முள்ளை முள்ளால் தான்
எடுக்க வேண்டும்.
என் காதலை
உன் காதலாலும்.

செலவழித்தால்
சேரும்,
சேர்த்து வைத்தால்
தொலைந்துபோகும்…
ஓர்
வியப்பின் விதை
காதல்.

நாம் இருவரும்
எதைப்பற்றித் தான் பேசவில்லை
மனதுக்குள்
பற்றிக் கொண்டிருந்த
காதலைத் தவிர..

கருவாட்டுக் கூடையில்
தலைவைத்துத்
தூங்கும் மீன்காரி போல,
உன்
நினைவுக் கூடைக்குள்
தலை வைத்துப் படுக்கவே
பிடித்திருக்கிறது
எனக்கு.

நீ
பேச மறுத்த
காலங்களில் தான்
என்
கவிதைகள் அதிகமாய்
பேசின.

ஆணி கிழித்த
காயத்தைத்
தேன் பூசி மறைப்பதாய்
இருக்கிறது
நீ
காதலை நிராகரித்து
நட்பை நீட்டும் போது.

ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.
0




Jayarathina Madharasan சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 1:36 மு.பகல்
//– ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது. –//
முதல்ல புரியல்ல லேட்டா தான் புரிஞ்சிச்சி..
சூபர்…
vijay சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 6:00 மு.பகல்
N I C E
senthil சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 3:01 பிற்பகல்
Enakkum Ithu Poal Oru anupavam Unndu Ungal kavithaigal ovvondrum En manathi Mounangalai Azhakai Varudi Sendrathu.
Valliammai சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 6:04 பிற்பகல்
Kavithaigal super o super ..
jayanppr சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 7:20 பிற்பகல்
நல்லாருக்கு.
Anbu சொன்னது,
செப்டம்பர் 4, 2009 இல் 7:31 பிற்பகல்
சூப்பர் அண்ணா…
M.Rams சொன்னது,
செப்டம்பர் 5, 2009 இல் 2:04 மு.பகல்
hi very nice
balasundaravinyagam சொன்னது,
செப்டம்பர் 5, 2009 இல் 2:45 மு.பகல்
இப்படியெல்லாம் மத்த பொண்ணுங்களை நினைத்துக்கொண்டிருந்தால், நான் எங்க அம்மா வீட்டுக்குப் போய்விடுவே.
நீங்க அந்த பாம்பேகாரியை (சே…அந்த மூஞ்சியைக் கண்டாலே பத்துகிட்டு வருது…கருவாட்டுக்க்கூடைசுமக்கிற கயுதைக்கு புருவம்வேற மழிப்பா..கண்றாவி) க்ட்டிக்கிட்டு மாரடிங்க…’
இப்படி கடிதம் எழுதிவைத்துவிட்டு திருமதி ஜேவியர் தன் பிறந்தகம் போய்விட்டார்.
"ஜெரி ஈசானந்தா"-மதுரை. சொன்னது,
செப்டம்பர் 6, 2009 இல் 4:07 மு.பகல்
கவிதை சாலை “காதல் வழிப்போக்கர்களால் நிரம்பி வழிகிறது.”
ஆனந்த் ராஜ் சொன்னது,
செப்டம்பர் 8, 2009 இல் 4:13 பிற்பகல்
விநாயகம் சார்.., இதெல்லாம் “நடந்து முடிந்த” கதை… மன்னிக்கணும் “கவிதை” ..! ஆனாலும் உங்களுக்கு ஏன் சேவியர் சார் மேல “பொறாமை”..?!
“விதியது வலியது”நு “மேடம் சேவியர்” அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறப்பே.. உங்களுக்கென்ன வந்தது..?!
சேவியர் ஜு.வி ல எழுதின இந்த வார கட்டுரை படித்தீர்களா ?.. பார்த்தால், நெட்”டை மேய தோணும் …!!!
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:46 பிற்பகல்
//சேவியர் ஜு.வி ல எழுதின இந்த வார கட்டுரை படித்தீர்களா ?.. பார்த்தால், நெட்”டை மேய தோணும் …!!!//
அடடா.. இதுல “உள்குத்து” ஒண்ணும் இல்லையே
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:48 பிற்பகல்
//கவிதை சாலை “காதல் வழிப்போக்கர்களால் நிரம்பி வழிகிறது.”//
மிக்க நன்றி ஜெரி
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:49 பிற்பகல்
வருகைக்கு நன்றி சிவா.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:54 பிற்பகல்
//சூப்பர் அண்ணா…//
நன்றி அன்பு – தம்பி
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:54 பிற்பகல்
//நல்லாருக்கு.//
நன்றி ஜயன்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:54 பிற்பகல்
//Kavithaigal super o super ..//
நன்றி வள்ளியம்மை
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:55 பிற்பகல்
//Enakkum Ithu Poal Oru anupavam Unndu Ungal kavithaigal ovvondrum En manathi Mounangalai Azhakai Varudi Sendrathu/
நன்றி செந்தில். அதுதானே கவிதையின் வெற்றி
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 8:57 பிற்பகல்
//N I C E//
நன்றி விஜய்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 9:00 பிற்பகல்
//முதல்ல புரியல்ல லேட்டா தான் புரிஞ்சிச்சி..
சூபர்…
//
நன்றி மாதரசன்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 10, 2009 இல் 9:03 பிற்பகல்
//இப்படியெல்லாம் மத்த பொண்ணுங்களை நினைத்துக்கொண்டிருந்தால்//
“மத்த” ??
சரவண் சொன்னது,
செப்டம்பர் 11, 2009 இல் 5:36 பிற்பகல்
அருமை..அட்டகாசம்.பிரமிப்பான வார்த்தைகள்.நல்ல கற்பனை வளம்
ஷாமா சொன்னது,
செப்டம்பர் 13, 2009 இல் 5:48 மு.பகல்
//ஒவ்வொரு முறை நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும் ஓவியமாய் நான்.//
//முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
என் காதலை உன் காதலாலும்.//
//ஒரு பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே பூவைப் பிடித்திருக்கிறது.//
அடடடா…. அருமை அருமை…. கவியரசே!…. (ஐய்யையோ… கோவிச்சுக்கப் போறாரு கண்ணதாசன்.)
அன்றொருநாள்…..(?) இதே கவிதையை மிஸ்டர் சேவியர், மிஸஸ் சேவியர்க்கிட்டேதான் சொல்லியிருப்பார் போலும்… விட்டடுங்க… பாவம் சேவியர்!
சேவியர், உங்கள் கவிதைகள் என்றும் போல் அருமை…. இதைத் தான் எப்போதும் சொல்ல வைக்கிறீங்க…
ம்..ம்..ம்.. வேறு என்ன சொல்ல!……. வாழ்த்துகள்!!
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 22, 2009 இல் 1:06 மு.பகல்
//அன்றொருநாள்…..(?) இதே கவிதையை மிஸ்டர் சேவியர், மிஸஸ் சேவியர்க்கிட்டேதான் சொல்லியிருப்பார் போலும்… விட்டடுங்க… பாவம் சேவியர்//
அது வேற கவிதை ஷாமா
//
சேவியர், உங்கள் கவிதைகள் என்றும் போல் அருமை…. இதைத் தான் எப்போதும் சொல்ல வைக்கிறீங்க…
ம்..ம்..ம்.. வேறு என்ன சொல்ல!……. வாழ்த்துகள்//
நன்றி ஷாமா… மனமார்ந்த நன்றிகள்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 22, 2009 இல் 1:08 மு.பகல்
நன்றி சரவண்.
ஹேமா சொன்னது,
அக்டோபர் 4, 2009 இல் 2:43 மு.பகல்
அண்ணா இவன் காதல் வழிப்போக்கன் இல்லை.காதல் கள்ளன்.காதலே அழகுதான்.அதற்கு ஒரு அசத்தல் கவிதை.
யாழ்_அகத்தியன் சொன்னது,
அக்டோபர் 9, 2009 இல் 7:14 மு.பகல்
உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.
கவிதை எல்லம் வழைமைபோல் அழகு இந்த கவிதையில் எழுத்து பிழை இருக்கிறது குருட்டுப் பிச்சைக்காரனின் என்று வர வேண்டும்
yarl சொன்னது,
அக்டோபர் 11, 2009 இல் 7:44 மு.பகல்
உங்கள் அழகான கவிதைகளை தவறாது வாசித்து வரும் வாசகன் நான்.
பலகோடி பாரட்டுக்கள்.
உங்கள் கவிதிகளை உங்கள் பெயரைக்குறிப்பிட்டு எனது இணையத்தில் வெளியிட விரும்புகிறேன்.
அனுமதி தறுவீர்களா?
http://www.tamil.com.nu
nvn.an@hotmail.com
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:10 பிற்பகல்
//உங்கள் அழகான கவிதைகளை தவறாது வாசித்து வரும் வாசகன் நான்.
பலகோடி பாரட்டுக்கள்.
உங்கள் கவிதிகளை உங்கள் பெயரைக்குறிப்பிட்டு எனது இணையத்தில் வெளியிட விரும்புகிறேன்.
அனுமதி தறுவீர்களா?
//
நிச்சயமாக நண்பரே…. நன்றிகள் !
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:15 பிற்பகல்
/கவிதை எல்லம் வழைமைபோல் அழகு இந்த கவிதையில் எழுத்து பிழை இருக்கிறது குருட்டுப் பிச்சைக்காரனின் என்று வர வேண்டும்/
நன்றி யாழ்… திருத்தியமைக்கும், கருத்துக்கும்.
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:21 பிற்பகல்
அண்ணா இவன் காதல் வழிப்போக்கன் இல்லை.காதல் கள்ளன்.காதலே அழகுதான்.அதற்கு ஒரு அசத்தல் கவிதை./
நன்றி ஹேமா…
magi சொன்னது,
அக்டோபர் 23, 2009 இல் 7:24 பிற்பகல்
super kavithai
A GOPAL ASEPTIC OPERATOR சொன்னது,
அக்டோபர் 23, 2009 இல் 7:26 பிற்பகல்
இது அசத்தல் கவிதை
சேவியர் சொன்னது,
அக்டோபர் 25, 2009 இல் 7:52 பிற்பகல்
நன்றி கோபால்
சேவியர் சொன்னது,
அக்டோபர் 25, 2009 இல் 7:52 பிற்பகல்
super kavithai/
நன்றி மகி.
MirthonMP சொன்னது,
நவம்பர் 2, 2009 இல் 11:14 பிற்பகல்
ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.
ungal pulamayai sothikka intha vaarthaikaley pothum!! superb!!
சேவியர் சொன்னது,
நவம்பர் 3, 2009 இல் 12:50 மு.பகல்
//ungal pulamayai sothikka intha vaarthaikaley pothum!! superb!!/
மனமார்ந்த நன்றிகள்
mubharak சொன்னது,
நவம்பர் 17, 2009 இல் 8:36 பிற்பகல்
your poet is very nice