கவிதை : Take it ez … பி.டி பிரியா

வாசல் கடக்கையில்
எதேச்சையாய் மோதிய
வசீகர அழகிக்கு
“நன்றி” சொல்ல வாயெடுத்தேன்
சாரி
சொல்லி கடந்து போனாள்.

இயற்கை அழகு அபாரம் என்றேன் !tamanna_(11)
உற்றுப் பார்த்தது
ஸ்கூட்டி ஜீன்ஸையோ
என
அருகிருந்த மனைவி
சந்தேகப்பட்ட வினாடியில்.

மானே, தேனே எல்லாம்
பழசாகிப் போச்சு
ஆங்கிலக் கொஞ்சல்களைத் தான்
விரல் அலகுகளால்
கொத்தித் தின்கின்றன
எஸ் எம் எஸ் கிளிகள்

பி.டி பருத்தி
பி.டி பிரிஞ்சால் …
இது
மரபணு மாற்று யுகமாமே
விரைவில் வரவாளோ
சந்தியாவின் சிரிப்பையும்
காவ்யாவின் குணத்தையும் இணைத்த
பி.டி பிரியா ?

16 மறுமொழிகள்

  1. ஷாமா சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 10:31 பிற்பகல்

    //“நன்றி” சொல்ல வாயெடுத்தேன்
    சாரி சொல்லி கடந்து போனாள்.//
    கண்ணைக் கவரும் அழகு அந்த மங்கைக்கு இருந்த போதிலும், இருவரிடமும் உள்ள “நடைமுறை வேறுபாட்டை” அழகுடன்,
    “நன்றி” “சாரி” என்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் எனத்தான் எண்ணத் தோன்றுகிறது…..
    அற்புதம் சேவியர்!

    //விரைவில் வரவாளோ
    சந்தியாவின் சிரிப்பையும் காவ்யாவின் குணத்தையும் இணைத்த பி.டி பிரியா ?//
    கொஞ்சம் கஷ்டம் தான்!…. முயற்சி திருவினையாக்கும் என்கிறார்களே!… முயற்சி செய்து பார்க்க வேண்டியதுதான்! ;)

  2. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 23, 2009 இல் 1:05 மு.பகல்

    :D நன்றி ஷாமா.. முத்தான முதல் பின்னூட்டத்துக்கு :)

  3. ஹேமா சொன்னது,

    அக்டோபர் 23, 2009 இல் 2:50 மு.பகல்

    அண்ணா எப்பவும் போலவே உங்கள் கவிதைகள் அருமை.அபாரம்.எப்பவும் வந்தாலும் ரசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமலே போகிறேன்.

    இன்று உங்கள் வாழ்த்துக்கள் ஒரு புதுத் சந்தோஷத்தைத் தந்தது.அதைச் சொல்லவே ஓடி வந்தேன்.நன்றி அண்ணா.உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக் குளிகைபோல.

  4. kuttysamy சொன்னது,

    அக்டோபர் 23, 2009 இல் 7:01 பிற்பகல்

    பிரியாவை ரசித்தேன் …அருமை …வாழ்த்துக்கள்

  5. vijaygopalswami சொன்னது,

    அக்டோபர் 24, 2009 இல் 8:35 பிற்பகல்

    //விரைவில் வரவாளோ
    சந்தியாவின் சிரிப்பையும்
    காவ்யாவின் குணத்தையும் இணைத்த
    பி.டி பிரியா//

    சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன். சந்தியா, காவ்யா, ப்ரியா எல்லாரும் இவருக்கே வேணுமாம்? நாங்க மட்டும் தூரத்துல நின்னு வேடிக்க பாக்கனுமாம்? என்னக் கொடுமை சார் இது…

    மாயாண்டி… (எஸ் பாஸ்…) ஒரு ரூபா பி.சி.ஓ.லேந்து திருமதி சேவியருக்கு ஒரு போனப் போடு (ஓகே பாஸ்)

  6. Ravi kumar சொன்னது,

    அக்டோபர் 24, 2009 இல் 9:04 பிற்பகல்

    !!! Intha pennuthan adutha annudaiya padathin kadanayahi
    Thank you Xavi .

  7. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 7:49 பிற்பகல்

    நன்றி ரவி :)

  8. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 7:50 பிற்பகல்

    //சேவியரை வன்மையாகக் கண்டிக்கிறேன். சந்தியா, காவ்யா, ப்ரியா எல்லாரும் இவருக்கே வேணுமாம்? நாங்க மட்டும் தூரத்துல நின்னு வேடிக்க பாக்கனுமாம்? என்னக் கொடுமை சார் இது…

    //

    ஹலோ வி.கோ, மரபணு மாற்று பயிரையே எதிர்க்கிறவன் நான். இதில போயி…. ( மாயாண்டிக்கு இந்த மேட்டரை சொல்லிடுங்க… ;) )

  9. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 7:53 பிற்பகல்

    //பிரியாவை ரசித்தேன் …அருமை …வாழ்த்துக்கள்//

    நன்றி குட்டி சாமி :)

  10. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 7:54 பிற்பகல்

    அண்ணா எப்பவும் போலவே உங்கள் கவிதைகள் அருமை.அபாரம்.எப்பவும் வந்தாலும் ரசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமலே போகிறேன்//

    மிக்க நன்றி சகோதரி…

  11. விஜய் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 9:38 பிற்பகல்

    மிக அழகு

    வாழ்த்துக்கள்

    விஜய்

  12. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 26, 2009 இல் 1:18 மு.பகல்

    நன்றி விஜய்…

  13. Nanthini. சொன்னது,

    அக்டோபர் 27, 2009 இல் 10:03 பிற்பகல்

    Kaathalitha naatkalai
    Nenaithu parpatha illai
    Ennai kaathalipathai Vittuvidu
    Endru sounanthai
    Nenaipatha theriyavillai?……..

  14. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 1:04 மு.பகல்

    சூப்பர் நந்தினி !

  15. K.SIVA(Fr) சொன்னது,

    நவம்பர் 4, 2009 இல் 8:50 மு.பகல்

    Pidipitiyaa Matapanuvaal, Urumaaraa Oruvanuthaan, Aathalinaal Moothalikka Onrumila, VéthanaijEén Vidduvidu Kannaa, Aathalinaal Moothalilaa AvanivarungkanNaa. “AVANI VARUM KAN NAA ” ++K.SIVA++(Fr)

  16. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 12:03 மு.பகல்

    மிக்க நன்றி நண்பரே சிவா….


மறுமொழியொன்றை வழங்குக