கவிதை : பெத்த மனசு

Xavi.wordpress.com1

.

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

படிப்பும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’

நன்றி : கல்கி

3 மறுமொழிகள்

  1. கணையாழி சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 1:14 பிற்பகல்

    பெத்த மனசு!

  2. Tamilparks சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 6:20 பிற்பகல்

    கவிதைகள் மிகவும் அருமை, விரும்பினால் எமது வலைதளத்திற்கு படைப்புகள் அனுப்பினால் வெளியிட ஆவலாக உள்ளோம்..

  3. ஷாமா சொன்னது,

    நவம்பர் 19, 2009 இல் 7:09 மு.பகல்

    சிலநாட்களாக வருகைதந்து பின்னூட்டமிடத் தவறியமைக்கு மன்னிக்கவும்…. உங்கள் ஆரோக்கியமான பதிவுகளும் உங்கள் எண்ண ஓட்டங்களும் உங்கள் பதிவைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது…. சிலநாட்களின் பின் வருகை தந்த எனக்கு மகிழ்வுதரும் உங்கள் பதிவுகள் காத்திருந்தன, பைபிளில் காணப்படும் சரித்திரக் கதைகள் உட்பட…. நன்றி சேவியர்!

    பெத்த மனத்தின் பாசத்தை, அலட்டிக்காம…மன ஆழத்துக்கே சென்று நெகிழ வைத்தமைக்கு நன்றிகளும்! பாராட்டுகளும்! வாழ்த்துகளும்!
    சேவியர் நீங்கள் என்றும் நலமுடன் வளமுடன் வாழவேண்டும்!


மறுமொழியொன்றை வழங்குக