கவிதை : சிறு மோகச் சிந்தனை

அந்த தேவதை
மெல்ல மெல்ல கேசம் கலைய
மிதப்பது போல் நடந்து வந்தது
என்னை நோக்கி.

அவளுக்கும் எனக்கும்
இடையே இருந்த இடைவெளி
சொல்லாமல் கொள்ளாமல்
குறையத் துவங்கியது.

அந்த சின்ன உதடுகளை
இறுகப் பற்றி ஓர்
ஆனந்த முத்தம் அளிக்கலாமா ?.

அந்த
செம்பருத்திக் கரங்களைக் சேர்த்து,
விழிகளை விழிகளில் கோர்த்து
விடியும் வரையில்
விழித்துக் கிடக்கலாமா ?

இதயத் துடிப்பின் வேகம் நிற்க
இருகைகளால் அவளை எடுத்து
இதயம் இடிக்கும் தூரத்தில்
இணைத்துக் கொள்ளலாமா ?

கூந்தல் இடையில்
விரல் கவிதை வரையலாமா ?
கன்னங்களின் கதகதப்பில்
சிறு கவிதை படிக்கலாமா ?

சிறு மோகச் சிந்தனைகள்
சிறுகச் சிறுக வலுத்த நேரம்,
என்னை நெருங்கி.
என்னைக் கடந்து நடந்து போய்விட்டாள்..

ம்ம்ம்.
அவளுக்கென்ன தெரியும்
என் மனசு அவளுக்காய் எழுதி
கலைத்துப் போட்ட மணல் கவிதை பற்றி.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

7 மறுமொழிகள்

  1. kamalesh சொன்னது,

    பெப்ரவரி 17, 2010 இல் 6:01 மு.பகல்

    நல்லா இருக்குங்க…

  2. ஷாமா சொன்னது,

    பெப்ரவரி 23, 2010 இல் 11:42 மு.பகல்

    //ம்ம்ம்.
    அவளுக்கென்ன தெரியும்
    என் மனசு அவளுக்காய் எழுதி கலைத்துப் போட்ட மணல் கவிதை பற்றி.//

    எழுதிக் கலைத்துப் போட்டாலும் “அழியாத கோலங்களாய்” மனதில்!

  3. shangaran சொன்னது,

    April 4, 2010 இல் 1:45 மு.பகல்

    yet another good one. :)

    கூந்தல் இடையில்
    விரல் கவிதை வரையலாமா ?
    கன்னங்களின் கதகதப்பில்
    சிறு கவிதை படிக்கலாமா ?

  4. சேவியர் சொன்னது,

    April 21, 2010 இல் 1:27 மு.பகல்

    மிக்க நன்றி ஷங்கரன்…

  5. மணிவண்ணன் சொன்னது,

    மே 14, 2010 இல் 9:49 மு.பகல்

    நல்ல கவிதை.

  6. shiva சொன்னது,

    ஜூன் 24, 2010 இல் 8:49 பிற்பகல்

    romba super

  7. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 1:34 மு.பகல்

    //romba super//

    நன்றி ஷிவா…


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers