ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.




மா.குருபரன் சொன்னது,
அக்டோபர் 14, 2009 இல் 6:29 பிற்பகல்
“உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று”
சுப்பர் நண்பரே..
kuttysamy சொன்னது,
அக்டோபர் 15, 2009 இல் 3:04 மு.பகல்
really nice…my best wishes.
விஜய் சொன்னது,
அக்டோபர் 15, 2009 இல் 5:12 மு.பகல்
மிக அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
rajkumar சொன்னது,
அக்டோபர் 15, 2009 இல் 7:32 பிற்பகல்
supper
ஷாமா சொன்னது,
அக்டோபர் 18, 2009 இல் 12:36 மு.பகல்
//எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.//
அடடா…
தனக்கே மட்டும் சொந்தமாகப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
மென்மையான உணர்வு!…. அழகாகக் கூறப்பட்டிருக்கிறது!…. பிரமாதம்!…
கவி தொடர வாழ்த்துகள்!….
ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி!…. நன்றி சேவியர்!
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:01 பிற்பகல்
//தனக்கே மட்டும் சொந்தமாகப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும்
மென்மையான உணர்வு!…. அழகாகக் கூறப்பட்டிருக்கிறது!…. பிரமாதம்!…
கவி தொடர வாழ்த்துகள்!….
ரொம்ப நாளைக்கப்புறம் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி!…. நன்றி சேவியர்!
//
நன்றி ஷாமா… உங்கள் அன்புக்கு…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:02 பிற்பகல்
நன்றி ராஜ்குமார்.
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:03 பிற்பகல்
//மிக அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
//
நன்றி விஜய்…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:06 பிற்பகல்
வருகைக்கு மட்டுமல்ல, வாழ்த்துக்கும் சேர்த்தே நன்றி குட்டி சாமி
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:09 பிற்பகல்
“உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று”
சுப்பர் நண்பரே
//
நன்றி குருபரன்.
K.SIVA(Fr) சொன்னது,
அக்டோபர் 27, 2009 இல் 7:10 மு.பகல்
Punakiyaith Thooddumanam Panthaada, Puthuvulaka AAthaamum Eévaalum,Punakaiyaaji Thooddunitham Panthaada,Enciyathoo Puuvulakaaji Maarivara, Pansumuga Thaanathiléé Koonsumoolii, Nithamnithamaaji Kanavukalaaji Ninraadaa, Vinsudumoo? Vééruvali Enraaka, Vééthanaiyaaji Virinthapéru Thaanulakil, Konsumooli Kuudippal Ninrumoolipésa, Anruavl Punakaijil Puukkooduththaal, Ninrunitham Kaathalénum Valaijil , Cikkividdaal Cénramanm Thirupaathukannaa, Aathalinaal Kaddiyanaithuvidu Kathalénumthiiyai, Anrudanéé Cenruvidum VéjilpaddaPaniyaaji. “”CENRU VIDUM “” ++K.SIVA++(Fr)