கவிதையில் கமல்…

கமல்…

( நடிகர்களைப் பற்றிக் கவிதையெழுதினால் கவிதையின் புனிதத்துவம் கெட்டுவிடும் என்று கருதாதவர்களுக்காக இந்தக் கவிதை….   )
 Kamal_Hassan

எல்லோரும்
நடிப்புச் சாளரங்களை
எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
நடிப்பு
இவன் வீட்டைத் தான்
எட்டிப் பார்த்து பிரமித்தது.

தாய் வயிற்றுக்குள்
நடிப்புப் பழகிய
ஒரே மனிதன்
இவனாய்த் தான் இருக்க வேண்டும்.

அதன் முன்னேற்றமே
முதல் அழுகையாய்
அரங்கேறியிருக்க வேண்டும்.

நடிப்பை
அணிந்து பார்க்க
எல்லோரும் ஆசைப்பட்டபோது
துணிந்து பார்க்க
ஆசைப்பட்டவன் இவன்.

அதனால் தான்
வீட்டுக் கண்ணாடியில்
இவனுக்கு மட்டும்
தினம் தினம் புது பிம்பம்.

தரையில் விழும்
நிழல் கூட
ஒரே மாதிரி இருந்ததாய்
வரலாறு இல்லையாம்.

இவன் வீட்டுக்
காவல் நாய் கூட
தினம் தோறும்
திணறிப் போவது வாடிக்கையாம்.

நெருப்பு என்றால்
வாய் வேகாது என்பர்
பொய்.
அழு என்றால்
அடுத்த வினாடி
கண்ணணை திறப்பவன் இவன்.

உரக்கப் பேசியே
பழகிய திரையுலகை
விழிகளால் பேசியே
விழ வைத்தவன் இவன்.

இவன்
ஐந்தில் வளைந்ததால்
ஐம்பதிலும் நிமிர்ந்து
நிற்பவன்.

மயிலே மயிலே
என்றால்
இவனுக்காய்
இறகு போடக் காத்திருக்கும்
இதயங்கள் ஏராளம்.

இவன் வாழ்வில்
அடிக்கும்
ஒவ்வோர் அலையும்
பூவையர் இதயங்களில்
புயல் சேதத்தை விளைவிக்கிறதாம்.

அரிதார இளைஞர்களுக்கு
அரிதாகவே கிடைக்கும்
அவதாரம் இவன்.

விருதுகள் இவன்
தலையிலமர்ந்து
கர்வப்பட்டன.
ஓட்டத்தில் எப்போதுமே
தோற்றுப் போகும்
ஆஸ்கர் மட்டும் அவமானப்பட்டது.

பிடித்திருந்தால் …வாக்களிக்கலாமே… நன்றி

9 மறுமொழிகள்

  1. ஹேமா சொன்னது,

    நவம்பர் 11, 2009 இல் 11:09 மு.பகல்

    அருமையாய் கமலின் நினவோடு நனைய வைதீர்கள் ஒரு நொடி.அண்ணா கவலைப்படத் தேவையில்லை.ஆஸ்கார் ஒருநேரம் கமலைப் பார்த்து அவமானப்படும் பாருங்கள்.

  2. SAMAD சொன்னது,

    நவம்பர் 11, 2009 இல் 11:33 பிற்பகல்

    SUPERB FOR KAMAL

  3. நவம்பர் 16, 2009 இல் 7:08 மு.பகல்

    nice

  4. uumm சொன்னது,

    நவம்பர் 16, 2009 இல் 8:13 பிற்பகல்

    nice.one day that award come to his hand.

  5. சேவியர் சொன்னது,

    நவம்பர் 17, 2009 இல் 3:03 மு.பகல்

    வருகைக்கு நன்றி உமா :)

  6. சேவியர் சொன்னது,

    நவம்பர் 17, 2009 இல் 3:04 மு.பகல்

    நன்றி யாழ் அகத்தியன்…

  7. சேவியர் சொன்னது,

    நவம்பர் 17, 2009 இல் 3:05 மு.பகல்

    //SUPERB FOR KAMAL//
    நன்றி நண்பரே

  8. சேவியர் சொன்னது,

    நவம்பர் 17, 2009 இல் 3:05 மு.பகல்

    நன்றி ஹேமா :)

  9. ஷாமா சொன்னது,

    நவம்பர் 19, 2009 இல் 7:24 மு.பகல்

    உவமானம், உவமேயம், கவித்துவம் நிறைந்தவை கவிதையாகலாம் .. “மனித நேயம்” அற்றவர்களைவிட எல்லோருமே உயர்ந்தவர்கள் என்பதால் நீங்கள் தாராளமாக எல்லோரையும் பற்றிக் கவிதை வடிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!…

    //நடிப்பு இவன் வீட்டைத் தான்
    எட்டிப் பார்த்து பிரமித்தது//

    //எல்லோரும் நடிப்புச் சாளரங்களை எட்டிப் பார்த்துத் திகைக்கையில்
    நடிப்பு இவன் வீட்டைத் தான் எட்டிப் பார்த்து பிரமித்தது.//

    //நெருப்பு என்றால் வாய் வேகாது என்பர்.
    பொய்.
    அழு என்றால் அடுத்த வினாடி கண்”அணை” திறப்பவன் இவன்.//

    //விழிகளால் பேசியே விழ வைத்தவன் இவன்//

    என்னே உண்மை வரிகள்!

    ஆஸ்கருக்கே ஆஸ்காரா?….
    அதனால் தானோ என்னவோ….
    சிகரத்தின் சிரம்தனில் ஏறியமர
    ஆஸ்காரால் முடியவில்லை போலும்!

    வளரட்டும் கவிப்பயணம்!…. வாழ்த்துகள்!!!!


மறுமொழியொன்றை வழங்குக